- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதீவினைகள் அகல திருஷ்டி பரிகாரம்

தீவினைகள் அகல திருஷ்டி பரிகாரம்

- Advertisement -

படிப்படியாக நாம் வளர்ந்து வரும் பொழுது தான் கண் திருஷ்டிகள் ஏராளம் நம் மீது விழும். இந்த திருஷ்டிகள் பொல்லாதது என்பார்கள். “கல்லடி பட்டாலும் பட்டுவிடலாம், கண்ணடி பட்டுவிடக்கூடாது” என்பது நம் முன்னோர்களுடைய பழமொழி. எனவே ஞாயிற்றுக்கிழமை தோறும் இந்த முறையில் நீங்கள் திருஷ்டி கழித்தால் நிச்சயம் எப்பேர்பட்ட திருஷ்டிகளும், கண்ணேறுகளும் காணாமலேயே போகும். சக்தி வாய்ந்த இந்த எளிய திருஷ்டி பரிகாரம் எப்படி செய்வது? என்பதைத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பகுதியின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

பொதுவாகவே கண் திருஷ்டிகள் மீது நாம் அலட்சியமாக இருப்பது நல்லதல்ல! திருஷ்டிகள் என்பது உண்மை. ஒருவர் நம்மை பார்த்து இவர்கள் மட்டும் நன்றாக இருக்கிறார்களே, நாம் மட்டும் கஷ்டப்படுகிறோம் என்று இயல்பாக நினைத்தால் கூட, அதனுடைய வைப்ரேஷன் அதாவது அதிர்வலைகள் நம்மை தாக்கும் என்பது உண்மை. இந்த அதிர்வலைகளை தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி, சில பொருட்களுக்கு உண்டு. அந்த பொருட்களால் திருஷ்டி கழிக்கும் போது, இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கலாம்.

- Advertisement -

நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நம்மைப் பற்றிய தகவல்களை நம் மூலமாகவோ அல்லது பிறர் மூலமாகவோ அறிந்து கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் எடை போட்டு பார்ப்பது மனித இயல்புதான். ஒருவர் புதிதாக வீட்டிற்கு ஒரு பொருளை அதிக விலை கொடுத்து வாங்கி விடக்கூடாது, உடனே எங்கிருந்துதான் இவர்களுக்கு பணம் வருகிறதோ? இதெல்லாம் வாங்கி வைக்கிறார்கள், நமக்கு தான் ஒரு வழி இல்லை என்று நினைப்பார்கள்.

தொழில், வியாபாரம், வேலை நிமித்தமாக ஒருவர் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே செல்வார்கள். அது நம் திறமைக்கு உரிய வெகுமதி! ஆனால் அதையும் பார்த்து பொறாமைப்படுபவர்களும் உண்டு. கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னோன்யத்தை பார்த்து அக்கம் பக்கத்தினர் முதல் சொந்த பந்தம் வரை கண் வைப்பது உண்டு. திருமணம் ஆகி உடனே இவர்களுக்கெல்லாம் குழந்தை பிறந்து விட்டது, இவ்வளவு காலம் ஆகியும் நம் மகளுக்கு அல்லது மகனுக்கு இன்னும் பிள்ளை இல்லையே என்று ஏங்கும் பெரியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அறிந்தும் அறியாமலும் இவர்கள் நம்மை பார்த்து பொறாமைப்படும் பொழுது அது திருஷ்டியாக நம்மை தொடர்ந்து வருகிறது.

- Advertisement -

இந்த கண்ணேறுகளும், திருஷ்டிகளும் நம்மை தாக்காமல் இருக்கவும், ஏற்கனவே கண் திருஷ்டியால் பாதிக்கப்படுபவர்களும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களை செய்ய சொல்லுங்கள் அல்லது வீட்டில் இருக்கும் ஆண் மகன் இதை செய்யுங்கள். ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் செய்வது நல்லது. குழந்தைகளுக்கு பெண்கள் செய்வதை விட, வீட்டில் இருக்கும் ஆண்கள் செய்யுங்கள் நல்ல பலன் தரும்.

இதையும் படிக்கலாமே:
கடன் இல்லாமல் வாழ பரிகாரம்

கையில் ரெண்டு நீளமாக இருக்கக்கூடிய வரமிளகாயை எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் வெண்கடுகை வலது உள்ளங்கையில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது திருஷ்டி கழிப்பது போல வலது புறம் இருந்து இடது புறமாக மூன்று முறையும், இடதுபுறம் இருந்து வலது புறமாக மூன்று முறையும் திருஷ்டி சுற்றுங்கள். அப்படியே கொண்டு போய் வீட்டில் ஓரமாக எரியும் நெருப்பில் போடுங்கள். முன்பே நெருப்பை தயார் செய்து கொள்ள வேண்டும். நெருப்பில் படபடவென வெண்கடுகு எரிந்து கெட்ட வாடை அடிக்கும். வரமிளகாயில் இருக்கும் கார நெடி அக்னியுடன் சேரும் பொழுது தீவினைகள், திருஷ்டிகள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆகும் என்பது ஐதீகம்.

சற்று முன்