
ஆதியும் நீயே, அந்தமும் நீயே என்று கூறும் அளவிற்கு அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கக் கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் சிவபெருமான். சிவபெருமான் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை என்று கூட கூறலாம். இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கர்ம வினைகளையும் நீக்கி நற்பெறு பெறுவதற்கு உதவக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் சிவபெருமான். சிவபெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கர்ம வினைகள் நீங்கி நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான செல்வ செழிப்பையும் நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட செல்வ செழிப்பை தரக்கூடிய சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ நாள் அன்று சிவபெருமானின் எந்தப் பெயரை எழுதினால் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பிரதோஷ நாள் என்பது நம்முடைய தோஷங்களை நீக்கக்கூடிய நாள். அப்படி நம்முடைய தோஷங்கள் நீங்கி விட்டால் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வ செழிப்பும் வந்து சேரும் அல்லவா? அதனால் தான் பலரும் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை சுற்றி அனைத்து விதமான தெய்வங்களும், தேவர்களும், சித்தர்களும், ரிஷிகளும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அந்த நேரத்தில் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது சிவபெருமானின் அருளோடு அனைத்து தெய்வங்களின் அருளையும் நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட பிரதோஷ நேரத்தில் செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.
சிவபெருமானை ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்கள் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக பொருட்களை வாங்கி தர வேண்டும். அதேபோல் வில்வ இலைகளையும், வாசனை மிகுந்த மலர்களையும் வாங்கித் தர வேண்டும். இப்படி வாங்கி தருவதன் மூலம் சிவபெருமானின் அருளை நம்மால் பெற முடியும். இது அனைவரும் அறிந்ததே. அதேபோல் தான் பிரதோஷ நேரத்தில் நம்மால் ஆலயத்திற்கு செல்ல இயலவில்லை என்றாலும் வீட்டிலேயே சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்தாலும் சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்பதும் தெரியும். சரி இப்பொழுது பண வசியம் ஏற்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போமா?
இதற்கு நமக்கு சிவபெருமானுடைய ஒரே ஒரு பெயரை மட்டும் எழுதினால் போதும் நமக்கு பண வசியம் வந்துவிடும். இதை குறிப்பாக பிரதோஷ நேரத்தில் எழுத வேண்டும். பிரதோஷ நேரத்தில் நம்மால் எழுத இயலாது என்று நினைப்பவர்கள் இன்று இரவு 12 மணிக்குள் எழுதலாம். எந்த இடத்தில் வேண்டுமானாலும் அமர்ந்து எழுதலாம். எந்த சூழ்நிலையிலும் அமர்ந்து எழுதலாம். சுத்தமாக இருந்தால் தான் எழுத வேண்டும் என்று இல்லை. அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் எழுதலாம். வேலை செய்யும் இடத்திலும் எழுதலாம். பெண்கள் மாதவிடாய் சமயத்திலும் எழுதலாம். எந்தவித தடைகளும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு கோடு போடாத வெள்ளை நிற பேப்பர் வேண்டும். இதில் நாம் சிவபெருமானின் பெயரை எழுதுவதற்கு பச்சை நிற மை கொண்ட பேனா வேண்டும். இவை இரண்டும் இருந்தால் போதும். சிவபெருமானை முழுமனதோடு நினைத்து இந்த ஒரு திருநாமத்தை அந்த பேப்பரில் எழுதி உங்களிடம் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பண நோட்டில் அதாவது 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 500 ரூபாய் என்று உங்களிடம் எந்த பணம் இருந்தாலும் அதற்குள் அந்த பேப்பரை வைத்து சுருட்டி நீங்கள் பணம் வைக்கும் இடத்திலோ, பர்ஸிலோ வைத்துவிட வேண்டும். அதை எப்பொழுதுமே எடுக்கக்கூடாது.
இப்படி நாம் செய்வதன் மூலம் நமக்கு பண வசியம் என்பது ஏற்படும். திடீரென்று அவசர தேவைக்காக பணத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு பணவரவு உண்டாகும். கடன் பிரச்சனை தீர்வதற்குரிய வழி கிடைக்கும். அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகளை திருப்புவதற்கு வழி கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்று கூறிக் கொண்டே செல்லலாம்.
“ஓம் ஸ்ரீ வர்தனாய நமஹ”
இதையும் படிக்கலாமே:தை அமாவாசை அன்று செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்னென்ன?
மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை முழுமனதோடு சிவபெருமானை நினைத்து செய்பவர்களுக்கு பண வசியம் ஏற்படுவதோடு அவர்களுடைய பண தேவைகள் பூர்த்தியடைவதற்குரிய வழியும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.