
Tip No 1:
ஆரஞ்சு பழத்தோலை வெட்டும்போது இரண்டு பாகங்களாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பாதி உங்களுக்கு சிறிய பவுல் போல கிடைக்கும். இந்த பாதி அளவு ஆரஞ்சு பழத்தோலை ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து விடுங்கள். ஆரஞ்சு பழத்தோல் உள்பக்கத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் உப்பைப் போட்டு, இந்த கிண்ணத்தை உங்கள் வீட்டு பிரிட்ஜில் வைத்தால், ஃப்ரிட்ஜிலிருந்து எந்த ஒரு கெட்ட வாடையும் வராது. ஒருவேளை பிரிட்ஜில் வாசம் மிகுந்த மல்லிப்பூ அல்லது மற்ற பொருட்களை வைத்தாலும், அந்த வாசத்தை கூட இந்த ஆரஞ்சு பழத்தோல் உறிஞ்சிக்கொள்ளும்.
Tip No 2:
ஆரஞ்சு பழத் தோலை வைத்து உங்கள் வீட்டில் இருக்கும் எவர்சில்வர் டேப், ஒருமுறை தேய்த்து சுத்தம் செய்து பாருங்கள். வித்தியாசம் நன்றாக தெரியும். இதேபோல் உங்களுடைய வீட்டில் இருக்கும் பீங்கான் பாத்திரங்கள், கண்ணாடி பாத்திரங்கள் இவைகள் பார்ப்பதற்கு பளபளவென இல்லாதபட்சத்தில், அந்த பாத்திரங்களை இந்த ஆரஞ்சு பழத் தோலை வைத்து ஒரு முறை தேய்த்து கழுவினால், கண்ணாடிப் பாத்திரங்கள் பீங்கான் பாத்திரங்கள் அனைத்தும் பளபளப்பாக மாறும். ஸ்டீலில் சிங்க் உள்ளவர்களும் இந்த ஆரஞ்சு தோலை பயன்படுத்தி அந்த சிங்கை சுத்தம் செய்து ட்ரை பண்ணி பாருங்க.
Tip No 3:
எந்த இடத்தில் எல்லாம் கெட்டவாடை வருகின்றதோ அந்த இடத்தில் எல்லாம் இரண்டு ஆரஞ்சு பழத் தோலை வைத்து விடுங்கள். அது காயக்காய அதிலிருந்து நல்ல வாசனை வெளி வந்து கொண்டே தான் இருக்கும். எடுத்துக்காட்டிற்கு சிங்க் அடியில், வாஸ்பேஷன் அடியில், பாத்ரூம் அலமாரியின் மேல் பக்கத்தில், குழந்தைகள் காலில் போடும் ஷு வுக்கு உள்ளே, ஷு ராக் உள்ளே, இப்படி உங்களுடைய வீட்டில் கெட்ட வாடை எந்த இடத்திலிருந்து எல்லாம் வெளிவருமோ அந்த இடத்தில் எல்லாம் ஆரஞ்சு பழத்தோலை வைக்கும் போது அதில் இருந்து நல்ல வாசம் கிடைக்கும்.
Tip No 4:
தினமும் காலையில் வெந்நீரில் குளிக்கும் போது நீங்கள் குளிக்க கூடிய அந்த தண்ணீரில் சிறிது நேரத்துக்கு முன்பாகவே இந்த ஆரஞ்சு தோலை துண்டு துண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஆரஞ்சுப் பழத் தோலை போட்டு ஊறவைத்த தண்ணீரில் குளித்தால் உங்களுடைய உடல் நாள் முழுவதும் வாசமாக இருக்கும்.
Tip No 5:
ஆரஞ்சு பழத் தோல்களை நன்றாக மூன்றிலிருந்து நான்கு நாட்கள் உலர விட்டு விடுங்கள் உலர்ந்த ஆரஞ்சு பழத் தோல்களை மெல்லிசான கைக்குட்டையில் வைத்து மடித்து பீரோவில் ஆங்காங்கே துணிக்கடையில் வைத்து விட்டோம் என்றால் நம்முடைய பீரோ முழுவதும் நம்முடைய துணி முழுவதும் ஆரஞ்சு பழத் தோலின் வாசம் நன்றாக வீசும்.
Tip No 6:
காய்ந்த ஆரஞ்சு பழ தோல்களை கொஞ்சம் எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு கண்ணாடி பாட்டிலில் இந்த காய்ந்த ஆரஞ்சு பழத் தோல்களை போட்டு, தோல்கள் மூழ்கும் அளவிற்கு வினிகரை ஊற்றி ஒரு மூடி போட்டு, இறுக்கமாக மூடி விடுங்கள். இந்த பாட்டிலை ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.
15 நாட்கள் இந்த ஆரஞ்சு பழத்தோல் வினிகரில் நன்றாக ஊறட்டும். அதன் பின்பு ஆரஞ்சு தோலில் ஊறிஞ வினிகரை மட்டும் வடிகட்டி யின் மூலம் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை வைத்து உங்களுடைய வீட்டில் ஃப்ரிட்ஜ், பீரோ கண்ணாடி, ஜன்னல் கண்ணாடி, எல்லாவற்றையும் துடைத்துப் பாருங்கள் கண்ணாடி பொருட்கள் அனைத்தும் பளபளவென மின்னும். காசு கொடுத்து கண்ணாடி கிளீன் பண்ண கோலின் போன்ற பொருட்களை இனி வாங்க வேண்டாம்.