போகருக்கே ஞானம் தந்த புலிப்பாணி சித்தர் பற்றி தெரியுமா?

- Advertisement -

நம் உலகத்தில் எத்தனையோ அறிய வகையான திகைக்கவைக்கும் சக்திகள் நம் கண்ணுக்குப் புலப்பட்டும் புல படாமலும் உள்ளது. ஆனால் நம் கண்ணிற்கு புலப்பட்டு அதீத சக்திகளை கொண்ட சித்தர்கள் பலரை நாம் மலைகளிலும் காடுகளிலும் காண்கிறோம். அப்படிப்பட்ட சித்தர்களுள் ஒருவரான, அதீத சக்தி வாய்ந்த புலிப்பாணி சித்தரை பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

sidhar

புலிப்பாணி சித்தர் சீனாவில் பிறந்ததாக ஒரு தகவல் இருக்கிறது. நாம் பழனி மலையில் உள்ள போகர் சித்தரை பற்றி நன்கு அறிவோம். ஆனால் போகரின் சீடரான புலிப்பாணி சித்தரை பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. போகர் பழனி முருகனின் நவபாஷான சிலையை செய்வதற்கு இவர் உதவி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. புலிப்பாணி போகரிடம் தங்கியிருந்த போது அவரிடமிருந்து சகல யோக வித்தைகளையும், சித்து வேலைகளையும் கற்றுத் தேர்ந்தார். ஒருமுறை போகருக்கு தண்ணீர் தாகம் எடுத்த போது, புலிப்பாணி புலியின் மீது ஏறிச் சென்று தண்ணீர் எடுத்து வந்ததன் மூலம் இவருக்கு இந்த பெயர் வந்ததாக தகவல் உண்டு. வேற்று மொழியில் பாணி என்றால் தண்ணீர் என்று அர்த்தமாகும். புலியில் ஏறிச்சென்று பாணி கொண்டு வந்ததால் புலிப்பாணி என்று பெயர் பெற்றார் என்று சிலர் கூறுவதுண்டு.

- Advertisement -

போகர் புலிப்பாணியின் உதவியைக் கொண்டு நவபாஷாண சிலையை செய்து முடித்தார். போகர் சில காரணங்களால் சீன தேசம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் நவபாஷான சிலையை பாதுகாக்கும் பொறுப்பு புலிபாணிக்கு கிடைத்தது. அவர் அந்தப் பொறுப்பினை ஏற்று செவ்வனே சிலையின் காவலர் ஆனார்.

bogar-murugan

சீன தேசத்திலிருந்து வந்த சிலர், உன் குருநாதர் போகர், பெண் பக்கத்தில் சிக்கி தவ வலிமையை இழந்து விட்டார் என்றனர். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த புலிப்பாணி தன் தவ திருஷ்டியில் சீனதேசம் சென்றடைந்தார். பிறகு போகரை அங்கிருந்து காப்பாற்றி பழனிக்கு அழைத்து வந்து தவ வலிமை பெறுவதற்குரிய வழிமுறைகளை செய்தார்.

- Advertisement -

போகருக்கு ஞானம் வழங்கிய வலிமை புலிபாணிக்கு உண்டு என்பதை சிலர் அறிந்திருக்க மாட்டார்கள். சில நாட்களில் போகர் இறக்கவே அவர் சமாதிக்கு பூஜை செய்யும் பணியை புலிப்பாணி செய்தார். சமாதிக்கு பூஜை செய்யும் ஒருவர் முருகனை பாதுகாக்க கூடாது என்று சிலர் கூறினர். ஆனால் போகருக்கு குரு முருகன். எனக்கு குரு போகர். ஆகவே நான் என்குரு போகருக்கு பூஜை செய்வதையே பெருமையாக கருதுகிறேன் என்று அவர் கூறினார். பின்பு சில நாட்களுக்குப் பிறகு புலிப்பாணியும் போகரை போலவே பழனியில் சமாதி ஆனதாக தகவல் சில உண்டு.

bogar

பல பேர்களின் தீராத நோய்களைத் தன் மூலிகை மருத்துவத்தின் மூலம் குணப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. தீராத நோய்வாய்ப்பட்டவர்கள் புலிபாணியை மனதார நினைத்து வணங்கினால் அவரே நேரில் வந்து மருந்து தருவதாக ஐதீகம் உண்டு.

- Advertisement -