- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

இயற்கையான ஹேர் டை தயாரிக்கும் முறை

நரைமுடி பிரச்சனை என்பது அனைத்து தரப்பினராலும் பரவலாக பேசப்படுகின்ற முடி சார்ந்த பிரச்சனையாக திகழ்கிறது. இந்த நரைமுடியை வெளியில் தெரியாமல் மறைப்பதற்காக பல வழிகளை பலரும் மேற்கொள்கிறார்கள். இப்படி மேற்கொள்ளும் பொழுது இயற்கையான வழிகளை பின்பற்றுவதே சிறந்தது என்று கூறப்படுகிறது. எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் இயற்கையான முறையில் செய்யக்கூடிய ஹேர் டை நாம் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு உடனே பலன் தராமல் சற்றே காலதாமதம் ஆகவே பலனை தரக்கூடியதாக திகழ்கிறது. ஆனால் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் இந்த ஹேர் டையை உபயோகப்படுத்தும் பொழுது உடனடி பலனை தருவதோடு மட்டுமல்லாமல் நீண்ட நாட்களுக்கு இந்த கருமையை பாதுகாக்க முடியும்.

கெமிக்கல் நிறைந்த ஹேர் டை நாம் பயன்படுத்தினாலும் மாதத்திற்கு ஒரு முறை ஹேர் டை நம்முடைய தலையில் நாம் தடவ வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதே போல் இயற்கையாக தயாரிக்க கூடிய பல வகைகளில் இருக்கக்கூடிய ஹேர்டை நாம் பயன்படுத்தும் பொழுது முதல் முறை நாம் பயன்படுத்தினாலே நம்முடைய முடி கருமையாகாது படிப்படியாக நாம் உபயோகப்படுத்த உபயோகப்படுத்த தான் கருமையாக மாறும். அதோடு மட்டுமல்லாமல் அதையும் நாம் தொடர்ச்சியாக மாதத்திற்கு ஒரு முறை என்ற வீதம் பயன்படுத்திக்கொண்டே வரவேண்டும். இந்த சூழ்நிலைகளை மாற்றி ஒருமுறை பயன்படுத்தினாலே கருமை நிறத்தை தரக்கூடியதாகவும் அதே சமயம் நீண்ட நாட்கள் அந்த கருமை தாக்கு பிடிக்கக் கூடியதாகவும் இருக்கக்கூடிய ஒரு ஹேர்டை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த ஹேர் டையை தயார் செய்வதற்கு முதலில் நமக்கு பீட்ரூட் தேவை. பெரிய அளவிலான பீட்ரூட்டாக இருந்தால் பாதி பீட்ரூட்டை எடுத்துக் கொள்வோம். சிறிய பீட்ரூட் ஆக இருந்தால் ஒரு பீட்ரூட்டை முழுமையாக சேர்த்துக் கொள்ளலாம். அதன் தோலை நீக்கி பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதோடு இரண்டு இனுக்கு கருவேப்பிலையையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பீட்ரூட் விழுதில் இருந்து சாரை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக நமக்கு ஒரு கைப்பிடி அளவு ஒத்த செம்பருத்தி இலை தேவைப்படும். இந்த இலையை சுத்தம் செய்து அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு காபி தூளையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த இலையை அரைப்பதற்கு மட்டும் குறைந்த அளவில் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு இரும்பு கடாயை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு மருதாணி பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்து வைத்திருக்கும் பீட்ரூட் சாறு சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொள்ளுங்கள். பிறகு அரைத்து வைத்திருக்கும் செம்பருத்தி இலையையும் அதனுடன் சேர்த்து நன்றாக கலந்து மீதம் இருக்கும் பீட்ரூட் சாறை வைத்து மிக்ஸி ஜாரை கழுவி அதில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த விழுதை 12 மணி நேரம் இரும்பு கடாயில் அப்படியே காற்று புகாத அளவிற்கு மூடி போட்டு மூடி வைத்துவிட வேண்டும்.

12 மணி நேரம் கழித்து ஹேர் டை தயாராகிவிடும். இந்த ஹேர் டை நம்முடைய தலையின் வேர்க்கால்களில் நன்றாக தடவி ஒரு மணி நேரம் வைத்திருந்து பிறகு சாதாரண தண்ணீரில் ஷாம்பு போடாமல் குளித்து விட வேண்டும். முக்கிய குறிப்பு இந்த ஹேர்டையை பயன்படுத்தும் போது நம்முடைய தலையில் எண்ணெய் பசை இருக்கக் கூடாது.

- Advertisement -

இந்த ஹேர்டையை பயன்படுத்தும் பொழுது கைகளை பயன்படுத்தாமல் ஹேர் டைப்பிரஸை பயன்படுத்துவது மிகவும் சிறப்பு. அப்படி பிரஸ் இல்லை என்பவர்கள் கையில் பிளாஸ்டிக் கவரையோ அல்லது க்லௌசை போட்டு இந்த ஹேர் டை தலையில் தடவலாம். நெற்றி முகங்களில் இந்த ஹேர் டை படும்பொழுது உடனடியாக அதை துடைத்து விட வேண்டும். இல்லை எனில் அந்த இடங்களில் கருமை நிறம் அப்படியே ஒட்டிக் கொள்ளும்.

இதையும் படிக்கலாமே: இளநரையை போக்க எளிமையான டிப்ஸ்

இயற்கையிலேயே மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தி ஒரு முறையாவது ஹேர் டை தயார் செய்து உபயோகப்படுத்தி பாருங்கள். மறுபடியும் திரும்பத் திரும்ப இதையே செய்வீர்கள்.

- Advertisement -