
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமான சருமம் என்பது இருக்கிறது. மனிதர்களாக பிறந்த நமக்கே எண்ணெய் சருமம், சாதாரண சருமம், வறண்ட சருமம் என்று பிரிக்கக்கூடியதாக திகழ்கிறது. இதில் ஒவ்வொரு சருமத்திற்கு ஏற்றவாறு நாம் நம்முடைய சருமத்தை பராமரித்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் சருமம் மிகுந்தவர்கள் வறண்ட சருமத்திற்குரிய பராமரிப்பை மேற்கொண்டால் அதனால் அவர்களுக்கு எந்த பலனும் இருக்காது. அதேபோல் வறண்ட சருமத்தில் இருப்பவர்கள் எண்ணெய் சருமத்திற்குரிய வழிமுறையை பின்பற்றினால் மேலும் அதிக அளவில் சருமம் வறண்டு போய் அதனால் பல விதமான பாதிப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அந்த வகையில் எண்ணெய் சருமம் மிகுந்தவர்களுக்கு உதவக்கூடிய ஒரு ஃபேஸ் மாஸ்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
இந்த ஃபேஸ் மாஸ்கை நாம் தினமும் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் சுரக்கக்கூடிய அதிகப்படியான எண்ணெய் பசை என்பது குறைவதோடு, சருமத்தில் இருக்கக்கூடிய துவாரங்கள் இறுகும். மேலும் இளமையான தோற்றத்தையும் பெற முடியும். இதற்கு நம்முடைய வீட்டில் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தக்கூடிய மூன்றே மூன்று பொருட்கள் இருந்தால் போதும். வேறு எதுவும் பெரிதாக தேவைப்படாது. தொடர்ச்சியாக இந்த ஃபேஸ் மாஸ்க்கை நாம் பயன்படுத்தினால் தான் நம்முடைய சருமத்தில் நல்ல மாற்றத்தை உணர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வெள்ளை கருவானது நம்முடைய முகத்தில் சுரக்கக்கூடிய அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவதோடு தளர்வடைந்த சருமத்தையும் இளமையாக இருக செய்யும். அடுத்ததாக இதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். இதில் விட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் இது நம்முடைய சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது.
அடுத்ததாக இதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேனை சேர்க்க வேண்டும். தேனில் ஆன்டி பாக்டீரியல், ஆன்ட்டி இன்ஃப்ளமேசன் போன்ற பொருட்கள் இருக்கிறது என்பதால் இது நம்முடைய சருமத்திற்கு தேவையான நீர் சத்தைத் தக்கவைத்து சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இப்பொழுது இவை மூன்றையும் நன்றாக ஒரு ஸ்பூனை வைத்து கலந்து கொள்ளுங்கள். ஃபேஸ் மாஸ்க் தயாராகிவிட்டது. இதை நம்முடைய முகத்தில் தடவி குறைந்தது பத்திலிருந்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் தொடர்ச்சியாக நாம் செய்வதன் மூலம் நம்முடைய சருமம் என்றும் இளமையாகவும், அதிகளவில் சுரக்கக்கூடிய எண்ணெய் நீங்கும்.
இதையும் படிக்கலாமே:பருக்களும் வடுக்களும் நீங்க
இயற்கையில் கிடைக்கக்கூடிய இந்த மூன்று பொருட்களை வைத்து நம்முடைய முகத்தில் அதிகப்படியான அளவு சுரக்கக்கூடிய எண்ணெயை கட்டுப்படுத்துவதோடு இளமையான தோற்றத்தையும் தரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.