
ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதம் என்றும் ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி ஞாயிறு போன்ற கிழமைகள் அம்மனுக்கு மிகவும் விசேஷகரமான கிழமைகளாக திகழ்கிறது என்றும் நம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அந்த மாதத்தில் குறிப்பிட்ட கிழமையில் அம்மனின் சில சூட்சமமான வழிபாடுகளை நாம் செய்யும் பொழுது அம்மனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அம்மனின் அருளோடு சேர்த்து மகாலட்சுமி தாயாரின் அருளையும் பரிபூரணமாக பெறுவதற்கு செவ்வாய்க்கிழமை அன்று எந்தெந்த பொருட்களை வைத்து வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான பொருட்கள் மிகவும் பிடித்தமான பொருட்களாக திகழும். அந்த பொருட்களை வைத்து நாம் வழிபடும் பொழுது அந்த தெய்வம் மனம் இறங்கி வந்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றி வைத்து அருளாசியும் புரிவார்கள். அப்படி பார்க்கும் பொழுது ஆடி மாதத்திற்கு உகந்த தெய்வமாக திகழக்கூடிய அம்பிகைக்கும், மகாலட்சுமி தாயாருக்கும், முருகப் பெருமானுக்கும் உகந்த பொருட்களை வைத்து நாம் வழிபடும் பொழுது இவர்கள் அனைவரின் அருளையும் நம்மால் பெற முடியும். இப்படி இவர்களின் அருளை பெறுவதால் நமக்கு பணவரவு அதிகரிக்கும் கடன் சுமை தீரும் மங்களகரமான வாழ்க்கையும் பெற முடியும்.
பொதுவாகவே அம்மனுக்கு மிகவும் பிடித்தமான பொருளாக திகழக்கூடியது இனிப்பு பொருட்கள் ஆடி மாதம் என்றதும் அருகில் இருக்கக்கூடிய அம்மன ஆலயத்திற்கு சென்று சர்க்கரை பொங்கல் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் மிகவும் பிடிக்கும் என்பதால் தான் இந்த வழிபாட்டை அனைவரும் பின்பற்றுகிறார்கள்.
அம்பிகைக்கு மட்டும் பிடித்தமான பொருள் கிடையாது மகாலட்சுமி தாயாருக்கும் பிடித்தமான பொருளாக கருதப்படுகிறது. சர்க்கரை பொங்கல் செய்யும் பொழுது வெள்ளத்தை சேர்ப்பதற்கு பதிலாக கற்கண்டை சேர்த்து கற்கண்டு பொங்கலாக செய்யும் பொழுது அது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த பிரசாதமாக திகழ்கிறது.
முருகப்பெருமானுக்கு பாசிப்பருப்பு என்பது மிகவும் பிடித்தமான ஒரு பொருள். சர்க்கரை பொங்கலில் நம் பாசிப்பருப்பையும் சேர்த்து தான் செய்வோம் என்பதால் இது முருகப்பெருமானுக்கும் பிடித்தமான நெய்வேத்தியமாக திகழ்கிறது. அதனால் செவ்வாய் கிழமை அன்று காலையில் நாம் வழிபாடு செய்யும்பொழுது ஒரு தட்டை எடுத்துக் கொண்டு மூன்று கிண்ணங்களை வைத்து அதில் ஒரு கிண்ணத்தில் பச்சரிசியும், இரண்டாவது கிண்ணத்தில் கற்கண்டையும், மூன்றாவது கிண்ணத்தில் பாசிப்பருப்பையும் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
அன்று மாலை இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பொங்கல் செய்து அதை அருகில் இருக்கக்கூடிய அம்மன ஆலயத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு வரக்கூடிய பெண் பிள்ளைகளுக்கு அதை தானமாக தர வேண்டும். இப்படி தருவதன் மூலம் அந்த பெண் பிள்ளைகளின் உருவத்தில் மகாலட்சுமி தாயார் அதேசமயம் அம்பிகையும் வந்து வாங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:ஆடி செவ்வாய் மகாலட்சுமி வழிபாடு
இந்த எளிமையான பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்து தானமாக தருவதன் மூலம் அம்பிகை மற்றும் மகாலட்சுமியின் அருளோடு முருகப்பெருமானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.