
இன்றைய தினம், வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பிரதோஷம். இது புரட்டாசி மாதம் என்பதால் இந்த பிரதோஷத்திற்கு இரட்டிப்பு சிறப்பு. ஆகவே இந்த நாளில் சிவன் வழிபாட்டை கட்டாயம் அனைவரும் மேற்கொள்ள வேண்டும். திடீர் பணவரவு, திடீர் அதிர்ஷ்டம், திடீர் முன்னேற்றம், எதிர்பாராத நல்லது, வேண்டும் என்றால் இன்றைய தினம் செய்ய வேண்டிய சிவன் வழிபாடு, நந்தி தேவர் வழிபாடை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சிலை எளிய தகவல்களைத்தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இன்று மாலை சுத்த பத்தமாக ஒருமுறை குளித்துவிட்டு, 4:30 மணி அளவில் சிவன் கோவிலுக்கு சென்று விடுங்கள். கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். வேறு வழி கிடையாது கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் வழிபாட்டை கொஞ்சம் ஜாக்கிரதையாக செய்வது சிறப்பு. கோவிலுக்கு செல்லும்போது செவ்வரளி பூ, அருகம்புல், வில்வ இலை இந்த மூன்று பொருட்களை கட்டாயமாக வாங்கிக் கொள்ள வேண்டும்.
சிவன் கோவிலுக்குள் நுழைந்தவுடன் அருகம்புல்லை நந்தி தேவரிடம் வைத்து விடுங்கள். நந்தி தேவர் பாதத்தில் வைத்தாலும் சரி, நந்திதேவர் மேலே வைத்தாலும் சரி, எந்த இடத்தில் இடம் கிடைக்கிறதோ நந்தி தேவர் பக்கத்தில் அருகம்புல்லை வைத்துவிட்டு ஈசனை சந்திக்க அனுமதி வாங்கிக்கொண்டு, சிவபெருமானை தரிசனம் செய்ய கோவிலுக்குள் நுழையுங்கள்.
சிவபெருமானுக்கு வில்வ இலையையும், செவ்வரளி பூவையும் கொடுத்து குடும்ப உறுப்பினர்களின் பெயரைச்சொல்லி, அர்ச்சனை செய்து கொண்டு, மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் பிரதோஷ காலகட்டத்திற்குள் நடந்தால் சிறப்பு. முடியவில்லை என்னும் பட்சத்தில் 6 மணிக்கு மேலாக கோவிலில் கொஞ்சம் கூட்டம் குறைந்த உடன் இந்த வழிபாட்டை மேற்கொண்டாலும் ஒன்றும் தவறு கிடையாது. நிச்சயம் முழு பலன் உங்களை வந்து சேரும். நேரம் காலத்தை விட நம்பிக்கைதான் ரொம்ப ரொம்ப முக்கியம்.
நந்தி தேவருக்கு பாதங்களில் நிறைய அருகம்புல் கட்டுகள் இருக்கும். அதிலிருந்து சிறிதளவு அருகம்புல்லை மட்டும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். வீடு திரும்பியதும் அந்த அருகம்புல்லை கையில் வைத்து, மனம் உருக வேண்டி என்னுடைய பண கஷ்டம் தீர வேண்டும், கடன் சுமை இருக்கக் கூடாது, என்று சொல்லி அந்த அருகம்புல்லை கல்லா பட்டியில் வையுங்கள். உங்கள் வீட்டு பீரோவில் எங்கு பணம் நகை சொத்து பத்திரம் எல்லாம் வைத்திருக்கிறீர்களோ அந்த இடத்தில் இந்த அருகம்புல்லை கொஞ்சம் வைத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: புரட்டாசி முதல் சனிக்கிழமை மாவிளக்கு தீப வழிபாடு
இன்றைய தினம் நந்தி தேவர் பாதத்தில் இருந்து எடுத்த அருகம்புல் உங்கள் வீட்டு பணப்பெட்டிற்குள் வந்தால் அந்த ஒவ்வொரு அருகம்புல்லும் ஒவ்வொரு சொத்தாக மாறும். நிச்சயமாக எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும் என்பது நம்பிக்கை. “ஓம் சிவ சிவ ஓம்! ஓம் சிவ சிவ ஓம் !” என்ற மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள். சிவபெருமானின் ஆசியால் எல்லாம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.