
இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள நல்ல காரசாரமான சட்னி சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பூண்டு சட்னியை செய்து சாப்பிடலாம். பூண்டு உடம்பிற்கு எவ்வளவு நல்லது என்று அனைவருக்கும் தெரியும். ஆனாலும் குழந்தைகள் பூண்டை உண்ணுவது கிடையாது. பூண்டை இந்த முறையில் சட்னியாக அரைத்து கொடுக்கும் போது பூண்டின் சத்து குழந்தைகளுக்கு முழுவதுமாக கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் நல்ல ஒரு ஆரோக்கியமான உணவை செய்து கொடுத்த திருத்தியும் கிடைக்கும். இப்போது இந்த பூண்டு சட்னி எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பூண்டு சட்னி செய்வதற்கு முதலில் மூன்று முழு பூண்டுகளை தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு வெங்காயத்தை பெரிய சைஸில் நறுக்கி அதையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது பூண்டு சட்னி செய்யத் தொடங்கி விடலாம்.
முதலில் அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய் காய்ந்தவுடன் வெங்காயம் போட்டு கொஞ்சம் வதங்கியவுடன் பூண்டு சேர்த்து வதக்கத் தொடங்குங்கள். பூண்டு ஓரளவிற்கு வதங்கியவுடன் பத்து காய்ந்த மிளகாய், ஒரு சின்ன நெல்லிக்காய் அளவிற்கு புளி இவற்றை சேர்த்து இன்னும் ஒரு முறை வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு இவைகளை ஆற விடுங்கள்.
காரம் அதிகம் வேண்டுமென்று நினைப்பவர்கள் மிளகாயின் அளவை கூட்டிக் கொள்ளுங்கள். ஒரு வேளை காரம் கம்மியாக அதே நேரத்தில் சட்னி நல்ல சிவப்பு நிறத்தில் சட்னி இருக்க வேண்டுமானால், காய்ந்த மிளகாயின் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விட்டு சேர்த்துக் கொண்டால் சட்னி நல்ல நிறமாகவும், அதே நேரத்தில் காரம் குறைவாகவும் இருக்கும்.
அடுத்ததாக வதக்கிய வெங்காயம், பூண்டு, மிளகாய் இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரை டீஸ்பூன் உப்பையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸியில் அரைத்த சட்னி அப்படியே இருக்கட்டும்.
இதற்கு ஒரு தாளிப்பை நாம் தயார் செய்து கொள்ளலாம். அதற்கு அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்தவுடன், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் கால் டீஸ்பூன் பெருங்காயம் சேர்த்தவுடன் அடுப்பை லோ ஃபிலிமில் வைத்து விட்டு அரைத்த சட்னியை அதில் சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: இட்லி, தோசைக்கு சூப்பரான இந்த ஸ்டார் ஹோட்டல் கடலை சட்னியை செஞ்சி குடுத்தீங்கன்னா, இனிமே உங்க வீட்ல யாரும் சாப்பிட ஹோட்டல் பக்கமே போக மாட்டாங்க. இதை செய்ய அஞ்சு நிமிஷம் கூட ஆகாது
இதில் சேர்த்திருக்கும் வெங்காயம், பூண்டு இவைகளை நாம் ஏற்கனவே வதக்கி இருப்பதால் அதிகம் வதக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த நல்லெண்ணையில் சட்னி முழுவதும் நன்றாக சேர்ந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான் சுவையான பூண்டு சட்னி சட்னி தயாராகி விட்டது.