- Advertisement -
- Advertisement -

இந்தப் பெயர், புகழ், பட்டம், பதவி, இவையெல்லாம் நமக்கு கிடைக்கவில்லை என்றாலும், நமக்கு பெருசாக தெரியாது. ஆனால் ஒரு வேலையில் இருக்கும் போது, நமக்கு பிறகு சேர்ந்தவன், நம்மை விட வயதில் சிறியவன், அவனுக்கு அந்த பட்டமும் பதவியும் கிடைக்கும்போது தான், அதனுடைய வலி வேதனை என்ன என்பது நமக்கு தெரியும். இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு, இவ்வளவு நாள் உழைத்து, அந்த பதவிக்கு கிடைப்பதற்கு உண்டான அத்தனை தகுதி நமக்கு இருக்கிறது.

ஆனால் நாம் இருக்க வேண்டிய இடத்தில் இன்று வேறு ஒருவன் இருக்கின்றான். அதுவும் நம்முடைய வயதில் சிறியவன், தகுதியில் சிறியவன். அறிவாற்றலிலும் சிறியவன். அந்த சமயத்தில் நமக்கு ஒரு கஷ்டம் வரும் பாருங்க. அதை வார்த்தையால் சொல்ல முடியாது. வாழ்க்கையில் நம்மால் மட்டும் முன்னேற முடியவில்லை.

- Advertisement -

இவ்வளவு நாள் கஷ்டப்படும் பலன் கிடைக்கவில்லையே, என்று வருத்தப்படக் கூடிய நிறைய பேர் இருக்கிறார்கள். அதற்காக பெயர் புகழ் பட்டம் பதவி கிடைத்தவர்களை பார்த்து பொறாமைப்பட வேண்டும் என்பது கிடையாது. இருந்தாலும் இந்த கஷ்டத்தை அனுபவிப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும் அதனுடைய வலியும் வேதனையும்.

அதேபோல சில வீடுகளில்பெற்றவர்களுக்கு கஷ்டம் இருக்கும். தன்னுடைய பிள்ளைகள் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். உயர்ந்த பதவியில் அமர வேண்டும், அவர்களுக்கான மதிப்பும் மரியாதையும், பதவியும் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும். அவர்கள் செய்யும் தொழிலில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று ஆசைகள் இருக்கும். இப்படி உங்களுக்கு எந்த ஆசைகள் இருந்தாலும் சரி, அதை நிறைவேற்றிக் கொள்ள சொல்ல வேண்டிய எளிமையான ஒரு வார்த்தை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

பதவி உயர்வுக்கான மந்திரம்

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இருக்கும் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. ஒவ்வொரு பெயரை உச்சரிக்கும் போதும் ஒவ்வொரு பலன் நமக்கு கிடைக்கும். விஷ்ணு சகஸ்ரநாமத்தில் இருக்கும் இந்த ஒரு வரியை உச்சரித்தால் பதவி உயர்வு கிடைக்கும். விஷ்ணு சகஸ்ரநாமத்தில் இருந்து எடுக்கப்பட்ட 1 வார்த்தை தான் இது. இந்த ஒரு வார்த்தையை தினமும் எவர் ஒருவர் சொல்கிறீர்களோ அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப, அவர்கள் செய்யும் வேலை, செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றமும், பட்டம் பதவி பெயர் புகழும் கிடைக்கும். நீங்கள் தினமும் எழுந்து சொல்ல வேண்டிய வார்த்தை இதுதான்.

‘ஆதி தேவாய நமஹ !’ காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்ற முடியும் என்றால், விளக்கு ஏற்றி குல தெய்வத்தை ஒருமுறை நினைத்து விட்டு இந்த மந்திரத்தை சொல்லுங்கள். முடியாது என்றால் பூஜை அறையில் இருக்கும் இறைவனை இருக்க கைகூப்பி வணங்கி இந்த மந்திரத்தை 27 முறையோ 51 முறையோ உங்களால் எத்தனை முறை சொல்ல முடியுமோ சொல்லிவிட்டு அன்றைய நாளை துவங்கி பாருங்கள். அன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அல்லது எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, இந்த நாமத்தை நீங்கள் சொல்லலாம்.

- Advertisement -

பதவி உயர்வை எதிர்பார்த்து முழுமூச்சோடு காத்துக் கொண்டு இருக்கின்றோம். பட்டியலில் என்னுடைய பெயர் தான் முதலில் இருந்தது, எனக்கான பதவி உயர்வு தான் இது. ஆனால் கடைசி நிமிடத்தில் வேறு ஒருவருக்கு இந்த பதவி உயர்வு மாற்றப்பட்டது என்று சொல்லும் நபர்கள் எல்லாம் வாழ்க்கையில் மனம் உடைந்து போயிருப்பார்கள்.

இதையும் படிக்கலாமே: கார்த்திகை மாதம் சிவன் கோவில் தானம்

நினைக்கும் நேரத்தில் எல்லாம் இந்த மந்திரத்தை நீங்கள் சொல்லிக் கொண்டே இருந்தால், உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு நிச்சயம் உங்கள் கையை வந்து சேரும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை நிச்சயம் உங்கள் கையை வந்து சேரும். உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் கொடுக்கப்படும். இந்த வார்த்தை ஒரு வரப் பிரசாதம். 48 நாள் தொடர்ந்து இந்த வார்த்தையை படிக்கும் போது உங்களுக்கே வாழ்க்கையில் நிச்சயம் நல்ல பலன் தெரியும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -