
நாம் ஒவ்வொருவரும் எப்பேற்பட்ட நிறத்தில் இருந்தாலும் அந்த நிறத்தை விட சற்று இன்னும் கூடுதலாக சிவந்த நிறத்தை பெற வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். பார்ப்பவர்களும் முன்பு இருந்ததை விட இப்பொழுது நன்றாக நிறமாக இருக்கிறாயே என்று கேட்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். அப்படிப்பட்ட உடனடி பொலிவை தரக்கூடிய ஒரு ஃபேஸ் பேக்கை நாம் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் போதும். அந்த ஃபேஸ் பேக்கை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
வெளியில் செல்லும் பொழுது எந்தவித மேக்கப்பும் போடாமல் இயற்கையான முறையில் பொலிவான சருமத்தை பெற வேண்டும் என்றுதான் நாம் ஆசைப்படுவோம். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த பொலிவு என்பது உடனடியாக ஏற்படாது. ஆனால் இந்த ஒரு ஃபேஸ் பேக்கை நாம் பயன்படுத்தினோம் என்றால் பயன்படுத்திய உடனே நல்ல மாற்றத்தை பெற முடியும். பார்ப்பவர்களும் வியந்து கேட்கும் அளவிற்கு பலன் கிடைக்கும்.
இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதற்கு நம்முடைய சருமத்தை பாதுகாக்க கூடிய முக்கியமான நான்கு பொருட்கள் தேவைப்படும். அவை பீட்ரூட், உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் எலுமிச்சை. பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்சைடு அதிகம் இருக்கிறது. இதை நம்முடைய சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமத்தின் ஈரத்தன்மையை தக்க வைத்துக் கொள்வதோடு கருமையை நீக்கி ஒரு வித பொலிவை தரும். அடுத்ததாக உருளைக்கிழங்கை நாம் நம்முடைய சருமத்தில் பயன்படுத்தும் பொழுது அது நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய கருமையை முற்றிலும் நீக்கும். கரும்புள்ளிகள், கருந்துட்டுகள் போன்றவை படிப்படியாக விலக ஆரம்பிக்கும்.
அடுத்ததாக தக்காளி நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய சுருக்கத்தை நீக்கி இளமையான தோற்றத்தை தரக்கூடியதாக திகழ்கிறது. அடுத்ததாக எலுமிச்சம் பழம் இதில் இருக்கக்கூடிய விட்டமின் சி நம்முடைய சருமத்திற்கு நல்ல நிறத்தை தருவதோடு சருமத்தில் ஏதேனும் பருக்கள் போன்ற பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை நீக்கவும் உதவி செய்யும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தோல் நீக்கப்பட்ட பாதி பீட்ரூட்டை சேர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் தோல் நீக்கப்பட்ட பாதி உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் பாதி தக்காளி, பாதி எலுமிச்சம் பழம் இவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த இந்த விழுதை ஒரு பருத்தி துணியில் போட்டு நன்றாக வடிகட்டி சாரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாரிலிருந்து ஒரு ஸ்பூன் அளவிற்கு மட்டும் எடுத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு கடலை மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு தயிரையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். கலந்த இந்த பேஸ்ட்டை நம்முடைய முகம், கழுத்து பகுதிகளில் தேய்த்து அரை மணி நேரம் விட்டுவிட்டு பிறகு முகத்தை சாதாரண தண்ணீரை பயன்படுத்தி கழுவ வேண்டும். இப்படி நாம் வாரத்திற்கு இரண்டு முறையோ மூன்று முறையோ செய்யும்பொழுது நம்முடைய சருமம் உடனடி பொலிவை பெறும்.
இதையும் படிக்கலாமே: சரும பளபளப்பை தரும் ஜாதிக்காய்
எளிதில் கிடைக்கக்கூடிய இந்த நான்கு பொருட்களையும் பயன்படுத்தி நம்முடைய சருமத்தை இயற்கையாகவே பொலிவான, அழகான, இளமையான சருமமாக மாற்ற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.