- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

நினைத்தது நடக்க வராகி அம்மன் தீப வழிபாடு

நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்து அந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் அந்த பிரச்சினையால் பல சங்கடங்களை அனுபவித்துக்கொண்டு இருப்பவர்களும் அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வரவேண்டும் என்பதற்காக பல வழிபாடுகளையும் வேண்டுதல்களையும் செய்வார்கள். அந்த வழிபாட்டு முறைகளில் ஒன்றான வாராகி அம்மன் வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நியாயமான வேண்டுதலை நிறைவேற்றக்கூடிய அற்புதமான தெய்வமாக திகழ்பவள்தான் வாராகி அம்மன். வாராகி அம்மனை நாம் முழுமனதோடு நம்பி அவளிடம் நம்முடைய பிரச்சினைகளை சமர்ப்பித்துவிட்டோம் என்றால் அந்த பிரச்சினைகளுக்குரிய தீர்வை அந்த அம்மனே தந்து விடுவாள். அப்படி அந்த பிரச்சினைகள் தீர வேண்டும் என்றால் நம்முடைய வீட்டிலேயே வாராகி அம்மனை நினைத்து ஒரே ஒரு தீபத்தை ஏழு நாட்கள் மட்டும் ஏற்றினால் போதும். ஏழு நாட்கள் முடிவதற்குள் அந்த பிரச்சனைக்குரிய தீர்வை வாராகி அம்மன் நமக்கு அருள்வார். அந்த தீபத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை எந்த கிழமையில் வேண்டுமானாலும் நாம் செய்ய ஆரம்பிக்கலாம். இரவு 10 மணியில் இருந்து 11 மணி வரை இந்த தீபத்தை நம்முடைய வீட்டு பூஜை அறையில் ஏற்ற வேண்டும். இந்த ஏழு நாட்களும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும். முதலில் ஒரு தட்டை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த தட்டு மண்ணால் செய்யப்பட்டதாக இருந்தால் மிகவும் நல்லது. அப்படி இல்லை என்றால் பெரிய அகல் விளக்கை கூட எடுத்துக் கொள்ளலாம்.

அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை போடுங்கள். அதற்கு மேல் 9 மிளகை வையுங்கள். இதற்கு மேலே காம்பு இல்லாத ஒரு வெற்றிலையை வைத்துக்கொள்ளுங்கள். இந்த வெற்றிலையின் நுனியானது வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமானது 10 மணியிலிருந்து 11 மணி வரை கண்டிப்பாக ஒரு மணி நேரம் எரிய வேண்டும்.

- Advertisement -

இந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து கையில் ஒரு மலரை வைத்துக்கொண்டு உங்களுடைய பிரச்சனை என்னவோ, வேண்டுதல் என்னவோ அதை மனதார அந்த தீபத்தில் வாராகி அம்மன் இருப்பது போல் உணர்ந்து வாராகி அம்மனிடம் கூறுவது போல் கூற வேண்டும். பிறகு கையில் இருக்கும் அந்த மலரை தீபத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். இப்படி தினமும் இரவு 10 மணியிலிருந்து 11 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

வெற்றிலை காய்ந்து விட்டால் மட்டும் வெற்றிலையை மாற்றிக்கொள்ளுங்கள். உப்பும் மிளகும் அப்படியே இருக்கட்டும். எட்டாவது நாள் உப்பையும் தண்ணீரையும் கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி நாம் வராகி அம்மனை நினைத்து இந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்வதன் மூலம் நாம் என்ன வேண்டுதல் வைத்தோமோ என்ன பிரச்சனை தீர வேண்டும் என்று நினைத்தோமோ அது அனைத்தும் இந்த ஏழு நாட்களுக்குள்ளேயே நடந்து விடும்.

இதையும் படிக்கலாமே: வேண்டிய வரம் தரும் மல்லிகைப்பூ

மிகவும் சக்தி வாய்ந்த இந்த தீப வழிபாட்டை வாராகி அம்மனின் மீது முழு நம்பிக்கை வைத்து செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் வாராகி அம்மனின் அருளால் அவர்கள் நினைத்தது நடக்கும்.

- Advertisement -