- Advertisement -

தரித்திரம் நீங்கி பணவரவு ஏற்பட வெற்றிலை பரிகாரம்

- Advertisement -

வீட்டில் எவ்வளவு முயற்சி செய்தாலும், உழைத்தாலும் அதற்குரிய பலனை பெற முடியவில்லை, பணவரவு வருவதில்லை, பணவரவு வந்தாலும் அது கையில் தங்கவில்லை, தொழிலில் முன்னேற்றம் ஏற்படவில்லை, வேலையில் சம்பள உயர்வு எதுவும் கிடைக்கவில்லை, என்ன முயற்சி செய்தாலும் அதற்குரிய பலன் கிடைக்கவில்லை, நன்மைகள் நடைபெறவில்லை என்று பலரும் புலம்புவார்கள். அப்படிப்பட்ட நிலையை தான் நாம் தரித்திர நிலை என்று கூறுவோம். இந்த தரித்திர நிலையை நீக்கி லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தவும் பணவரவை அதிகரிக்கவும் வெற்றிலையை வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணவரவு ஏற்பட வெற்றிலை பரிகாரம்

வெற்றிலை என்றாலே வெற்றிகளை தருவது என்று அர்த்தம். வெற்றிலையை வைத்து முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது உண்டு. அதேபோல் ஆஞ்சநேயருக்கு மாலை கட்டி போடுவதும் உண்டு. வெற்றிலையை வைத்து பல பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும் செய்யப்படுகிறது. சாதாரணமாக நாம் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் பொழுது கண்டிப்பான முறையில் வெற்றிலை பாக்கு வாழைப்பழம் இவற்றை வைத்து வழிபாடு செய்வோம். அந்த அளவிற்கு சிறப்பு மிகுந்ததாகவே வெற்றிலை கருதப்படுகிறது.

- Advertisement -

இந்த வெற்றியை வைத்து நாம் செய்யக்கூடிய பரிகாரமானது நம்முடைய தரித்திர நிலையை மாற்றும் என்று கூறப்படுகிறது. பொதுவாகவே ஒருவருடைய வீட்டில் வெற்றிலை வளர்கிறது என்றால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் என்பது ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் வெற்றிலையில் லட்சுமி வீற்றிருக்கிறாள் என்பதுதான். அப்படி லட்சுமி வீற்றிருக்கக்கூடிய வெற்றிலையை வைத்து நாம் செய்யக்கூடிய எளிமையான பரிகாரம் லட்சுமி கடாட்சத்தையே நம் வீட்டிற்கு கொண்டுவரும் என்று கூறினால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட ஒரு பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

இந்த பரிகாரத்தை என்றைக்கு வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செய்வது என்பது சிறப்பு. தொடர்ச்சியாக 12 வாரங்கள் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு 11 அல்லது 21 வெற்றிலைகள் வேண்டும். முதல் வாரம் எத்தனை எண்ணிக்கையில் வெற்றிலையை வைத்து பரிகாரம் செய்கிறோமோ அதே எண்ணிக்கையில் தான் மற்ற வாரங்களிலும் செய்ய வேண்டும்.

- Advertisement -

காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு ஒரு துணியை வைத்து வெற்றிலையை துடைக்க வேண்டும். வெற்றிலையை கழுவக்கூடாது. இப்படி துடைத்த பிறகு அதை ஒரு தாம்பாள தட்டில் வைத்து பூஜை அறையில் வைத்துவிட்டு தீபம் ஏற்றி எப்பொழுதும் போல் வழிபாட்டை நிறைவு செய்த பிறகு ஒவ்வொரு வெற்றிலைக்கும் மையப் பகுதியில் சந்தனம் குங்குமம் வைத்து உங்களுடைய கஷ்டங்கள் என்னென்ன இருக்கிறதோ அவை அனைத்தையும் கூற வேண்டும். இந்த வழிபாட்டை குலதெய்வம், இஷ்ட தெய்வம் அல்லது விநாயகப் பெருமான் இவர்கள் மூவரில் யாரையாவது ஒருவரை மனதார நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும்.

இப்படி வழிபாடு செய்து முடித்துவிட்டு அந்த வெற்றிலையை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். அன்று மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றுவோம் அல்லவா? அவ்வாறு விளக்கேற்றி பூஜை அனைத்தும் முடித்த பிறகு ஒரு வெள்ளை நூலை எடுத்து அதில் மஞ்சள் தடவி வெற்றிலையை மாலையாக கட்ட வேண்டும். கட்டிய இந்த மாலையை நம் வீட்டில் நிலை வாசலில் மாட்டி விட வேண்டும்.

- Advertisement -

அடுத்த வாரம் இதே முறையில் வழிபாடு செய்ய வேண்டும். பழைய வெற்றிலை மாலையை கழட்டி கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். அதில் இருக்கக்கூடிய நூலை நம்முடைய கைகளில் கட்டிக் கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய தரித்திர நிலை அனைத்தும் நீங்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும்.

இதையும் படிக்கலாமே: தரித்திரம் விலக பௌர்ணமி நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்

வெற்றிலையை வைத்து பல பரிகாரங்களும் வழிபாடும் முறைகளும் செய்யப்பட்டாலும் இந்த எளிமையான பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும். மகாலட்சுமி கடாட்சம் வீட்டில் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -