- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி செவ்வாய் மகாலட்சுமி வழிபாடு

ஆடி செவ்வாய் மகாலட்சுமி வழிபாடு

- Advertisement -

பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தரக்கூடிய தெய்வமாக திகழ்பவள் மகாலட்சுமி தாயார். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை நாம் ஆடி மாதத்தில் வரக்கூடிய முதல் செவ்வாய்க்கிழமை அன்று வழிபாடு செய்தோம் என்றால் கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் அதாவது கடன் கொடுத்ததால் ஏற்பட்ட பிரச்சினைகளும் கடன் வாங்கியதால் ஏற்பட்ட பிரச்சனைகளும் தீரும். மேலும் பணவரவு என்பது அதிகரிக்கும். அந்த வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆடி செவ்வாய் மகாலட்சுமி வழிபாடு

செவ்வாய்க்கிழமை என்பது மிகவும் முக்கியமான கிழமையாக திகழ்கிறது. செவ்வாய் பகவான் கடன் தொடர்பான விஷயங்களுக்கு காரண கர்த்தாவாக திகழ்கிறார் என்பதால் செவ்வாய்க்கிழமை அன்று நாம் கடனை அடைக்க ஒரு சிறிய தொகையாவது கட்டினோம் என்றால் கடன் விரைவிலேயே அடையும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வழிபாடு செய்தால் கடன் பிரச்சினை தீரும் என்று கூறுகிறார்கள் நம்முடைய முன்னோர்கள்.

- Advertisement -

அதே செவ்வாய்க்கிழமை அன்று நம் மகாலட்சுமி தாயாரை வழிபட்டோம் என்றால் பணவரவு அதிகரிக்கும். அதன் மூலம் கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும் மங்களகரமான வாழ்க்கை வாழ முடியும் என்று கூறப்படுகிறது. இந்த வழிபாட்டை வீட்டிலேயே எப்படி எளிமையான முறையில் செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

செவ்வாய்க்கிழமை அன்று காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு புதிய மலர்களை சாற்றி எப்பொழுதும் போல் தீபம் ஏற்றி வழிபாடு செய்து கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாருக்கு என்று தனியாக ஒரு நெய் தீபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அதில் தாமரை தண்டு திரி போட்டு ஏற்றுவது என்பது சிறப்பு. அதிலும் சிறிதளவு மஞ்சள் தூளை எடுத்து அதில் நெய் ஊற்றி நன்றாக கலந்து அதில் தாமரை தண்டு திரியை நனைத்தால் அந்த திரியானது மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். பிறகு அந்த திரியை பயன்படுத்தி தீபம் ஏற்றினோம் என்றால் அது மிகுந்த பலனைத் தரும்.

- Advertisement -

பாலில் கற்கண்டு ஏலக்காய் சேர்த்து நெய்வேத்தியமாக வைக்கலாம் அல்லது கற்கண்டு பொங்கல் செய்து நெய்வேத்தியமாக வைக்கலாம். இவ்வாறு வைத்து முடித்துவிட்டு மகாலட்சுமி தாயாருக்குரிய கனகதாரா ஸ்தோத்திரத்தை முழு மனதோடு நிறுத்தி நிதானமாக பாராயணம் செய்ய வேண்டும். அப்படி அந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் சமூக வலைத்தளம் வாயிலாக அந்தப் பாடலை வீட்டில் ஒலிக்கச் செய்து அதை கவனித்தால் கூட போதும்.

இப்படி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்து விட்டு அந்த நெய்வேத்தியமாக வைத்த பொருட்களை பிரசாதமாக வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும். இப்படி செவ்வாய்க்கிழமை அன்று மகாலட்சுமி தாயாரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய பண பிரச்சனைகள் தீரும். பண பிரச்சினை தீர்ந்தால் பிறகு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையே ஏற்படாது அல்லவா? அதனால் கடன் பிரச்சனையும் தீரும்.

இதையும் படிக்கலாமே: நிலைவாசலில் கவனிக்க வேண்டியவை

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை முழுமனதோடு மகாலட்சுமி தாயாரை நினைத்து செய்ய பணம் மற்றும் கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்