
உங்கள் பணப் பிரச்சனையை ஜோதிட ரீதியாக தீர்க்க வேண்டும் என்றால் சுக்கிர பகவானை வசியம் செய்தால் போதும். கையில் பணம் புரள தொடங்கி விடும். சுக்கிர பகவானுக்கு உரியது வாசனை நிறைந்த பூக்கள். இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் நீங்கள் பன்னீர் ரோஜா செடியை வாங்கி உங்கள் வீட்டில் வைக்க வேண்டும்.
சின்ன தொட்டியில் பன்னீர் ரோஜா செடியை வாங்கி வைத்த பிறகுதான் இந்த பரிகாரத்தை செய்ய தொடங்க முடியும். இடவசதி இருப்பவர்கள் மண்ணில் பூமியிலேயே ரோஜா செடியை நட்டு கொள்ளலாம். பணம் வேண்டும் என்பவர்கள் சிரமம் பாக்காதீங்க. பன்னீர் ரோஜா செடியை வாங்கி வையுங்க.
இந்த தண்ணீரை தினம் தினம் அந்த செடிக்கு ஊற்றும் போது அந்த செடியும் பூக்களும் வளர்ந்து சந்தோஷமாக இருப்பது போல, உங்களுடைய கையிலும் செல்வ வளம் கொழிக்க தொடங்கி பணம் சேரத் தொடங்கி, நீங்களும் சந்தோசமாக இருப்பீர்கள். அந்த பரிகாரத்தை எப்படி செய்வது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படிப்போமா.
வியாழக்கிழமை இரவு தூங்கும் போது 1 டம்ளர் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த டம்ளர் தண்ணீரிடம் உங்களுக்கு நிறைய பணவரவு கிடைக்க வேண்டும், நீங்கள் செல்வ செழிப்போடு வாழ வேண்டும், அந்த சுக்கிர பகவானின் அனுகிரகம் கிடைக்க வேண்டும் என்று சொல்லுங்கள். டம்பளர் தண்ணீர் நீங்க சொன்னதை எல்லாம் தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும்.
இந்த தண்ணீரை இரவு படுக்கின்ற அறையிலேயே கொஞ்சம் ஓரமாக வைத்து விடுங்கள். கீழே கொட்டி விடாதீர்கள் மறுநாள். வெள்ளிக்கிழமை காலை எழுந்து அதில் 6 பச்சரிசி போடவும். ஆறு அரிசியை அந்த தண்ணீரில் போட்டு அந்த தண்ணீரைக் கொண்டு போய் ரோஜா செடியில் ஊற்றி விட வேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உங்களுடைய சுக்கிர பலம் அதிகரிக்கும். சுக்கிரனை வசியம் செய்வீர்கள். சீக்கிரமாக உங்களுடைய கையில் பணம் காசு சேர தொடங்கிவிடும். கையில் பணம் இல்லை என்ற பேச்சுக்கு இடமே இருக்காது. இது ஒரு எளிமையான சூட்சம வித்தை என்று வைத்துக் கொள்ளுங்கள். இதுபோல எளிமையான பரிகாரங்கள் சில பேருக்கு அபரிவிதமான பலனை கொடுக்கும்.
இதையும் படிக்கலாமே: திக்கற்றவனுக்கு திருச்செந்தூர் முருகனே துணை
தொடர்ந்து ஒரு 11 வெள்ளிக்கிழமை இதே போல பரிகாரத்தை செய்கிறீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களுக்கு அடித்து விட்டால், இந்த பரிகாரத்தை விடாதீங்க இந்த பரிகாரம் உங்களுக்கானது மட்டும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறவும்.