- Advertisement -
- Advertisement -

நவராத்திரி என்றாலே 9 நாட்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பத்தாவது நாளும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அந்த பத்தாவது நாளே தான் விஜயதசமி என்று கூறுகிறோம். இந்த ஒன்பது நாட்களும் அம்பிகை அசுரனை வதம் செய்ததற்காக போர் புரிந்தார் என்றும் ஒன்பதாவது நாள் அவர் அசுரனை வதம் செய்ததால் பத்தாவது நாள் வெற்றியை கொண்டாடும் வகையில் விஜயதசமி வழிபாட்டை மேற்கொள்கிறோம் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட விஜயதசமி நாளன்று வீட்டில் எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நவராத்திரி பத்தாம் நாள் வழிபாடு

அசுரனை வதம் செய்வதற்காக அம்பிகை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் அவதரித்து போரிட்டார் என்று கூறப்படுகிறது. அந்தப் போரில் வெற்றி பெற்றதால் தான் வெற்றி பெற்றதை குறிக்கும் வகையில் தான் விஜயதசமி நாள் என்பது கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் நாம் மேற்கொள்ளும் எந்த முயற்சியாக இருந்தாலும் அந்த முயற்சிகள் வெற்றி அடையும் என்பதையும் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட நாளில் நாம் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் 10:45 மணியிலிருந்து 11:45க்குள் மாலை 5.30 மணியிலிருந்து 7:30 மணிக்குள் வீட்டில் பூஜை செய்ய வேண்டும். அவ்வாறு பூஜை செய்யும் பொழுது நம்முடைய வருமானத்திற்கு உதவக்கூடிய பொருட்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் நம்முடைய குருவின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம் நாம் சர்க்கரை பொங்கல், சுண்டல், வடை, பாயாசம் போன்ற பொருட்களை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். மேலும் ஏதாவது மூன்று வகையான பழங்களை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் நம் வாசனை மிகுந்த எந்த மலர்களை வேண்டுமானாலும் அம்மனை அலங்காரம் செய்வதற்கும், அர்ச்சனை செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தங்களால் இயன்ற அளவிற்கு பிரசாதங்களை கொடுத்து மகிழ்விக்க வேண்டும்.

- Advertisement -

விஜயதசமி நாளன்று இந்த மந்திரத்தை 54 முறை உச்சரிக்க நவராத்திரி முழுவதும் நாம் செய்த பூஜையின் பலன்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மந்திரம்

ஓம் க்லீம் நவராத்திரி நாயகியே நமோ நமஹ

இன்றைய நாளில் தொழில் ஸ்தாபனம் வைத்து நடத்துபவர்கள் மேற் சொன்ன நேரங்களில் தங்கள் தொழில் மேம்பட வேண்டும், வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களிடம் வேலை செய்யும் அனைத்து நபர்களுக்கும் தங்களால் இயன்ற அளவு பிரசாதங்களை தந்து தொழில் செய்யும் ஸ்தாபனத்தில் வழிபாடு செய்ய வேண்டும். படிக்கும் பிள்ளைகள் தங்களுடைய புத்தகங்களை வைத்து வழிபாடு செய்து விட்டு வழிபாடு நிறைவு செய்த பிறகு புத்தகங்களை எடுத்து படிக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலம் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. புதிதாக எந்த ஒரு தொழிலை செய்ய ஆரம்பிப்பதாக இருந்தாலும் இந்த நாளில் ஆரம்பிக்கும் பொழுது கண்டிப்பான முறையில் அந்த தொழிலில் நல்ல முன்னேற்றமும் லாபகரமும் ஏற்பட்டு வெற்றிகரமாக நடத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தீவினைகள் அகல திருஷ்டி பரிகாரம்

வெற்றிகளை தரக்கூடிய விஜயதசமி நாளன்று இந்த முறையில் அம்பிகையை வழிபாடு செய்து அம்பிகையின் அருளால் நல்ல பலனை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -