வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்க உதவும் வாஸ்து பரிகாரம்

1523
vaasthu
- விளம்பரம் -

சிலரது வீட்டில் எவ்வளவு பாடுபட்டாலும் செல்வம் சேரவே சேராது. இன்னும் சிலரது வீட்டில் தேவை இல்லாமல் பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். இதற்கான முக்கிய காரணம் வாஸ்து பிரச்னையாக கூட இருக்கலாம். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும் எளிய பரிகாரங்கள் சில இதோ.

vasthu

வாஸ்து மந்திரம்:

- Advertisement -

‘ஓம் நமோ வாஸ்து தேவதையே நமஹ’

இந்த மந்திரத்தை தினமும் 27 முறை ஜபிப்பதால் வாஸ்து பிரச்சனை தீரும்.

வீடு முழுக்க வாரத்தில் இருமுறை சாம்பிராணி புகை போடுவதால். வீட்டில் உள்ள தீயவை அகன்று நன்மை பெருகும்.

sambrani

‘ஓம்’ ஒலி, மற்றும் கந்த சஷ்டி கவசம், லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம், காயத்ரி ஜெபம் இவற்றை வீட்டில் ஒலிக்க விடவும். இதனால் வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சனைகளும் மற்ற பிரச்சனைகளும் தீரும்.

வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் நமது கண்ணனுக்கு தெரியாத இருள் வீட்டில் இருந்து விலகி நன்மை பெருகும்.

velli vilaku

வீட்டில் துளசி செடி வளர்ப்பதால் பிரச்சனைகள் விலகும். அதோடு வீட்டில் கணபதி ஹோமம் செய்வதால் நன்மை பெருகும்.

வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவதால் வாஸ்து பிரச்சனை விலகி நல்ல பலன் கிடைக்கும்.

Advertisement