- Advertisement -
- Advertisement -

நம் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலும், வாழ்க்கையில் துன்பங்கள் வந்தாலும் பரிகாரம் செய்வது வழக்கமாக இருக்கிறது. இப்படி செய்யும் பரிகாரங்கள் உண்மையில் பலிக்குமா? பலிக்காதா? என்கிற சந்தேகம் நமக்குள் எழும். பரிகாரம் செய்யும் பொழுதே இந்த சில சகுனங்களையும், அறிகுறிகளையும் நீங்கள் கவனித்து பார்த்தால் பரிகாரம் பலன் தருமா? இல்லையா? என்பதை நாம் சுலபமாக அறிந்து கொள்ள முடியும் என்று வேதங்கள் கூறுகிறது. பரிகாரம் பலன் தரும் சகுனங்கள் எவை எல்லாம்? என்பதைத்தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

பரிகாரம் செய்யும் பொழுது முதலில் கோவில் மணியோ அல்லது பூஜை மணியோ ஒலிக்கும் சத்தம் கேட்கிறதா? என்று கவனியுங்கள்! அப்படி மணியோசை கேட்டால் இறைவனுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு இருப்பதாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். செய்யக்கூடிய பரிகாரமானது பரிபூரணமாக பூர்த்தி அடையும் என்னும் நம்பிக்கை அடையலாம். அதுபோல பரிகாரம் செய்யும் சமயத்தில் யாராவது கோவில் பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தாலும் நீங்கள் செய்யக்கூடிய பரிகாரம் பூர்த்தி அடையும்.

- Advertisement -

பரிகாரம் செய்யும் இடத்தில் மந்திர ஒலிகளோ அல்லது பக்தி பாடல்களோ கேட்க நேர்ந்தால் அந்த சமயம் உங்களுக்கு இறையருள் கிடைப்பதாக நீங்கள் நம்ப வேண்டும். இறைவனுடைய ஆசீர்வாதம் இருக்கும் பொழுது பரிகாரம் செய்யும் சமயத்தில் இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் கண்டிப்பாக நடக்கும். எந்த ஒரு பரிகாரமும் நம்பிக்கையோடு செய்தால் தான் அது முழு பலன் தரும் என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மையாகும். உங்கள் நம்பிக்கை பாதியும், இறையருள் மீதியும் தான் நீங்கள் கேட்கின்ற வரத்தை கொடுக்க செய்யும்.

பரிகாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது பிராமணர், அர்ச்சகர், பூசாரி என்று யாராவது ஒருவர் உங்கள் முன் வந்து சென்றால், அப்போதும் இந்த பரிகாரம் பலிக்க போகிறது என்பது அர்த்தமாகும். இதுபோல பரிகாரம் செய்யும் பொழுது சுத்தபத்தமாக குளித்துவிட்டு யாராவது ஒருவர் நெற்றியில் திருநீறு, குங்குமம், சந்தனம் என்று அணிந்து கொண்டு வருவதை நீங்கள் காண நேர்ந்தால் செய்யும் பரிகாரம் பலிக்கப் போவதன் நல்ல சகுனமாக எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

எந்த சாமிக்கு நீங்கள் பரிகாரம் செய்தாலும், பரிகாரம் செய்யும் பொழுது வேறு இறைவனுடைய விக்ரகங்கள் அல்லது படங்களை நீங்கள் காண நேர்ந்தால் அது சுப சகுனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த இறைவனை மனதார பிரார்த்தனை செய்துவிட்டு பரிகாரத்தை தொடர்ந்து செய்யுங்கள். அருகில் யாராவது கோவில் சார்ந்த விஷயங்களையோ அல்லது தெய்வத்தை பற்றிய தகவல்களையோ, மந்திரங்கள் ஜெபிப்பதையோ செய்தால் நீங்கள் செய்யக்கூடிய பரிகாரமானது நிச்சயம் பலிக்கும்.

பரிகாரம் செய்யும் பொழுது தான தர்மம் யாராவது கேட்டு வந்தால் கண்டிப்பாக அதை மனம் உவந்து செய்யுங்கள். பரிகாரம் செய்வது மட்டுமல்லாமல் தர்மமும் சேர்ந்து செய்வதால் பரிகாரமானது நிச்சயம் பலிக்கும். பரிகாரம் செய்யும் பொழுது துணி துவைப்பது அல்லது துணி துவைக்கும் வேலை செய்பவர்கள், இஸ்திரி போடுபவர்கள் போன்றவர்களை கண்டால் அன்றைய நாள் வஸ்திர தானம் செய்யுங்கள். நீங்கள் செய்யக்கூடிய பரிகாரம் கண்டிப்பாக நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே:
வேண்டுதலை நிறைவேற்றும் 1010

பரிகாரம் செய்யும் பொழுது யாராவது தலையில் இருக்கும் சிக்குகளை நீக்கி கொண்டிருப்பதை நீங்கள் பார்த்தால், உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய நெருக்கடிகள், சிக்கல்கள் தீர்வு பெறும் என்பது நம்பிக்கை. இதுபோல எந்த ஒரு செயலுக்கும் ஏற்றவாறு தானம் செய்வதும், எந்த ஒரு செயலையும் சுப சகுனமாக எடுத்துக் கொள்வதும் பரிகாரம் செய்யும் சமயத்தில் நாம் கொள்ளும் நம்பிக்கையின் மீது அந்த பரிகாரமானது இறைவன் அருளால் நிச்சயம் பலிக்கும்.

- Advertisement -