
ஒருவருடைய வாழ்க்கை சீரும் சிறப்போடும் நலமாக வளமாக செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்றால் அவர்கள் வீட்டில் அதிர்ஷ்டமும் செல்வ கடாட்சமும் நிறைவாக இருக்க வேண்டும். அதிர்ஷ்டத்தையும் செல்வ கடாட்சத்தையும் நமக்கு கொடுக்கக்கூடிய கடவுள் குபேரர். இந்த குபேரரை எளிமையாக வசியம் செய்யக்கூடிய ஒரு வரி மந்திரம் உள்ளது.
இந்த மந்திரத்தை எவர் ஒருவர் லட்சத்து எட்டு முறை உச்சரித்து சித்தி செய்து வைத்துக் கொள்கிறீர்களோ, அவர்களுடைய வாழ்நாளில் பணக்கஷ்டம் என்பதே வராது. லட்சத்து எட்டுமுறையும் ஒரே நாளில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒவ்வொரு நாள் உங்களால் முடிந்த எண்ணிக்கையில் சொன்னால் போதும். ஒரு நாள் 108 முறை, ஒரு நாள் 58 முறை, நேரம் இல்லாத சமயத்தில் 27 முறை இப்படி இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்தாலும் தவறு கிடையாது.
இந்த மந்திரத்தை லட்சத்தில் எட்டு முறை உச்சரிக்கும் போது இந்த மந்திரம் உங்களுக்கு தானாக சித்தியாகிவிடும் பணவரவு தானாக சீராக துவங்கும். இந்த மந்திரத்தை முதல் நாள் உச்சரிக்கத் துவங்கிய முதலே பணவரவில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். இந்த மந்திரத்தை சொல்லுவதற்கு உரிய நேரம் பிரம்ம முகூர்த்த நேரம். இந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல உங்கள் வாழ்வில் இருக்கும் வறுமை படிப்படியாக குறைந்து கொண்டே வரும். வருமானம் படிப்படியாக பெருகிக்கொண்டே இருக்கும்.
இதை முதல் 48 நாட்களிலேயே நீங்கள் உணர்ந்து விடுவீர்கள். சரி இத்தனை சிறப்பு அம்சங்கள் நிறைந்த அந்த குபேரன் மந்திரம் தான் என்ன இன்னும் அதை சொல்லவில்லையே இப்போதே அந்த மந்திரத்தை பார்த்துவிடலாம்.
ஓம் ருத்ர குபேர வசீகராய நம !
இதையும் படிக்கலாமே: நாக சதுர்த்தி சிறப்பு வழிபாடு
ஒரே ஒரு வரி மந்திரம் எல்லோராலும் உச்சரிக்கக் கூடிய மந்திரம். தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் சித்தமத்தமாக இருக்கும் பட்சத்தில் பல் தேய்த்து முகம் கழுவி அமைதியான இடத்தில் அமர்ந்து கண்களை மூடி உங்களுக்கு நிறைய பணம் வருமானமாக வருகிறது என்று கற்பனை செய்து கொண்டு, இந்த மந்திரத்தை சொல்ல துவங்குங்கள் போதும். பிறகு எல்லா நல்லதையும் அந்த பிரபஞ்சம் உங்களுக்கு வாரி வாரி கொடுக்கும். நல்லதோடு சேர்த்து நிறைய பணமும் உங்கள் வீட்டில் குவியும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவு நிறைவு செய்து கொள்வோம்.