- Advertisement -
சமையல் குறிப்புகள்

தயிர் சாதம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் தான் அதிலும் பெருமாள் கோவில் சுவையில் வீட்டிலேயே தயிர்சாதம் செய்தால் அட்டகாசம் தான்

- Advertisement -

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சம் இல்லாமல் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் தயிர் சாதம் தான். தயிர் சாதத்தை பிடிக்காதவர்கள் என்று எவரும் இருக்க மாட்டார்கள். அதிலும் ஒரு சிலர் கோவிலுக்கு செல்வதே இந்த தயிர் சாத பிரசாதத்தை வாங்கிக் சாப்பிடுவதற்காக இருக்கும். அவ்வாறு பெருமாள் கோவிலில் கொடுக்கப்படும் தயிர் சாதத்திற்கு தனி சுவை இருக்கிறது. அதிலும் சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கும் தயிர் ஊற்றி சாதம் செய்து கொடுப்பது அனைவரது வீட்டிலும் இருக்கின்ற ஒரு பழக்கமாகும். இந்த தயிர் சாதம் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. குழந்தைகள் மொழு மொழுவென்று அழகாக வளர தயிர்சாதம் பெரிதும் துணை புரிகிறது. அப்படி சுவையான தயிர் சாதத்தை பெருமாள் கோவிலின் சுவையில் அப்படியே வீட்டிலேயும் செய்ய இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள வழிமுறையை பார்த்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
பச்சையரிசி – இரண்டு டம்ளர், பால் – 200 கிராம், தயிர் – 200 கிராம், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், பச்சைமிளகாய் – 5, கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி, உப்பு – ஒன்றரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் சாதம் படிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அடுப்பின் மீது வைத்து விட வேண்டும். பிறகு இரண்டு டம்ளர் அரிசியை இரண்டு, மூன்று முறை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவிய பின்னர், மறுபடியும் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்திருக்கும் தண்ணீர் கொதிக்கும் வரை ஊற வைக்க வேண்டும்.

பின்னர் தண்ணீர் கொதித்ததும் அரிசியை அதில் சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து எப்பொழுதும் வடிக்கின்ற சாதத்தின் பதத்தை விட விட சற்று குழைவான பதத்திற்கு வடித்துக் கொள்ள வேண்டும். தயிர் சாதத்திற்கு சாதம் கொஞ்சம் குழைவாக இருந்தால் தான் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.

- Advertisement -

பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் அரை ஸ்பூன் மிளகு சேர்த்து தாளிக்க வேண்டும். இவை எண்ணெயில் பொறிந்ததும், இதனுடன் ஒரு துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.பின்னர் அதே போல் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி சேர்த்து, அதனுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து, நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும். பிறகு 200 கிராம் தயிரை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அதனை கட்டிகளில்லாமல் கரைத்து, அதனுடன் இந்த தாளிப்பை சேர்த்து கலந்து விடவேண்டும். பிறகு வடித்து வைத்துள்ள சாதத்துடன் 200 கிராம் பால் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்டு, தாளித்த தயிரையும் சேர்த்து, இறுதியாக ஒரு கைப்பிடி கொத்தமல்லியையும் சேர்த்து கலந்து விட்டு, 10 நிமிடம் ஊற வைத்து= பின்னர் பரிமாறி கொடுத்துப் பாருங்கள். இந்த தயிர் சாதம் பெருமாள் கோவில் தயிர் சாதத்தின் சுவையில் அப்படியே இருக்கும்.

- Advertisement -