
இப்போதெல்லாம் வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. இந்த நிலையில் பலரும் படித்து விட்டு படிப்பிக்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை வேறு வழியில்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். பல வருடம் கஷ்டப்பட்டு படித்த பிறகு அதற்கேற்ற வேலையோ, வருமானமோ இல்லை என்றால் அது எத்தனை துயரமானது. இன்னும் சிலரோ தனக்கு பிடித்த வேலையை தான் செய்ய வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து காத்து கொண்டிருப்பார்கள்.
இப்படி வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர்களும் கிடைத்த வேலையை ஏதோ செய்ய வேண்டுமே என்று செய்பவர்களும் இந்த ஒரு பரிகாரத்தை செய்யும் போது பிடித்த வேலை அவர்களை தேடி வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த பரிகாரம் என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பரிகாரத்தை அமாவாசை தினத்தன்று மட்டும் செய்தால் போதுமானது. அமாவாசை அன்று காலை முதல் இரவுக்குள் இந்த பரிகாரத்தை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால்மதியம் உச்சி காலப் பொழுதில் மட்டும் இதை செய்யக் கூடாது. இதை மட்டும் கவனத்தில் வைத்து கொள்ளுங்கள். அமாவாசை அன்று உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அரச மரத்தடித்தடிக்கு கையில் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்.
அங்கு சென்று அரச மரத்திற்கு முன்பாக கையில் அரிசியுடன் நின்று உங்களுடைய வேலை தொடர்பான வேண்டுதலை வைத்த பிறகு, கையில் உள்ள பச்சரிசியை கொஞ்சம் கொஞ்சமாக அரசமரத்தை சுற்றி போட்டுக் கொண்டே ஒன்பது முறை மரத்தை சுற்றி வர வேண்டும் . அப்படி மரத்தை சுற்றும் போது நீங்கள் எந்த வேலையை நினைக்கிறீர்களோ அது கிடைத்து விட்டதாக மனதில் நினைத்து கொள்ளுங்கள்.
இப்படியாக இந்த பரிகாரத்தை மூன்று மாதம் தொடர்ந்து செய்தால் போதும். அதாவது மூன்று அமாவாசை செய்யுங்கள். இத்துடன் சேர்ந்து வேலை கிடைப்பதற்கான உங்கள் முயற்சியில் சற்றும் தளர்ந்து விடாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும். இந்த மூன்று மாதங்கள் முடிவதற்குள்ளாக உங்களுக்கான வேலை வாய்ப்பு நிச்சயம்உங்களை தேடி வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்கலாமே:தீபாவளி அன்று செய்ய வேண்டிய குலதெய்வ வழிபாடு
அது மட்டும் இன்றி வேலை கிடைத்தும் வருமானம் போதாமல் இருப்பவர்கள். பதவி உயர்வு கிடைக்காமல் இருப்பவர்கள். வேறு நல்ல வேலைக்கு முயற்சி செய்பவர்கள் எல்லோரும் இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலனை கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வேலை கிடைப்பதற்கான இந்த எளிய பரிகார முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்யலாம்.