
எப்போதுமே வீட்டில் இருக்கக்கூடிய பெண்களுடைய மனது குழப்ப நிலையில் இருக்கவே கூடாது. அது அந்த குடும்பத்திற்கே பெரிய அளவில் பாதிப்பை கொடுத்து விடும். கணவருக்கு மனக்குழப்பம் வரும் சமயத்தில், ஆறுதலாக இருந்து அந்த குழப்பத்தை தீர்க்கக் கூடிய வேலையை நிச்சயம் ஒரு பெண்ணால் செய்துவிட முடியும். ஆனால் எந்த ஒரு பெண்ணின் மனக்குழப்பத்தை தீர்க்கும் சக்தி ஆண்களுக்கு இருந்ததில்லை. இருப்பதற்கான வாய்ப்புகளும் மிக மிகக் குறைவு.
ஒரு பெண், வீட்டில் மன தெளிவு இல்லாமல், குழப்ப நிலையில் இருந்தால் அந்த பாதிப்பு வீட்டில் இருக்கும் அனைவரையும் தாக்கும். ஆகவே உங்களுடைய மன குழப்பம் தீர, உங்களுடைய நிதி நிலைமை சீர்பட பங்குனி உத்திர பௌர்ணமி நாளில் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றிய தகவலைத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
மிக மிக சுலபமான வழிபாடு. இதற்காக நீங்கள் பெருசாக எந்த சிரமமும் பட வேண்டாம். இந்த பூவை கட்டிக்கொண்டு போய் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்பாள் கோவிலுக்கு கொடுத்திருக்க போதும்.
வாசம் நிறைந்த மல்லிப்பூவை வாழைநாறால் உங்கள் கையால் கட்டி உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு கொண்டு போய் உங்கள் கையாலேயே கொடுத்து விட வேண்டும். அம்மன் கோவிலில் இரண்டு விளக்கு போடுங்க. அந்த கோவிலிலேயே சிறிது நேரம் அமர்ந்து உங்களுடைய பிரச்சனைகள் தீர பிரார்த்தனை செய்து கொண்டால், இன்றோடு உங்களுடைய கஷ்டங்கள் தீரும் என்பது நம்பிக்கை.
உங்களுக்கும் உங்களுடைய கணவருக்கும் வாழ்க்கையில் கருத்து வேறுபாடு அதிகமாக இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமை இல்லை என்றாலும், இந்த வழிபாட்டை செய்தால், குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வாய்ப்பு இருந்தால் இன்றைய தினம் ஒரு குண்டுமணி தங்கம், ஒரு குண்டுமணி வெள்ளி வாங்கலாம். வாய்ப்பு இருந்தால் மட்டும்தான்.
வாய்ப்பு இல்லாதவர்கள் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இன்றைய தினம் பெண்கள் புது கொலுசு வாங்கி அணிய அவர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் அடிக்கும் என்ற கருத்தும் பிரபல ஜோதிடர்களால் சொல்லப்பட்டுள்ளது. கணவரின் கையால் கொலுசு வாங்கி கொடுத்து மனைவி காலில் அதை அணிந்து கொண்டால் இன்னும் பெரும் யோகம்தான்.
இந்த நல்ல விஷயத்தை உங்களால் செய்ய முடியும் என்றால் இன்று மாலை நேரத்திற்குள், இன்று இரவு நேரத்திற்குள் ஒரு வெள்ளி கொலுசு வாங்கி காலில் அணிந்து கொள்ளலாம். மிகச்சிறப்பான பலனை தரும். (அதற்காக யாரும் இன்று கணவரிடம் சண்டை போடாதீங்க. இப்பவே கொலுசு வேண்டும் என்று, அவரவர் நிதி நிலைமையை பொருத்து இந்த பரிகாரத்தை செய்யும்).
இன்று நீங்கள் வாங்கும் ஒரு வெள்ளி கொலுசு எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய அளவில் நன்மையை கொடுக்கும். அதாவது இந்த வெள்ளியை இன்று நீங்கள் வாங்கினால், இந்த வருடம் முழுவதும் மேலும் மேலும் தங்கம் வெள்ளி உங்களுடைய வீட்டில் சேரும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை தீர்க்கும் வாராகி வழிபாடு
உங்களுடைய வீட்டில் சின்ன பெண் குழந்தை இருக்கிறது என்றால் அந்த குழந்தைக்கு ஒரு வெள்ளி கொலுசு சின்னதாக வாங்கி போடுங்க. ரொம்ப ரொம்ப நல்லது. நம்பிக்கை இருந்தால் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம், இந்த பௌர்ணமி நாளில் உங்கள் குடும்பத்திற்கு நிறைய நல்லது வந்து சேரும் என்ற தகவுடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.