
கடவுளிடம் நம் குறைகளை சொல்வதற்காகவே கோவிலுக்கு போகிறோம். அதில் பாதி பேர் குழந்தை இல்லை என்கிற ஏக்கத்தை சொல்லவே இப்போதெல்லாம் படை எடுக்கிறார்கள். முந்தைய காலங்களில் விதைத்த விதைகள் சத்துள்ளதாக இருந்தது. இயற்கையான இந்த விதைகளால் உருவாகக்கூடிய பயிர்களை உணவாகக் கொள்ளும் மனிதன், பிரச்சனை இல்லாமல் இருந்தான். ஆனால் இன்று மலட்டு பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. இதற்கு காரணம் என்ன? ஆதிகாலத்தில் எந்த வழிபாட்டை மேற்கொண்டு குழந்தை பாக்கியம் பெற்றார்கள்? என்னும் தகவல்களை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
ஹைபிரிட் விதைகள் வந்த நாள் முதல் மனிதனுக்கு பல்வேறு உடல் உபாதைகளும் வர துவங்கி விட்டது. அதில் மிக முக்கியமான ஒரு பிரச்சனை கருப்பை சார்ந்த பிரச்சனைகளும், மலட்டு தன்மையும் தான் என்றால் அது மிகையாகாது. உண்ணும் உணவு சத்துள்ளதாக இருந்தால் தான் எல்லாமே இயற்கையாக நடக்கும். போதாத குறைக்கு நவீன உபகரணங்களால் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த அன்னோன்யமும், அக்கறையும் கூட குறைந்து போய்விட்டது.
முந்தய காலங்களில் குழந்தை பாக்கியத்திற்கு வேண்டுவோர் மிகக் குறைந்த அளவில் தான் இருந்தனர். இவர்கள் சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது மூலம், அளப்பரிய பல நல்ல பலன்களை அடைந்தனர். கோவில் கோவிலாக ஏறி இறங்கியும் பிள்ளை இல்லை என்பவர்கள், ஏறாத மருத்துவமனையே இல்லை என்று புலம்புபவர்கள் இந்த எளிய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ஒரே வருடத்தில் நீங்கள் கண்ட கனவு நினைவாகும்.
முதலில் கணவன் மனைவி இருவருக்குள்ளும் இருக்கும் பிரச்சனைகளை மூட்டை கட்டி ஒரு ஓரமாக வைத்து விடுங்கள். அதை பிறகு பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தை இன்மை பிரச்சனைக்கு தம்பதியரின் ஒருமித்த மனம், அன்பு, அக்கறை, அனுசரணை அனைத்தும் தேவை. இருவருமாக சேர்ந்து முழு முதற்கடவுளான விநாயகர் பெருமானை மஞ்சள் குழைத்து பிள்ளையாராக பிடித்து பூஜை அறையில் வையுங்கள். இதை திங்கள் அல்லது வெள்ளிக்கிழமையில் துவங்குங்கள்.
ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை மஞ்சள் துணியில் முடிந்து வைத்துவிட்டு எப்போதும் போல நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து விநாயகரே கதி என்று விநாயகரை முழுமையாக நம்பி இந்த வேண்டுதலை வையுங்கள். ஐந்து பெரிய நெல்லிக்கனிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஐந்து ஸ்பூன் சீரகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து மனதார உங்கள் பிரார்த்தனையை செய்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு சொம்பு நிறைய தண்ணீர் ஊற்றி அதில் வைத்துள்ள நெல்லிக்கனிகளையும், சீரகத்தையும் சேர்த்து பாதி அளவிற்கு சுண்டும் வரை காய்ச்சுங்கள்.
இதையும் படிக்கலாமே:
பதவி உயர்வு கிடைக்க மந்திரம்
பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு அப்படியே மூடி வைத்து விடுங்கள். காலையில் எழுந்ததும், இந்த தண்ணீரை பாதியாக பிரித்து இருவரும் குடித்து விடுங்கள். வாரம் ஒரு முறை திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்து, மறுநாள் இந்த தண்ணீரை குடித்து வர வேண்டும். 21 வாரங்கள் அப்படி செய்தால் ஒரு வருடத்திற்குள் எல்லா பிரச்சனைகளும், தோஷங்களும் தீர்ந்து வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும் என்பது ஐதீகம். வெந்த நெல்லிக்கனிகளை வீணாக்காமல் அரைத்து துவையல் போல பயன்படுத்திக் கொள்ளுங்கள். பக்தியுடன் ஒவ்வொரு வாரமும் இதை செய்து வந்தால் பிள்ளை பேறு உண்டாவது உறுதி. 21 வாரம் முடிந்ததும் முடிந்து வைத்த காசை கோவில் உண்டியலில் போடுங்கள்.