- Advertisement -
- Advertisement -

இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய இளம் பருவத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் அதிக அளவில் பாதிக்கக்கூடிய ஒன்று என்றால் அது பருக்கள் தான். இந்த பருக்கள் ஏற்படுவதற்கு பலவிதமான காரணங்கள் இருந்தாலும் அவர்களின் வயதின் காரணமாகவே அதிக அளவில் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட பருக்களை நீக்குவதற்காக பல வழிமுறைகள் இருந்தாலும், அந்த பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறைவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. இன்னும் சிலருக்கோ அது அவர்களுடைய வாழ்நாள் வரை நீங்காமல் முகத்திலேயே தங்கி விடுகிறது. அப்படிப்பட்ட பருக்களும் வடுக்களும் நீங்குவதற்கு போட வேண்டிய ஒரு பேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பருக்களும் வடுக்களும் நீங்க

அதிக அளவில் ஒருவருக்கு பருக்கள் ஏற்படுகிறது என்றால் அவர் அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும். மேலும் அடிக்கடி தங்களுடைய முகத்தை சுத்தமான தண்ணீரை பயன்படுத்தி கழுவுவதன் மூலமும் இந்த பருக்கள் ஏற்படுவதை குறைக்க முடியும். ஏனென்றால் சருமத்தில் தங்கி இருக்கக்கூடிய அழுக்குகளால் உருவாவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதால் தான் அடிக்கடி தண்ணீரை பயன்படுத்தி கழுவ வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் உடலில் இருக்கக்கூடிய நீர்ச்சத்து குறைவதாலும் அதிகப்படியான உஷ்ணம் ஏற்படுவதாலும் ஒரு சிலருக்கு பருக்கள் உண்டாகும். அதனால் தான் அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும் என்று கூறப்படுகிறது. இவற்றை தவிர்த்து ஒரு எளிமையான ஃபேஸ் பேக் ஒன்று இருக்கிறது. அதை பயன்படுத்துவதன் மூலமும் பருக்கள் வராமல் தடுக்க முடியும் வந்த பருக்களை மறையச் செய்ய முடியும் பருக்களால் ஏற்பட்ட வடுக்களும் தழும்புகளும் மறைவதற்கும் இந்த ஃபேஸ் பேக் உதவி செய்யும்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்வதற்கு முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்த்து கொள்ளுங்கள். அடுத்ததாக இதில் கால் டீஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ரெண்டு டீஸ்பூன் கடலை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் டி ட்ரி ஆயில் என்று கடைகளில் விற்கும். அந்த ஆயிலிலிருந்து நான்கு சொத்துகளை மட்டும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது இது ஒரு பேஸ்ட் பதத்திற்கு வரும். இந்த பேஸ்ட்டை எடுத்து உங்களுடைய முகத்தை சுத்தமாக கழுவி விட்டு பிறகு தடவ வேண்டும். இது நன்றாக காயும் வரை அப்படியே விட்டுவிடுங்கள். இது நன்றாக காய்ந்த பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி வட்ட வடிவில் மசாஜ் செய்து முகத்தை கழுவி விட வேண்டும். இப்படி ஒரே ஒருமுறை செய்தாலே உங்கள் முகத்தில் நல்ல மாற்றம் தெரியும். இதை தினமும் தொடர்ச்சியாக செய்து வருபவர்களுக்கு பருக்கள் ஏற்படாது. ஏற்பட்ட பருக்களும் மறைந்துவிடும். மேலும் பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் வடுக்களும் மறைவதை கண்கூடாக காண முடியும். இதோடு மட்டுமல்லாமல் முகம் மிகவும் பிரகாசமாகவும் அழகாகவும் தோற்றமளிக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:வெடிப்புகள் அற்ற மிருதுவான பாதத்தை பெற

அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய இந்த மூன்று பொருட்களை மட்டும் பயன்படுத்தி நம்மால் எளிதில் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய பருக்களை நீக்க முடியும். கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தாமல் இப்படி இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி அழகான சருமத்தை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -