- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்பளிச்பளிச் பாத்ரூம் டிப்ஸ்

பளிச்பளிச் பாத்ரூம் டிப்ஸ்

- Advertisement -

நம் வீட்டில் பாத்ரூம் மற்றும் டாய்லெட் தான் அதிக கிருமிகள் உலாவ கூடிய இடமாக இருக்கும். எனவே இந்த இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது அவசியம் ஆகிறது. எப்பொழுதும் செயற்கை ரசாயன கலவைகளை பயன்படுத்தி பாத்ரூமில் சுத்தம் செய்வதை காட்டிலும், அவ்வபொழுது இது போல இயற்கையான வழிமுறைகளையும் கையாண்டு பாருங்கள், உடலுக்கும் நல்லது பாத்ரூமும் பளிச்சென இருக்கும். உங்களுடைய பாத்ரூம் பளிச் பளிச் என்று இருக்க என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் அலச இருக்கிறோம்.

நம்முடைய பாத்ரூம் டைல்ஸ் மற்றும் குழாய்களில் அதிகப்படியான உப்பு தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் உப்பு கறை படிந்து நாளடைவில் அது மஞ்சளாக மாறி பின்பு அழுக்காக படிகிறது. விடாப்பிடியான இந்த உப்பு கறைகளை விரட்டியடித்து பாத்ரூமை எளிதான முறையில் எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது? என்று பார்ப்போம்.

- Advertisement -

முதலில் நீங்கள் வாசலில் கோலம் போட பயன்படுத்தும் கோல மாவை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் கோலமாவு எடுத்து நன்கு சலித்துக் கொள்ள வேண்டும். சலித்து கிடைக்கக் கூடிய மாவை மட்டும் தனியாக பிரித்து எடுங்கள். இந்த மாவுடன் தேவையான அளவிற்கு துணி துவைக்கும் சோப்பு பவுடரை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு சமையலுக்கு பயன்படுத்தும் சமையல் சோடாவை சேர்க்க வேண்டும்.

சமையல் சோடா துர்நாற்றத்தையும், பாக்டீரியாக்களையும் நீக்கும். இந்த கலவையை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பாத்ரூம்களில் இதை எல்லா இடங்களிலும் படும்படி தூவி விடுங்கள். தண்ணீரை அதன் மீது தெளித்து பத்து நிமிடம் ஊற விட வேண்டும். அதன் பிறகு விளக்குமாறு பயன்படுத்தி நன்கு தேய்த்து கொடுத்தால் நர நரவென்று பாத்ரூமில் இருக்கக் கூடிய உப்பு கறைகள், விடாப்பிடியான அழுக்குகள், பாக்டீரியாக்கள் அனைத்தும் சுத்தமாகிவிடும்.

- Advertisement -

அதே போல தண்ணீர் குழாய் மற்றும் பைப்புகளில் கூட இந்த பவுடருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்த்து ஸ்க்ரப்பர் பயன்படுத்தி தேய்த்து கொடுங்கள். 10 லிருந்து 15 நிமிடம் நன்கு ஊறிய பின்பு மீண்டும் தேய்த்து சுத்தமாக கழுவி விடுங்கள். இதனால் உப்பு கறைகள், மஞ்சள் கறைகள் அனைத்தும் நீங்கி, குழாய்கள் பளிச்சென்று மின்னும். அதே போல பிளாஸ்டிக் பாக்கெட்களில் படிந்து இருக்கக் கூடிய அழுக்குகளையும் இது எளிதாக நீக்கும்.

இதையும் படிக்கலாமே:
25-02-2025 ருண விமோசன பிரதோஷ பரிகாரம்

பக்கெட் வைக்கும் இடங்கள் மற்றும் மக்குகள் போன்றவற்றிலும் கூட இந்த கலவையை தடவி அதனுடன் சிறிதளவு வினிகர் சேர்த்து ஊற விடுங்கள். பின்பு பத்து நிமிடம் கழித்து நன்கு தேய்த்து கழுவ, அனைத்தும் சுத்தமாகிவிடும். பாத்ரூம் மட்டும் அல்லாமல் பாத்திரம் கழுவும் சிங்க் பகுதிகளிலும் இதை தடவி ஊற வைத்து கழுவி தேய்க்க, பாசி படிந்த கறைகள் விலகும். பாத்ரூம் கதவுகளில் கூட இதை தடவி அதனுடன் சிறிது பாத்திரம் கழுவும் லிக்விடை சேர்த்து சுத்தம் செய்து பாருங்கள், எளிதாக விடாப்பிடியான கறைகள் நீங்கும். அடிக்கடி இதை செய்யும் பொழுது தேய்ப்பதற்கும் சுலபமாக இருக்கும். அடிக்கடி ரசாயன கலவைகளை பயன்படுத்துவதை காட்டிலும், இது போல ஒரு முறை செய்து பாருங்கள், உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

சற்று முன்