- Advertisement -
மந்திரம்

பணவரவை அதிகரிக்கும் சுக்கிர மந்திரம்

- Advertisement -

இந்த உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும் வறுமையாக வாழ வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். தங்களுடைய வருமானத்தை அதிகரித்துக் கொண்டு நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். வசதியாக வாழ வேண்டும் என்று விரும்புவர்களும் இருக்கிறார்கள். இந்த வசதி வாய்ப்பிற்கும் சுகபோகத்திர்க்கும் அதிபதியாக திகழக்கூடியவர் சுக்கிர பகவான். சுக்கிர பகவானின் அருள் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவர் எந்த வகையிலும் கஷ்டப்பட மாட்டார், சுகவாசியாக வாழ்வார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கும் பணவரவை அதிகரிப்பதற்கும் கூற வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணவரவை அதிகரிக்கும் மந்திரம்

அன்றாடம் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு நமக்கு தினமும் வந்து கொண்டு இருந்தாலே எந்தவித கவலையும் நமக்கு இருக்காது என்றே கூறலாம். அப்படி தினமும் நமக்கு தேவைப்படக்கூடிய பணவரவை தரக்கூடியவராக திகழ்ந்தவர் தான் சுக்கிர பகவான். சுக்கிர பகவானுக்கு உகந்த கிழமையாக திகழ்வதுதான் வெள்ளிக்கிழமை. சுக்கிர பகவானும் மகாலட்சுமி தாயார் உடன்பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். மேலும் சுக்கிர பகவானின் அதிதேவதை மகாலட்சுமி தாயார் திகழ்கிறார். அதனால் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாரையும் சுக்கிர பகவானையும் நாம் வழிபாடு செய்வது என்பது நம் வாழ்க்கையில் செல்வ செழிப்பிற்கும், சுகபோகத்திர்க்கும் எந்தவித குறையும் இல்லாமல் இருக்கும். வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர பகவானை எந்த முறையில் வழிபாடு செய்ய அவரின் அருளை பெற முடியும் என்று தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் வரக்கூடிய சுக்கிர ஹோரில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. ஒருவேளை அந்த நேரத்தில் தங்களால் செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியில் இருந்து இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய ஒரே ஒரு பொருள் வெள்ளை சர்க்கரை அல்லது கற்கண்டு. வெள்ளை என்பது சுக்கிர பகவானுக்குரியது. மேலும் சுக்கிர பகவான் இனிப்பு பிரியர் என்பதால் சுக்கிர பகவானை வழிபாடு செய்ய வேண்டும், சுக்கிர பகவானின் அருளைப் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய டைமண்ட் கற்கண்டு நெய்வேதியமாக வைத்து பிறருக்கு பிரசாதமாக தருவார்கள்.

அதனால் நாமும் சுக்கிர பகவானை வழிபாடு செய்யும்பொழுது வெள்ளை நிற சர்க்கரை அல்லது டைமண்ட் கற்கண்டு பயன்படுத்த வேண்டும். ஒரு ஸ்பூன் அளவிற்கு வெள்ளை சர்க்கரை எடுத்து நம்முடைய வலது உள்ளங்கையில் வைத்து மூடிக்கொண்டு சுக்கிர பகவானை மனதார நினைத்து அவருக்குரிய பிஜாசுர மந்திரத்தை குறைந்தபட்சம் 10 நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் 20 நிமிடம் வரை கூறலாம். இந்த மந்திரத்தை பூஜை அறையில் அமர்ந்து கொண்டு தான் கூற வேண்டும் என்று இல்லை. எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து கொண்டு கூறலாம். முழு மனதோடு கூற வேண்டும் என்பது மட்டும்தான் முக்கியம்.

- Advertisement -

பூஜை அறையில் அமர்ந்து கூறுபவர்களாக இருக்கும் பட்சத்தில் ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து பிறகு கூறுவது என்பது சற்று கூடுதல் பலனை தரும் என்றே கூறலாம். மந்திரத்தை கூறிய பிறகு கையில் இருக்கக்கூடிய இந்த சர்க்கரையை மரம் செடிகளுக்கு அடியில் போட்டுவிட வேண்டும். இப்படி போடுவதன் மூலம் அந்த சர்க்கரையை எறும்புகள் உணவாக எடுத்துக் கொள்ளும். இந்த முறையில் நாம் தொடர்ச்சியாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுக்கிர பகவானை வழிபாடு செய்யும்பொழுது சுக்கிர பகவானின் அருள் நமக்கு கிடைக்கும். அதன் மூலம் வசதி மிகுந்த வாழ்க்கையை வாழ்வதற்குரிய பணவரவு உண்டாகும்.

மந்திரம்

“ஓம் ஷூம் சுக்ராய நமஹ”

இதையும் படிக்கலாமே: யோகம் தரும் பிரதோஷ மந்திரம்

எளிமையான இந்த சுக்கிர பகவானுக்குரிய மந்திர வழிபாட்டை முழுமனதோடு யார் ஒருவர் தொடர்ச்சியாக செய்து கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் அவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி அடைவதற்குரிய பணவரவு வந்து கொண்டே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -