- Advertisement -

தங்க நகைகள் என்றும் நிலையாக நிலைத்திருக்கவும், அடமானக் கடைக்கு செல்லாமல் இருக்கவும், இந்த எளிய பொருட்களை வைத்து பரிகாரம் செய்து பாருங்கள்.

- Advertisement -

எவ்வளவு நகைகள் வைத்திருந்தாலும் புதிது புதிதாக நகைகளை வாங்கி அணிய வேண்டும் என்று பெண்கள் ஆசைப்படுவார்கள். இது வசதியானவர்களுக்கு மட்டும் பொருந்தாது. கூலித்தொழில் செய்பவர்கள் கூட ஒரு குண்டுமணி தங்கமாவது சொந்தமாக வாங்கி விட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஏழைகளும், பணக்காரர்களும் பாரபட்சம் இன்றி வாங்கும் பொருளாக இந்த தங்கம் இருக்கின்றது.

அப்படி வாங்கப்படும் தங்கம் என்றும் தங்களுடன் நிலையாக நிலைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தான் அனைவரும் வாங்குவார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் வாங்கிய நகை நம்மை விட்டு விலகாமல் என்றும் நிலையாக நிலைத்திருக்க என்ன பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் போட்டு அழகு பார்க்கக்கூடிய ஒரே பொருளாக தங்கம் விளங்குகிறது. இதற்கு ஆண், பெண் என்ற வேறுபாடும் கிடையாது. ஏதாவது ஒரு ரூபத்தில் அனைவரும் தங்கத்தை விரும்புவார்கள். அவ்வாறு நாம் தங்கம் வாங்கும் பொழுது தங்கத்தின் தன்மையை கடையில் கேட்டு தெரிந்து கொண்டாலும், அந்த தங்கம் தயாரான இடம் எப்படிப்பட்ட இடம் என்று நமக்கு தெரியாது. யாருடைய நகை தங்கமாக மாறி நாம் விரும்பும் நகையாக மாறியது என்பது நமக்கு தெரியாது.

மன மகிழ்ச்சியுடன் ஒருவர் நகையை விற்கிறார் என்றால், அதில் எந்த தோஷமும் இருக்காது. ஆனால் சந்தர்ப்பத்தால் ஏதோ ஒரு சூழ்நிலையில் மனவருத்தப்பட்டு நகையை விற்றார்கள் என்றால் அந்த நகையில் தோஷம் ஏற்படும். அந்த நகையை புதிய நகையாக உருக்கி மாற்றினாலும் அதில் இருக்கும் தோஷம் மாறாது.

- Advertisement -

இவ்வாறு தோஷம் உடைய நகையை நாம் நம் வீட்டிற்கு வாங்கி வந்தோம் என்றால் அந்த நகையுடன் தோஷமும் நமக்கு வந்துவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நாம் வாங்கி வந்த நகைகள் நம்மிடம் தங்காமல் அது அடமானத்திற்கோ அல்லது விற்பனைக்கு ஏதோ ஒரு ரூபத்தில் நம்மை விட்டு விலகிவிடும். மேலும் நாம் புதிதாக வாங்கிய நகையை அல்லது வீட்டில் இருக்கும் நகையை ஏதோ ஒரு சூழ்நிலையில் அடமான கடையில் வைத்து விட்டோம் என்றாலும் நகைக்கு தோஷம் ஏற்பட்டு விடும். இப்படி நகையில் தோஷம் ஏற்பட்டால் நம்மிடம் நகை தங்காது. மேலும் புதிதாக எந்த நகையும் வாங்க இயலாது.

இந்த நிலையை மாற்றுவதற்கு நாம் புதிதாக நகை வாங்கினாலும் அல்லது அடமானக் கடையில் இருந்து மீட்டெடுத்து வந்தாலும் இவை அனைத்தும் இல்லாமல் நம் வீட்டில் இருக்கும் நகையாக இருந்தாலும் இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் அந்த நகையில் இருக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். நகை என்றும் நம்மிடம் நிலைத்து இருக்கும். மேலும் நகைகளின் சேர்க்கை ஏற்படும்.

- Advertisement -

ஒரு செம்பு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான பசும் பாலை சிறிதளவு ஊற்ற வேண்டும். அதனுடன் சுத்தமான பன்னீரை சேர்க்க வேண்டும். பிறகு அதில் செவ்வரளி பூக்கள் இரண்டை போட வேண்டும். 4 குப்பைமேனி இலைகளை அதில் போட வேண்டும். பிறகு அதனுடன் துளசி இலைகள் மூன்று நான்கை போட்டு நன்றாக பிசைந்து விட வேண்டும். இப்பொழுது இந்த பரிசுத்தமான பாலில் நம்முடைய நகையை போட்டு ஐந்து நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு அதை சுத்தம் செய்து துணியில் துடைத்து நம் பீரோவில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: நாளை ஆடி கடைசி ஞாயிறு! துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று இந்த 1 வரி மந்திரத்தை சொன்னால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் தீராத கஷ்டமும், துன்பமும், துயரமும் வெளியே துரத்தி அடிக்கப்படும்.

இவ்வாறு நாம் செய்வதால் நம் நகையில் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் விலகுவதுடன், நமக்கு நகையின் சேர்க்கையும் அதிகரிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -