- Advertisement -

இந்த வகையான எலுமிச்சையை கொண்டு இதை செய்தால், 9 நாட்களுக்கு அந்த எலுமிச்சை பலவகையான சக்திகளை ஈர்த்து நமக்கான பல வித நன்மைகளை செய்யும் தெரியுமா.

- Advertisement -

பொதுவாகவே ராஜகனியாகிய எலுமிச்சை பழத்திற்கு ஏராளமான ஆன்மீக சக்திகள் உண்டு. இறைவனின் திரி சூலம் முதல் சாதாரண மனிதர்களின் பூஜை அரை வரை இந்த எலுமிச்சையை நாம் பார்க்க முடியும். எல்லா எலுமிச்சைக்கு பொதுவாக சில சக்திகள் உண்டு என்றாலும் சில வகை எலுமிச்சைகளுக்கு மட்டும் சில அதீத ஆற்றல் உண்டு. அந்த வகையை எலுமிச்சையை நாம் பூஜைக்கு பயன்படுத்துவதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் நிச்சயம் கிடைக்கும். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

பொதுவாக நாம் கடைகளுக்கு சென்று எலுமிச்சை பழத்தை வாங்கும் பொழுது, பழத்தில் கருப்பு புள்ளிகள் இல்லாதவாறு வாங்குவது வழக்கம். ஆனால் இதற்கும் மேலாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் யாதெனில், எலுமிச்சையில் நரம்பு தெரிகிறதா என்று பார்ப்பது தான். ருத்ராச்சதை போல எலுமிச்சை பழங்கள் சிலவற்றில் நரம்புகள் வெளிப்படையாக தெரியும்.

- Advertisement -

நரம்புள்ள எலுமிச்சை பழங்களுக்கு மும்மடங்கு ஆற்றல் அதிகம். ஆனால் இந்த பழங்கள் அவ்வளவு எளிதில் கிடைக்காது. 100ல் ஒரு எலுமிச்சை பழம் தான் இப்படி இருக்கும். சாதாரணமாக ஒரு எலுமிச்சை 9 நாட்கள் தனக்குள் ஆன்மீக ஆற்றலை ஈர்த்து வைத்துக்கொள்ளும் என்றால், நரம்புள்ள எலுமிச்சை 30 நாட்கள் வரை அந்த ஆற்றலை தனக்குள் வைத்திருக்கும்.

நாம் ஒரு காரியத்தை செய்ய துவங்கும் முன்பு, அது வெற்றி அடைய இறைவனை பிராத்திப்பதுண்டு. அது போன்ற சமயத்தில் இந்த நரம்புள்ள எலுமிச்சையை இறைவன் முன்பு வைத்து, நமது இஷ்ட தெய்வத்தை வேண்டி, 108 முறை இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரிக்க வேண்டும். அப்படி உச்சரிக்கும்போது எலுமிச்சை பழத்திற்கு 108 முறை குங்குமத்தாலோ, திருநீராலோ அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

உதாரணமாக, உங்கள் இஷ்ட தெய்வம் அங்காளம்மன் என்றால், “ஓம் அங்காளம்மா போற்றி” என்று கூறிவிட்டு எலுமிச்சை மீது குங்குமத்தை போட வேண்டும். இப்படியாக 108 முறை செய்த பின் உங்கள் வேண்டுதலை வாய் விட்டு கூற வேண்டும். அதன் பிறகு அந்த எலுமிச்சை சில நாட்களுக்கு உங்களிடமே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால், உங்களுடைய கல்லா பெட்டியில் அந்த எலுமிச்சையை வைத்து, நல்ல லாபம் வர வேண்டும் என்று வேண்டலாம். நீங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவராக இருந்தால், உங்கள் மேஜை மீதோ அல்லது மேஜை ட்ராயனினுள்ளோ அந்த எலுமிச்சையை வைத்துக்கொள்ளலாம். இந்த எலுமிச்சைக்கு 30 நாட்கள் வரை சக்தி இருக்கும். அது அந்த 30 நாட்கள் தனது சக்தியை வெளிப்படுத்தி உங்களுக்கு நிச்சயம் பலன் தரும்.

30 நாட்களுக்கு பிறகு, அந்த எலுமிச்சையை ஆற்றிலோ கடலிலோ விட்டுவிட்டு மீண்டும் ஒரு புதிய நரம்புள்ள எலுமிச்சையை வாங்கிக்கொள்ளலாம். எலுமிச்சையில் எத்தனை நரம்புகள் உள்ளதோ அதற்க்கு ஏற்றார் போல அதன் சக்தியும் இருக்கும். சில எலுமிச்சைகளில் 8 நரம்புகள் வரை கூட இருக்கும். அது போன்ற எலுமிச்சை கிடைத்தால் தவறாமல் வாங்கி பூஜை செய்து அளப்பரிய பயன்களை பெறுங்கள்.

- Advertisement -