எவ்வளவுதான் வருமானம் வந்தாலும், வீட்டில் பண பற்றாக்குறை என்பது இருந்து கொண்டு தான் வருகிறது. சம்பளம் வாங்கிய 10 தேதிகள் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தினாலும், மாதத்தில் மீதம் இருக்கும் 20 நாட்களும் திண்டாட்டமாகத்தான் செல்கிறது. இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர வேண்டும். வீட்டில் தினம் தினம் பணம் நிறைவாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்யலாம். இரண்டு வெற்றிலைக்கு நடுவில் பணத்தை இப்படி வையுங்கள். பிறகு பாருங்கள் மூன்றே மாதத்தில் உங்களுடைய நிதி நிலைமையானது தலைகீழாக மாறி இருக்கும்.
நிதிநிலைமை உயர பரிகாரம்
மகாலட்சுமியை நன்றாக பிரார்த்தனை செய்து, நான்கு வெற்றிலை வாங்கிக் கொள்ளுங்கள். சுத்தமான வெற்றிலையாக இருக்க வேண்டும். வெற்றிலைக்கு மேலே இருக்கும் ஈரத்தை ஒரு துண்டை வைத்து நன்றாக துடைத்து விடுங்கள். கூடவே இரண்டு கொட்டைப்பாக்கும் வாங்கிக் கொள்ளவும்.
முதலில் இரண்டு வெற்றிலை, அதன் மேலே ஒரு ரூபாய் நோட்டு, ரூபாய் நோட்டுக்கு மேலே இரண்டு கொட்டைப்பாக்கு, அதற்கு மேலே இரண்டு வெற்றிலை வைத்து, அப்படியே சுருட்டி நூல் போட்டு கட்டி பணம் வைக்கும் பெட்டியிலோ பணம் வைக்கும் பர்சிலோ, வைக்க வேண்டும். கூடவே வாசனைக்காக 2 ஏலக்காய், 2 கிராம்பு போட்டு வைக்கலாம். ஒரு மஞ்சள் துணியில் இந்த வெற்றிலையை போட்டு, ஏலக்காய் கிராம்பு போட்டு, அந்த மஞ்சள் பைக்குள் சில ரூபாய் நோட்டுகளையும், சிலரை காசுகளையும் போட்டு வைக்கலாம்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து இந்த பணத்தை உங்களுடைய தேவைகளுக்கு செலவு செய்து கொள்ள வேண்டும். இதையே வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வாடிய வெற்றிலைகளை மட்டும் மாற்றிக் கொண்டே இருங்கள். இந்த பரிகாரத்தை செய்பவர்கள், வீட்டில் பண சுழற்சியானது அதிகரிக்கும். பணம் செலவாவது மட்டுமல்லாமல், செலவான தொகைக்கு இரட்டிப்பு மடங்காக பணம் உங்கள் கையை வந்து சேரும்.
இதையும் படிக்கலாமே: தங்கம் சேர வளர்பிறை வெள்ளிக்கிழமை பரிகாரம்
அந்த காலத்தில் பாட்டிமார்கள் வெற்றிலை பாக்கை சுருக்குப் பையில் வைத்திருப்பார்கள். கட்டு கட்டாக பணத்தையும் சுருட்டி அந்த சுருக்கு பையில் வைத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று பெண்கள் கையிலும் பணம் இல்லை. ஆண்கள் கையிலும் பணம் இல்லை. காரணம் வெற்றிலை பாக்கு நம் கையில் இல்லை. நம்பிக்கை இருந்தால் நாளைய தினம் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமையிலேயே இந்த பரிகாரத்தை துவங்கலாம். உங்களுடைய செல்வ வளமும் வளர்பிறை நிலவு போல வளர்வதை கண்கூடாக காணலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.