- Advertisement -
சமையல் குறிப்புகள்

இப்படி சோயா சேர்த்து ஒரு குருமா வைத்தால் போதும். தட்டு நிறைய சாதம் கொடுத்தாலும் ஒரு பருக்கை சாதம் கூட மிச்சமில்லாமல் சாப்பிட்டு முடிப்பார்கள்

- Advertisement -

ஒருசில குழம்பு வகைகளில் சேர்க்கப்படும் மசாலாக்கள் காரணமாக அந்த குழம்பு கறி குழம்பின் சுவையில் இருக்கும். அப்படி சோயா சேர்த்து செய்யும் இந்த குருமாவும் கறிக்குழம்பை விட அட்டகாசமான சுவையில் இருக்கும். இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். எப்பொழுதும் செய்யும் குருமா போன்று இல்லாமல் மசாலாக்கள் அரைத்து செய்யும் பொழுது சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த குருமாவை சுடசுட சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது கறிக்குழம்பு சாதம் சாப்பிடுவது போன்று அதே சுவையில் இருக்கும். வாருங்கள் இப்படி சுவையான சோயா குருமாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, பச்சை மிளகாய் – 2, சோம்பு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – ஒன்று, கிராம்பு – 1, ஏலக்காய் – 1, வெங்காயம் – 2, தக்காளி – 2, தனி மிளகாய் தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து, முந்திரி பருப்பு – 10, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், சோயா – 100 கிராம்.

- Advertisement -

செய்முறை:
முதல் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் சேர்த்து, அதனை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு 100 கிராம் சோயாவில் தண்ணீரில் சேர்த்து, பத்து நிமிடத்திற்கு ஊறவைத்து, அதன் பின்னர் தனியாக எடுத்து வைக்க வேண்டும். பிறகு தக்காளி, வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

பின்னர் அரை மூடி தேங்காயை நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். பிறகு தேங்காய் துருவலுடன் அரை ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் சீரகம், பச்சை மிளகாய்= கிராம்பு, ஏலக்காய் இவை அனைத்தையும் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு முந்திரி சேர்த்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் சோம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கலந்து, அரைத்து வைத்துள்ள மசாலா விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, இதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும். சிறிது நேரம் கழித்து வேகவைத்து எடுத்து வைத்துள்ள சோயாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கொதிக்கவைத்து அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -