
இன்று ஆயிரம் ரூபாய் நம்முடைய பீரோவில் இருக்கிறது என்றால், அந்த பணம் குட்டி போட்டு ஒரு மாதத்திற்குள் பத்தாயிரம் ரூபாயாக மாற வேண்டும். ஒரு பவுன் தங்க நகை இருக்கிறது என்றால், அந்த தங்க நகை குட்டி போட்டு இரண்டு பவுன் தங்க நகையாக மாற வேண்டும். இதற்கு என்ன அர்த்தம்.
பணத்தையும் நகையையும் நாம் இரண்டு மடங்காக சேர்க்க வேண்டும். அதற்கு உண்டான எளிய பரிகாரத்தை இன்று நாம் பார்க்கப் போகின்றோம். பின் சொல்லக்கூடிய இந்த பரிகாரங்களை பின்பற்றி வந்தாலே உங்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும்.
இரவு தூங்கும் போது, சனியன் ஆதிக்கம் நம் மீது இருக்கிறது. இருள் நம்மை சூழ்கிறது. சூரியன் உதயத்திற்கு முன்பாக எழுந்து குளித்து விடுங்கள். உங்களை பிடித்த சனி உங்களை விட்டு நீங்கும். குளிக்கும் போது வலது கையால், வலது கால் முட்டியில் இருந்து பாதம் வரை தேய்த்து கழுவ வேண்டும். இடது கையால், இடது கால் முட்டியில் இருந்து பாதம் வரை தேய்த்து கழுவ வேண்டும்.
தினமும் இப்படி உங்கள் கால்களை கழுவும் போது உங்கள் மேல் இருக்கும் சனி பகவான் உங்களை விட்டு விலகுவதாக அர்த்தம். கருங்கல் உங்களுக்கு கிடைக்கும் என்றால், அந்த கருங்கல்லை கொண்டு வந்து குளியல் அறையில் வைத்து கருங்கல் மீது அமர்ந்து குளிப்பது சனி பகவானின் தாக்கத்தை குறைக்கும்.
சங்குப்பூ இருந்தால் குளிக்கின்ற தண்ணீரில் அந்த பூவை போட்டு குளிப்பது சனி பகவானின் ஆசீர்வாதத்தை பெற்றுத்தரும். எப்போதெல்லாம் சோம்பேறித்தனம் இருக்கிறதோ எப்போதெல்லாம் சனி பகவானின் ஆதிக்கத்தால் உங்களுக்கு பிரச்சனை வருகிறதோ, அப்போதெல்லாம் நேவி ப்ளூ கலரில், ஆடை அணிந்து கொள்ளுங்கள். கரு நீல கலர் ஆடை அணிவது சிறப்பு. உங்களுடைய வீட்டில் இருக்கும்
தங்க நகைகள், பணம் வெள்ளி எதையெல்லாம் வைத்திருக்கிறார்களோ அதை எல்லாம் ஒரு தட்டில் பரப்பி வைத்துவிட்டு, சாம்பிராணி தூபம் போட வேண்டும். மருதாணி இலை, வெண்கடுகு, பச்சை கற்பூரம், சாம்பிராணி தூள், இவைகளை சேர்த்து இந்த புகையை குளிகை நேரத்தில் அந்த பொருட்களுக்கு காண்பிக்க வேண்டும்.
இதை செய்தாலே போதும் உங்கள் வீட்டில் இருக்கும் பணம் நகைகள் குட்டி போடத் தொடங்கி, செல்வ வளம் பல மடங்காக பெருக தொடங்கிவிடும். மிக மிக எளிமையான பரிகாரம்தான். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். குளிகை நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்யும் போது நம்முடைய தங்க நகை பெருகுவதோடு சனி பகவானுடைய மனதும் சாந்தமடைவார்.
இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி பிரியாமல் இருக்க பரிகாரம்
ஜாதக கட்டத்தில் எப்பேர்ப்பட்ட கோளாறுகள் இருந்தாலும், நம் வீட்டில் இருக்கும் தங்கமும் நகையும் நம் கையில் இருந்து பறிபோகாமல் நம் வீட்டிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்.