- Advertisement -
கிரிக்கெட்

Indian air force attack : விமான படை தாக்குதல் எதிரொலி : அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை

புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்திய விமானப்படை இன்று அதிகாலை சரியாக 3.30 மணி அளவில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தியது. பால்கோட் என்னும் பகுதியில் நடந்த இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதல் மிராஜ் 2000 எனும் 12 போர் ரக விமானங்கள் மூலம் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 1000 கிலோ வெடிகுண்டை ஜெய்ஷ்-இ-முகமது முகாம்களின் மீது வீசி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்த முகம் முழுவதும் அழிந்து விட்டதாக தகவல்கள் வெளியானாலும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வளவே பெரிய சேதம் எதுவும் இல்லை என்று மழுப்பி வருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இந்திய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

- Advertisement -

இந்த அவசரக்கூட்டம் இஸ்லாமாபாத்தில் நடக்கவிருப்பதாகவும், அந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு மற்றும் போர்சூழல் குறித்தும் பேசப்பட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்திய வெளியுறவு செயலர் விஜய் கோகலே இந்திய அரசாங்கத்திடம் தாக்குதல் குறித்த விளக்கத்தினை அளித்துள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் அணி திருப்பி போர் தொடுக்கும் என்ற நிலை உண்டாகுமோ என்ற நிலை இருந்து வருகிறது.

இருப்பினும், இந்தியாவின் விமானப்படை மற்றும் ராணுவப்படை ஆகியவை தற்போது தயாராக இருக்கிறது. ஆகையால், போர் சூழல் ஏற்பட்டதால் அதற்கு தக்க பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது. இருப்பினும், வெளியுறவுத்துறை பேச்சுவார்த்தைக்கு பின்பே முக்கிய முடிவுகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Indian air force attack : தாக்குதலுக்கான காரணம் இதுதான். இதற்காகவே முன்கூட்டி தாக்குதல் நடத்தினோம் – வெளியுறவு செயலர் டெல்லியில் விளக்கம்

- Advertisement -
Published by