- Advertisement -

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் 2025

- Advertisement -

நாம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், அந்த சமயபுரம் மாரியம்மனை நினைத்து நாம் தான் விரதம் இருக்க வேண்டும். ஆனால், உலக மக்களின் நன்மைக்காக சமயபுரம் மாரியம்மனே 28 நாள் விரதம் இருந்து வழிபாடு செய்யக்கூடிய திருவிழா தான், இந்த சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம். இந்த விரதத்தைப் பற்றிய விவரம் பெரும்பாலும் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு.

இந்த விரதம் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கும், இந்த பச்சை பட்டினி விரதம் ஆனது பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறும். சமயபுரத்தில் வழக்கமாக அம்பாளுக்கு தினம் தோறும் 6 கால பூஜையில், 6 தளிகை நெய்வேதியமாக வைக்கப்படும். சமைத்த உணவுப் பொருட்களை தான் தளிகை என்று சொல்லுவார்கள். ஆனால் மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை இந்த 28 நாட்களும் அம்பாள் எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக, உலக மக்கள் நன்மைக்காக விரதம் இருக்கிறார்கள். இதை தான் பச்சை பட்டினி விரதம் என்று சொல்கின்றோம்.

- Advertisement -

இந்த 28 நாளும் அம்பாளுக்கு வெறும் இளநீர், பானகம், உப்பில்லாத நீர்மோர், துள்ளுமாவு, கரும்பு, பழ வகைகளை தான் நெய்வேதியமாக படைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 28 நாளில் வரக்கூடிய 5 ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் திருவிழா விமர்சியாக நடக்கும். இந்த பூச்சொரிதல் விழாவில் மக்கள் பூக்களை கொண்டு போய் மாரியம்மனுக்காக கொடுப்பார்கள்.

அப்படி நாம் கொடுத்த பூவை மாரியம்மனுக்கு சூட்டும் போது, நல்லது நடக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இது நீண்ட கால நம்பிக்கை. மார்ச் மாதம் 9, 16, 23, 30, ஏப்ரல் 6, இந்த 5 தேதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமையிலும் பூச்சொரிதல் விழா நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். சரிங்க, எங்களால் அந்த சமயபுரம் மாரியம்மன் நேரில் சென்று தரிசிக்க முடியாது.

- Advertisement -

வீட்டிலிருந்தபடியே பச்சை பட்டினி விரதம் இருப்பது எப்படி?

வீட்டில் இருந்தபடியே இந்த அம்பாளோடு சேர்ந்து நாமும் 28 நாள் விரதம் இருக்கலாம். இப்படி அம்பாளுடன் சேர்ந்து நீங்களும் விரதம் இருந்து வேண்டுதல் வைத்தால், அந்த வேண்டுதல் 28 நாட்களுக்குள் பலிக்கும் என்பது நம்பிக்கை.

இந்த விரதத்தை நீங்கள் மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை கடைபிடிக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் சமயபுரம் மாரியம்மன் திருவுருவப்படம் இருந்தால் அதற்கு தினமும் வாசனை நிறைந்த பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். தினமும் காலை அல்லது மாலை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, அந்த மாரியம்மனுக்கு இளநீர், உப்பில்லாத நீர் மோர், துள்ளுமாவு, பழ வகைகள், இப்படி ஏதாவது ஒரு நெய்வேதியம் வைத்து கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும்.

- Advertisement -

மார்ச் 9ஆம் தேதி விரதம் துவங்கக்கூடிய முதல் ஞாயிற்றுக்கிழமை அல்லவா, அன்று ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ரூபாய் நாணயத்தை காணிக்கையாக அந்த மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, உங்களுடைய வேண்டுதலை அந்த சமயபுரம் மாரியம்மனிடம் சொல்லி இந்த ஒரு ரூபாய் நாணயத்தை அம்மன் பாதத்தில் வீட்டிலேயே வைத்து விடுங்கள்.

தினமும் அம்பாளுக்கு பூஜை செய்யும் போது அந்த பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாம். இதுபோல 28 நாளும் அம்பாளை நீங்கள் விடாமல் வழிபாடு செய்ய வேண்டும். முடியாது என்பவர்கள் இந்த 5 ஞாயிற்றுக்கிழமை மட்டுமாவது அம்பாளுக்கு நெய்வேதியம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

28 நாள் தொடர்ந்து உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அசைவம் சாப்பிடாமல், வீட்டை சுத்தபத்தமாக வைத்துக் கொண்டு, அடுத்தவர்களை அவதூறு பேசாமல், மனதை அமைதியாக வைத்து, அம்பாளை நினைத்து இந்த விரதத்தை நீங்களும் உங்களுடைய வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ளலாம்.

உங்களுடைய மனதில் என்ன வேண்டுதல் வைத்து, 1 ரூபாய் நாணயத்தை முடிந்து வைத்தீர்களோ, அந்த வேண்டுதல் நிறைவடைந்த பிறகு, ஒருநாள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்பாளுக்கு மாலை வாங்கி கொடுத்து, பூக்கள் வாங்கி கொடுத்து, அர்ச்சனை செய்து, இந்த முடிச்சை அம்பாள் கோவில் உண்டியலில் செலுத்தி விடலாம்.

சமயபுரம் மாரியம்மன் திருவுருவப்படம் வீட்டில் இல்லை என்றாலும் வீட்டில் எந்த மாரியம்மன் இருக்கிறார்களோ, அந்த அம்மனுக்கு இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். 28 நாட்களுக்குள் பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் வந்தால் அந்த நாட்களை மட்டும் தவிர்த்து விட்டு மற்ற நாட்களில் விரதத்தை மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: நிதி நிலைமை உயர வெற்றிலை பரிகாரம்

மாதவிடாய் நாட்களிலும் மனதில் அம்பாளை நினைத்து பிரார்த்தனை செய்வது தவறில்லை. இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் அனைவரது வீட்டிலும் அந்த சமயபுரம் மாரியம்மன் வந்து குடியேறி விட்டால் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -