- Advertisement -

சாஸ்திர சம்பிரதாயங்களும், பூஜை புணஸ்காரங்களும், தெய்வீக நம்பிக்கையும், கொண்டது தான் நம் இந்திய கலாச்சாரம்.  முன்னோர்கள் கூறியபடி பழக்கவழக்கங்களை பின்பற்றுவதில் நம்மை விட சிறந்தவர்கள் வேறு எவரும் இல்லை. பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் வீட்டு பூஜை அறை தான் அவர்களுக்கு கோவில். அப்படிப்பட்ட பூஜை அறையில் எந்தெந்த படங்களை வைக்கலாம். எந்தெந்த படங்களை வைக்கக் கூடாது. என்பதை பற்றிய சில தகவல்களை தான் நாம் இப்பொழுது காண போகின்றோம்.

பூஜை அறையை நாம் தினம்தோறும் சுத்தப்படுத்த வேண்டும். அப்படி சுத்தம் செய்யும் பொழுது நம் மனமும் நம் உடலும் சுத்தமாக இருப்பது கட்டாயமான ஒன்று. ஏனெனில்,  சக்திவாய்ந்த தெய்வங்கள் ஒன்றாக சேர்ந்து இருக்கும் இடம்தான் அது. சாஸ்திரப்படி நம் வீட்டு பூஜை அறையும், அதில் வைக்கக் கூடிய சுவாமி படங்களும் கிழக்கு நோக்கித்தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

இப்படிப்பட்ட பூஜை அறையில் நம் முக்கியமான சில சுவாமி  படங்களை கட்டாயம் வைக்க வேண்டும். அந்த வகையில் முழு முதற்கடவுளான விநாயகரை முதலில் வைக்க வேண்டும். வள்ளி, தெய்வயானையுடன் கொண்ட முருகனையும், லக்ஷ்மி தேவியுடன் கொண்ட நாராயணனையும், அம்பிகையுடன் கூடிய சிவபெருமானையும், பசுவுடன் இருக்கக்கூடிய கிருஷ்ணன்  அல்லது ராதையுடன் இருக்கக்கூடிய கிருஷ்ணயோ வைக்கலாம். மேற்குறிப்பிட்டுள்ள சுவாமி படங்களை தனியாக வைத்து வழிபடக்கூடாது.

காமாட்சி அம்மன், மீனாட்சி அம்மன், விசாலாட்சி அம்மன், லலிதாம்பாள், அஷ்டலட்சுமி இப்படிப்பட்ட அம்மன் படங்களை நாம் தனி உருவமாக வைத்து வழிபடலாம். இதுதவிர சமீபகாலமாக சிலர் சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வணங்குகின்றனர். ஒரு ஜான் அளவிற்கு மேல் உள்ள விக்கிரகங்களை நாம் வீட்டில் வைத்து பூஜை செய்யும் பொழுது அவற்றுக்கு நாம் தினமும் நிவேதனம் வைத்து பூஜை செய்ய வேண்டும். அந்த விக்கிரகங்களுக்கு தினம் ஒரு முறை அபிஷேகம் செய்ய வேண்டும். முடியாதவர்கள், வாரம் ஒரு முறையாவது அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக எந்த படங்களை பூஜை அறையில் வைக்கக் கூடாது என்பதை பற்றி காண்போம். உக்கிர வடிவமாக இருக்கும் எந்த தெய்வத்தையும் நம் பூஜை அறையில் வைக்கக் கூடாது. (மகாகாளி, மகிஷாசுரவர்த்தினி, வதம் செய்யும் ஆஞ்சநேயர், நரசிம்மமூர்த்தி, தனித்த கிருஷ்ணர் பிரத்தியங்கிராதேவி) இந்த படங்களை வீட்டில் வைக்கக் கூடாது. ஏனென்றால், இந்த படங்கள் சில நேரங்களில் உக்கிர எண்ணங்களை நம்மில் தூண்டலாம். சிலருக்கு இப்படிப்பட்ட உக்கிர தெய்வங்கள் குலதெய்வமாக இருந்தால், அவர்கள் அந்த படங்களை வீட்டில் வைத்து வழிபடலாம். உடைந்த விக்கிரகங்களையும், உடைந்த சுவாமி படங்களையும் நம் வீட்டில் வைத்து வழிபடக்கூடாது. ஏதாவது கோவிலில் இருக்கும் மரத்தின் அடியில் அவற்றை வைத்துவிடுவது நல்லது.

நம் முன்னோர்களின் உருவப்படங்களை நாம் பூஜை அறையில் சுவாமி படத்திற்கு இணையாக வைத்து பூஜை செய்யக்கூடாது என்பது சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக சில பேர், வீட்டில் சங்கு அல்லது வலம்புரி சங்கை வைத்திருப்பார்கள். அந்த சங்கை காலியாக வைத்து வழிபடக்கூடாது. நீரையோ அல்லது அரிசியையோ நிரப்பி வைக்க வேண்டும். எதுவும் முடியாத பட்சத்தில் சங்கை கவிழ்த்து வைக்கலாம். சங்கின் நுனி கிழக்கு பக்கம் பார்த்தபடிதான் இருக்க வேண்டும்.

- Advertisement -

சாஸ்திரப்படி நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பழக்கவழக்கங்களை பின்பற்றி நம் பூஜை அறையில் பூஜை புனஸ்காரங்களை மேற்கொள்ளலாம். இது நம் வாழ்க்கையில் எண்ணிலடங்கா பல முன்னேற்றங்களை தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதையும் படிக்கலாமே:
போகருக்கே ஞானம் தந்த புலிப்பாணி சித்தர் பற்றி தெரியுமா?

English Overview:
Here we have Pooja room tips in Tamil.

- Advertisement -