- Advertisement -
- Advertisement -

ஒருவருக்கு ஏற்படக்கூடிய நன்மைகளும் தீமைகளும் அவர்களுடைய கர்ம வினைகளை பொருத்தே அமைகிறது. முன் ஜென்மத்தில் அவர்கள் செய்த செயல்களின் வெளிப்பாடாக தான் இந்த ஜென்மத்தில் அவர்கள் அனுபவிக்கும் நன்மைகளும் தீமைகளும் அமைகிறது. அந்த வகையில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களில் மிகவும் முக்கியமான கஷ்டமாக இருக்கக்கூடியது அவர்களுடைய உடல் நலம் ரீதியான பிரச்சினைகள்தான். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்த முறையில் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நோய்கள் நீங்க தீப வழிபாடு

ஒருவருடைய ஜாதகத்தில் எந்த கிரகத்தால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதோ அந்த கிரகத்தை பொறுத்து உடலில் இருக்கக்கூடிய பாகங்களும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவர் தொடர்ச்சியாக ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால் அந்த நோய்க்குரிய பாகம் எது அந்த பாகத்திற்குரிய கிரகம் எது என்று கண்டறிந்து அந்த கிரகத்தை சாந்தி செய்ய வேண்டும். அதன் பிறகு மருத்துவர் அணுகி மருந்து சாப்பிட்டால் அந்த பாதிப்பு விரைவிலேயே தீரும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் அனைத்து நோய்களுக்கும் மருந்தாக திகழக்கூடியவர்தான் வைத்தீஸ்வரர். வைத்தீஸ்வரர் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில வழிபாட்டு முறைகளை மேற்கொள்வதன் மூலமும் விரைவிலேயே அவர்களுடைய நோய்கள் தீரும் என்று கூறப்படுகிறது.

இந்த வழிபாட்டை திங்கட்கிழமை தோறும் செய்ய வேண்டும். வைத்தீஸ்வரர் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று அவருக்கு முன்பாக இரண்டு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து வைக்க வேண்டும். பிறகு தங்களுடைய பெயரில் நோய்கள் நீங்க வேண்டும் என்பதற்காக அர்ச்சனை செய்ய வேண்டும். அருகில் வைத்தீஸ்வரர் ஆலயம் இல்லை என்பவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகே மாரியம்மன் ஆலயம் இருக்கும் பட்சத்தில் அந்த ஆலயத்திலும் சென்று வழிபாடு மேற்கொள்ளலாம்.

- Advertisement -

தேய்பிறை நாட்களில் எந்த நாட்களில் வேண்டுமானாலும் மாரியம்மன் ஆலயத்திற்கு செல்லலாம். அவ்வாறு செல்லும் பொழுது உப்பு மிளகு இரண்டையும் வாங்கிக்கொண்டு அந்த மாரியம்மன் கோவிலில் எந்த இடத்தில் உப்பு மிளகு போடுவார்களோ அந்த இடத்தில் நின்று மாரியம்மனடம் மனதார வேண்டிக்கொண்டு அந்த உப்பு மிளகை போட வேண்டும். இதுவும் ஒருவகையான இதுவும் நோய்களை தீர்ப்பதற்குரிய வழிபாடு ஆகும் இதோடு

மேலும் முருகப் பெருமானுக்கு உகந்த வேல் மாறலை தினமும் பாராயணம் செய்வதன் மூலம் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட பாதிப்புகளும் அவரால் ஏற்பட்ட நோய்களும் விரைவிலேயே தீரும் என்று கூறப்படுகிறது. சனி மற்றும் சூரிய பகவானால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளுக்கு சிவபெருமானையும், ராகுவின் பாதிப்பால் ஏற்பட்ட உடல்நல கோளாறுக்கு மாரியம்மன் வழிபடுவதோடு அந்த நோய்க்குரிய மருந்தையும் உண்டு வருவதன் மூலம் விரைவிலேயே நோயின் தாக்கத்திலிருந்து விடுபட முடியும்.

இதையும் படிக்கலாமே:பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்

நோயால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் அந்த நோயின் ஆணிவேரை கண்டறிய வேண்டும். அப்பொழுதுதான் அந்த நோயின் தாக்கம் என்பது முற்றிலும் நம்மை விட்டு நீங்கும் என்ற அடிப்படையில் சிவபெருமானை இந்த முறையில் வழிபாடு செய்வதன் மூலம் அவர்களுடைய நோயின் தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -