- Advertisement -
- Advertisement -

இயற்கையான முறையில் நம் சருமத்தை பராமரிக்கும் பொழுது அதன் முழு பலனும் நீண்ட நாட்களுக்கு அனுபவிக்க முடியும். எவ்வளவுதான் விலை உயர்ந்த பொருட்களை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தினாலும், அதன் பக்க விளைவுகளையும் சேர்த்து தான் அனுபவிக்க வேண்டும். முகம் ஹீரோயின் போல அழகாக இருக்க, நைட் கிரீம் பயன்படுத்துவது பேஷன் ஆகிவிட்டது. தினமும் இரவு தூங்க செல்லும் முன் இதை தடவினால் முகம் காலையில் பிரகாசமாக ஜொலிக்கும். இதையே இயற்கையான முறையில் எப்படி தயார் செய்வது? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பகுதியின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கடைகளில் செயற்கையான நைட் கிரீம்கள் வாங்கி பயன்படுத்தும் பொழுது, அது எல்லா விதமான சருமத்திற்கும் பொருந்துவது கிடையாது. சிலருடைய சருமத்திற்கு பக்க விளைவுகளை உண்டு பண்ண கூடியது. சென்சிடிவ் ஸ்கின், ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு பொதுவாக எல்லா விதமான காஸ்மெட்டிக்ஸ் பொருட்களும் பொருந்துவது இல்லை. எனவே இவர்கள் இயற்கையான நைட் கிரீம் தயாரித்து பயன்படுத்தினால் வியத்தகு ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -

நைட் கிரீம் தயாரிப்பது ரொம்பவே எளிதானது. நம் வீட்டில் சாதாரணமாக கிடைக்கக் கூடிய இந்த இரண்டு பொருட்களை பயன்படுத்தி நைட் கிரீம் தயார் செய்து வைத்துக் கொண்டால், 30 நாட்களில் நீங்களும் பேரழகி ஆகலாம். அதற்கு முதலில் வீட்டில் இருக்கும் அதிக சதைப்பற்றுள்ள கற்றாழை மடல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். மடலை பிரித்து கிடைக்கக் கூடிய ஜெல் பகுதியை நன்கு ஆறு முதல் ஏழு முறை அலசிவிட்டு சுத்தம் செய்த பின்பு மிக்ஸியில் சேர்த்து நைசாக ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.

பத்து ஸ்பூன் இந்த கற்றாழை ஜெல்லை நீங்கள் எடுத்துக் கொண்டால் அதனுடன் நாலு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் சேர்க்க வேண்டும். தேன் சேர்த்த பின்பு நன்கு கிரீம் போல பத்து நிமிடத்திற்கு கலந்து அடித்து பீட் செய்து கொள்ளுங்கள். பிறகு அதை ஒரு சுத்தமான ஈரம் இல்லாத கண்ணாடி பாட்டிலில் அடையுங்கள். இதை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்தலாம். மீண்டும் பிறகு புதியதாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த க்ரீமை நீங்கள் தினமும் இரவு தூங்கப் போகும் முன்பு முகத்தை சுத்தமாக ஃபேஸ் வாஷ் அல்லது கடலை மாவு கொண்டு கழுவிய பின்பு ஈரப்பதம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த கிரீமை மென்மையாக பத்து நிமிடம் மசாஜ் செய்து பின் உலர விடுங்கள். நன்கு உலர்ந்து பேப்பர் போல காய்ந்து இறுகிவிடும். அதன் பிறகு நீங்கள் தூங்க சொல்லுங்கள். காலையில் எழுந்ததும் முகத்தை சாதாரண தண்ணீரில் அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக கழுவி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
பளிச்பளிச் பாத்ரூம் டிப்ஸ்

தொடர்ந்து 30 நாட்கள் இது போல் செய்து வர 31 வது நாள் உங்களுடைய சருமமும் ஆரோக்கியமாக ஹீரோயின் போல அழகாக ஜொலிப்பதை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். கற்றாழை மற்றும் தேன் சருமத்தின் ஆழம் வரை சென்று ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. பாக்டீரியா தொற்றுகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. இதனால் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும். இயற்கையான முறையிலே உங்களுடைய சருமத்தை ஆரோக்கியமாக எப்போதும் வைத்திருக்க, இந்த டிப்ஸ் ரொம்பவே உபயோகமாக இருக்கும்.

- Advertisement -