
பெண்கள் அனைவருக்குமே தங்களுடைய முகமும் உடலும் அழகாகவும் பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அதிலும் பட்டுப்போன்ற வழுவழுப்பான மேனியை பெற வேண்டும் என்பது பலரின் ஆசையாக கூட இருக்கும். இதனால் தான் பல பேரும் சினிமா நடிகைகளை போல் மாற வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இதற்காக நாம் அதிக அளவில் செலவு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. பியூட்டி பார்லர் போக வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. கடையில் கிடைக்கக்கூடிய இரண்டே இரண்டு பொருட்களை வைத்து நம்முடைய முகத்தை பட்டு போல மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற முடியும். அந்த பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
பட்டு போன்று மென்மையாக வழு வழுப்பாக இருக்கக்கூடிய சருமம் என்பது நடிகைகளுக்கு மட்டுமே இருக்கும் என்று பலரும் நினைத்திருப்பார்கள் அல்லது அதற்காக அதிக அளவில் செலவு செய்ய வேண்டும் என்றும் நினைத்திருப்பார்கள். இந்த அனைத்து எண்ணங்களையும் முற்றிலுமாக நீக்கி மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இரண்டை இரண்டு பொருட்களை வைத்து நாமும் நடிகைகளை போல அழகாக மாற முடியும்.
இதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய இரண்டு பொருட்கள் வசம்பு, விரலி மஞ்சள் மட்டும் தான். வசம்பு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். விரலி மஞ்சள் அனைத்து கடைகளிலும் கிடைக்கும். இரண்டையும் சமமான அளவு வாங்கிக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டோ அல்லது மிஷனில் கொடுத்தோ பவுடராக மாற்றிக்கொள்ள வேண்டும்.
தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பாக இந்த பொடியை ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு போட்டு அதை பேஸ்ட் ஆக மாற்றுவதற்கு காய்ச்சாத பசும்பாலை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதை உங்களுடைய முகம் கைகால் உடம்பு என்று அனைத்திலும் தடவிக் கொள்ள வேண்டும். 15 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். 15 நிமிடத்தில் இந்த பேக்கானது காய்ந்து விடும்.
பிறகு பசும்பாலை தொட்டு நம்முடைய முகம், உடல் முழுவதும் நன்றாக கீழே இருந்து மேல்புறமாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பெண்களுக்கு இருக்கக்கூடிய தேவையற்ற முடிகள் அனைத்தும் நீங்கும். கை, கால், முகங்கள் போன்ற இடங்களில் இருக்கக்கூடிய அனைத்து முடிகளும் நீங்குவதோடு வழுவழுப்பான, பொலிவான சருமம் கிடைக்கும். இதை தினமும் தொடர்ச்சியாக இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் செய்யும் பொழுது நம்முடைய உடல் முழுவதும் பட்டு போல மின்ன ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே பொலிவான சருமத்தை பெற உதவும் தக்காளி.
இந்த இரண்டு பொருட்களும் பல மருத்துவ குணம் மிகுந்த பொருட்கள். மேலும் இது நம்முடைய அழகை பராமரிக்கக் கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது. இதனால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது என்பதால் இந்த பேக்கை முயற்சி செய்து பட்டு போன்று சருமத்தை பெற்றுக்கொள்ளலாம்.