- Advertisement -
மந்திரம்

தங்கத்தை சேர்க்க நினைக்கும் பெண்கள் இந்த மந்திரத்தை சொன்னாலே போதும், தங்கம் வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கக் கூட தேவையில்லை தானாகவே தங்கம் வாங்கும் யோகம் உங்களைத் தேடி வரும்.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் தங்கமும் பணத்தை போல தான் சிறியவர் பெரியவர் ஆண்கள் பெண்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் தங்கத்தை வாங்கி குவிக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார்கள். இந்த ஆசை பெரும் வசதி படைத்தவர்கள் கூட மேலும் மேலும் தங்கத்தை பெருக்க வேண்டும் என்று நினைக்க தான் செய்கிறார்கள். அப்படி இருக்கையில் சாதாரண நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் சேர்க்க வேண்டும் என்று நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை தானே. அப்படி தங்கம் மேலும் மேலும் நமக்கு பெருகிக் கொண்டே செல்ல வேண்டுமெனில், இந்த ஒரு வழிமுறையை பின்பற்றலாம் என்று ஆன்மீகம் நமக்கு சொல்லி இருக்கிறது. அது என்னவென்று நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் தங்க நகை அதிகமாக சேர
வீட்டில் தங்கம் பெருக வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. தங்கத்தை நாம் மதிப்புடன் பாதுகாத்து வைக்க வேண்டும். தங்க நகையும் கவரிங் நகையும் எப்போதும் ஒன்றாக வைக்க கூடாது. அதே போல் நாம் அணியும் நகைகளை ஆங்காங்கே கழற்றி வைக்கவும் கூடாது. அது மட்டும் இன்றி வெள்ளி, செவ்வாய் போன்ற நாட்களில் நாம் வீட்டில் எப்போதும் அணிந்திருக்கும் நகைகளை கழட்டவே கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.

- Advertisement -

அதே போல் தங்கம் வாங்க வேண்டும் என்று சேமிக்கும் தொகையில் நாம் தங்கத்தை மட்டும் தான் வாங்க வேண்டும். அதை தவிர்த்து வேறு பொருளை வாங்க கூடாது என்றும் சொல்லப்படுகிறது. தங்கம் நம்மிடம் சேர்வதற்கு பெரிய யோகம் வேண்டும் அப்படியான யோகத்தை தடுத்து விடுவது போன்ற எந்த ஒரு காரியத்தையும் நாம் செய்யாமல் இருப்பது சிறந்தது.

நாம் அணிந்திருக்கும் நகைகளை பிறருக்கு தருவதை முடிந்த வரையில் தவிர்த்து விடுவது நல்லது. ஒரு வேளை அப்படி நகைகளை மாற்றி அணிந்து கொள்ளும் சூழ்நிலையோ அல்லது தர வேண்டிய சூழ்நிலையோ வந்தாலும் உப்பு தண்ணீரில் நகையை அலசிய பிறகு தான் தர வேண்டும். நாம் போடுவதாக இருந்தாலும் இவ்வாறு செய்த பிறகு தான் போட வேண்டும். இதையெல்லாம் சரிவர செய்தாலே தங்கம் நம்மிடம் நிலைத்திருக்கும். நம்மிடம் இருக்கும் லட்சுமி கடாட்ஷமும் நம்மை விட்டு நீங்காமல் இருக்கும்.

- Advertisement -

இத்துடன் நீங்கள் எப்பொழுது நகை வாங்க செல்வதாக இருந்தாலும் ஒரு சிறிய மூக்குத்தியாக இருந்தாலும் கூட அதை வாங்க செல்லும் நாள் புதன்கிழமையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். புதன்கிழமை என்றதும் அந்த நாள் கரிநாளாகவோ அல்லது அன்றைய நாளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருந்தாலும் நகை வாங்கக் கூடாது. புதன்கிழமை நகை வாங்க உகந்த நாள் தான். ஆனால் அந்த நாளில் அசுப திதிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.இவையெல்லாம் செய்த பிறகு தங்கம் வாங்க செல்வதற்கு முன்பாக இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்த பிறகு நகை வாங்க செல்ல வேண்டும்.

ஓம் தங்க கணபதி வசிய வசிய நமஹ
இந்த மந்திரத்தை சொன்ன பிறகு நீங்கள் வாங்கும் ஒரு குண்டு மணி தங்கம் கூட பல சவரன் நகையாக உங்களிடம் பெறுவதற்கான வாய்ப்பைத் தேடித் தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தங்கம் வாங்க செல்லும் நாள், இந்த மந்திர சொல்லும் நேரம் நீங்கள் நகை வாங்கும் நேரம் எல்லாமே அன்றைய நாளில் நல்ல நேரமாக பார்த்து செய்து கொள்ளுங்கள். இதை ராகு காலம் எமகண்டம் நேரத்தில் இதை சொல்ல கூடாது.

இதையும் படிக்கலாமே: குலதெய்வத்தை வேண்டி கோவில் குளத்தில் இந்த பொருளை போட்டால் போதும், மலை போல் வந்த பிரச்சனைகள் கூட பனி போல உருகி ஓடி விடும். வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகள், மன குழப்பங்கள், கவலை தீர எளிய பரிகாரம்.

எந்த பொருளையும் நாம் பத்திரமாக பராமரித்து அதற்கான முக்கியத்துவத்தை கொடுக்கும் போது தான் அந்த பொருள் நம்முடன் நிலைத்து நிற்கும். அதே போல் தான் தங்கத்தையும் நீங்கள் பாதுகாத்து அதற்கான முக்கியத்துவத்தை தர ஆரம்பித்தாலே அது உங்களிடம் சேர ஆரம்பிக்கும். அத்துடன் இந்த ஒரு மந்திரத்தையும் நீங்கள் ஜெபித்து பாருங்கள் தங்கம் வாங்கும் யோகம் தானாக உங்களைத் தேடி வரும்.

- Advertisement -