- Advertisement -
- Advertisement -

நம் வாழ்க்கையில் திடீரென சில சம்பவங்கள் நம்மை நிலை குலைய செய்து விடும். நல்ல நிலையில் இருப்பவர்கள், ஒரு சிறு குறுகிய காலகட்டத்தில் எல்லாவற்றையும் இழந்து பெரும் பண நஷ்டத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். செய்யும் எல்லாவற்றிலும் தோல்வியை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக நிறைய நஷ்டங்களை பார்த்திருப்போம். இப்படியான நஷ்டங்கள் வருவதற்கு பின் உள்ள காரணம் என்ன? என்பதை ஆன்மீக ரீதியாக இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் அறிவோம் வாருங்கள்.

கடவுள் திடீரென ஒருவருக்கு பண நஷ்டத்தையும், தொழில் நஷ்டத்தையும் கொடுக்கிறார் என்றால் மிகப்பெரிய ஒரு விஷயத்திலிருந்து நம்மை காப்பாற்றுகிறார் என்று அர்த்தம். சாலையில் செல்லும் பொழுது திடீரென கல் தடுக்கி ஒருவர் கீழே விழுந்து விடுகிறார். சிறு காயம் ஏற்பட்டு இரத்தமும் அவருக்கு வழிந்து கொண்டிருக்கிறது. அடுத்த கனமே அவர் இருந்த இடத்தை விட்டு கீழே தடுக்கி விழாமல் இருந்திருந்தால், பெரிய பாறாங்கல்லே அவர் மீது விழுந்து இறந்து போயிருப்பார். இந்த இடத்தில் அந்த சிறு காயத்தை நினைத்து ரத்தம் வழிகிறதே என்று வருத்தப்பட வேண்டுமா? அல்லது உயிர் தப்பிவிட்டோமே என்று சந்தோஷப்பட வேண்டுமா?

- Advertisement -

கடவுள் நமக்கு சில கெட்ட விஷயங்களை செய்வது, பெரிய விஷயங்களில் இருந்து பாதுகாப்பாக நம்மை காப்பாற்றுவதற்காக மட்டுமே ஆகும். அது போல ஒருவருக்கு பண நஷ்டம் அல்லது தொழில் நஷ்டம் இரண்டுமே ஒரே நேரத்தில் மிகப் பெரிய இடியை கொண்டு வந்து உங்களுக்கு இறக்கினால் கவலைப்படாமல் அமைதியாக இருங்கள். உங்கள் குடும்பத்தில் இருந்து ஏதோ ஒரு உயிர் போக இருக்கிறது, அதிலிருந்து காப்பாற்றுவதற்காகவே கடவுள் இந்த சோதனையை உங்களுக்கு கொடுத்திருக்கிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு இஷ்ட தெய்வத்தை வழிபடுவார்கள். உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் உடைய சக்தியால் மட்டுமே உங்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறும். நீங்கள் முருக பக்தர் அல்லது சிவபக்தராக இருந்தால், முருகன் அல்லது சிவனால் இந்நிகழ்வு உங்களுக்கு நடக்கும். பண நஷ்டம், தொழில் நஷ்டம் ஒரே அடியாக நெருக்கடி கொடுக்கிறது என்ற நொடிந்து போகாமல், மிகப் பெரிய இழப்பிலிருந்து நம்மை இறைவன் காப்பாற்றி இருக்கிறார் என்று உங்களுடைய முயற்சியை கைவிடாமல், மீண்டும் மீண்டும் எழுந்து சிகரத்தை அடைவதற்கான வழியை தேடுங்கள்.

- Advertisement -

உயிர் பலியை ஏற்படுத்தி விடக்கூடாது. அந்த குடும்பத்திற்கு மிகப்பெரிய துன்பத்தை கொடுத்து விடக்கூடாது என்பதற்காகவே அதற்கு பதிலாக பணத்தை ஈடாக தெய்வம் கேட்கிறது. ஒரு உயிருக்கு முன்பு பணமோ, தொழில் நஷ்டமோ நமக்கு பெரிதாக இருப்பதில்லை. வீட்டிலிருந்து யாராவது ஒருவருக்கு ஏதாவது ஆகி இருந்தால் என்ன செய்து கொண்டிருப்பீர்? குடும்பத்தில் ஒருவரை இழந்தாலும், அந்த குடும்பமே நிலைகுலைந்து போய்விடும். எனவே தொழில் நஷ்டம், பண நஷ்டம் திடீரென ஏற்பட்டால் இது போல நினைத்துக் கொண்டு மனதை தைரியப்படுத்திக் கொள்ளுங்கள். இஷ்ட தெய்வத்தை தொடர்ந்து ஆலயம் சென்று வழிபடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
கடன் தீர்க்கும் ஆஞ்சநேயர் செந்தூரம்

தினமும் விளக்கேற்றி வழிபடுவது தான் நல்ல பலன் தரும், எனவே வெறுமனே சென்று வழிபடாமல் விளக்கு ஏற்றி வைத்து, இஷ்ட தெய்வத்திடம், எந்த நிலையிலும் உன்னை நான் நம்புகிறேன் என்று கைகூப்பி மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள். பணம் நஷ்டம், பொருள் நஷ்டம் மட்டுமல்ல, எந்த ஒரு கவலையில் நீங்கள் இருந்தாலும், கடவுளை நொந்து கொள்ளாமல் ஏதோ ஒரு விஷயத்தில் இருந்து நம்மை காப்பாற்றவே இப்படி நடக்கிறது என்று தைரியத்தை வரவழைப்பது தான் வெற்றியைத் தரும்.

- Advertisement -