மனிதன் என்பவன் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதி. அவன் வாழும் இந்த பூமி மற்றும் இன்ன பிற கிரகங்களும் பல லட்ச கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனிலிருந்து வெடித்து சிதறிய கோள்கள் என நவீன விஞ்ஞானம் கூறுகிறது. எனவே மனிதன் மற்றும் அவன் வாழும் இந்த பூமியின் மீதும் விண்ணில் இருக்கும் பிற கோள்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த கிரகங்கள் அனைத்தும் மனிதனின் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அதன் மூலம் அவனது முக்காலத்தையும் அறிந்து கொள்ள கூடிய ஒரு கலை தான் “ஜோதிட கலை”. அந்த ஜோதிடத்தில் பரிகாரங்கள் செய்வது என்பது அனைவருமே கேள்விப்படும் ஒன்று. அது குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்வோம்.
நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் நன்மை தீமைகள் நாம் முற்பிறவியில் செய்த நல்வினை மற்றும் தீவினைகளின் பயன் தான் என வேதங்களை இயற்றிய ஞானிகளின் வாக்காகும். இந்த பரிகாரம் என்பது இறைவனின் பிரதிநிதியாக மக்களுக்கு, அவர்களின் முற்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் பலன்களை கொடுக்கும் நவகிரகங்களின் கடுமை தன்மையை குறைத்து, நன்மைகளை அதிக படுத்தும் ஒரு செயலாகும்.
இந்த பரிகாரம் என்பது ஒரு ஆலய இறைவனுக்கு பூஜை மற்றும் வழிபாடாகவோ அல்லது சக மனிதர்களுக்கும் இன்ன பிற உயிர்களுக்கும் செய்யக்கூடிய உதவிகள் மற்றும் தர்மங்களாக இருக்கலாம். இப்படியான பரிகார சடங்குகளை அதன் மீது முழு நம்பிக்கை வைத்து செய்வதால், செய்பவருக்கு ஏற்படக்கூடிய கெடுதலின் தீவிர தன்மையை குறைக்க முடியும். குறிப்பாக பிறருக்கு தான, தர்மங்கள் அளித்தல் போன்ற பரிகாரங்கள் நமக்கு ஏற்படக்கூடிய எத்தகைய ஆபத்துகளையும் நீக்கும் தன்மை கொண்டது.
இதையும் படிக்கலாமே:
வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்க உதவும் வாஸ்து பரிகாரம்
மேலும் பல சுவாரசியமான ஜோதிடம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் இதையும் படிக்கலாமே