- Advertisement -

நோய்களை நீக்கும் துவரம் பருப்பு பரிகாரம்

- Advertisement -

எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அந்த உழைப்பிற்கேற்ற பணவரவு வந்தாலும், கையில் பணம் நிரந்தரமாக தங்கினாலும், அந்த பணத்தை அனுபவிப்பதற்கு உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் இல்லை என்றால் நாம் சம்பாதித்த பணம் மருத்துவ செலவிற்காகவே சென்று விடும். மேலும் நம்மால் எந்தவித சுகபோகங்களையும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை என்பது உண்டாகிவிடும். அதனால் நாம் நம்முடைய உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஆரோக்கியமாக வாழ்வதற்கும் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய நோய்கள் நீங்குவதற்கும் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

நோய்களை நீக்க பரிகாரம்

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சூரிய பகவானின் அருள் வேண்டும் என்று கூறுவது உண்டு. எப்படி சூரிய பகவானின் அருள் வேண்டுமோ அதே போல் தான் செவ்வாய் பகவானின் அருளும் வேண்டும். செவ்வாய் பகவானின் அருள் இருந்தால் நம்முடைய உடம்பில் இருக்கக்கூடிய நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்குரிய ஆலயமாக தான் பழனி திகழ்கிறது. மேலும் செவ்வாய் பகவானுக்குரிய தானியமாக துவரம் பருப்பு திகழ்கிறது. இவை இரண்டையும் ஒன்று சேர்த்து நாம் செய்யக்கூடிய ஒரு பரிகாரம் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய நோய்களை நீக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்ய வேண்டும். பழனி அடிவாரத்தில் இருக்கக்கூடிய திரு ஆவினங்குடியில் தான் இந்த பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும். வேறு எந்த முருகன் கோவிலிலும் செய்யக்கூடாது. இந்த ஆலயத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது 100 அல்லது 200 அல்லது 250 கிராம் அளவிற்கு துவரம் பருப்பை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். முருகப்பெருமானை மனதார வழிபாடு செய்துவிட்டு உடலில் இருக்கக்கூடிய நோய்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று வழிபாடு செய்து விட்டு கையில் இருக்கக்கூடிய துவரம் பருப்பை இடமிருந்து வலமாக ஒன்பது முறையும் வலம் இருந்து இடமாக ஒன்பது முறையும் சுற்ற வேண்டும்.

பிறகு அந்த துவரம் பருப்பை கையில் வைத்துக்கொண்டே கோவிலை மூன்று முறை வலம் வர வேண்டும். இவ்வாறு வலம் வந்த பிறகு அந்த துவரம் பருப்பை யாருக்காவது ஒருவருக்கு தானமாக தர வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஆறு செவ்வாய்க்கிழமை நாம் செய்வதன் மூலம் நம் உடலில் இருக்கக்கூடிய நோய்கள் தீருவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: சித்தர்கள் அருளிய உணவு பழக்கம்

உடலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு என்ன காரணம் என்று தெரியாமலேயே பலரும் தவித்துக் கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -