
பொருளாதாரத்தில் சீக்கிரம் ஒரு மனிதன் உயர்ந்த நிலமைக்கு செல்ல வேண்டும் என்றால், அவனுடைய சுயஜாதகத்தை முதலில் பார்க்க வேண்டும். என்ன செய்தால் பணம் வரும், என்ன செய்தால் பொருளாதார பிரச்சனையிலிருந்து விடுபட முடியும் என்று ஜாதக கட்டத்தை வைத்து சொல்லுவார்கள். ஆனால் எல்லோராலும் ஜாதகம் பார்த்து, கட்டங்களை பார்த்து தொழில் தொடங்கி, வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க முடியாது.
எங்களுக்கு இது எல்லாம் தெரியாது. ஒரு பொதுப்படையான வழிபாட்டை செய்ய வேண்டும். அந்த வழிபாடு எங்களுக்கு கோடான கோடி செல்வத்தை கொடுக்க வேண்டும். சீக்கிரம் செல்வந்தர் ஆகும் யோகத்தை கொடுக்க வேண்டும் என்றால், என்ன வழிபாடு செய்வது. முருகன் ஆன்மீகம் சார்ந்த வழிபாடு தான் கை மேல் பலனை கொடுக்கக் கூடிய வழிபாடு. அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
இன்று 9-1-2025 வியாழக்கிழமை. வளர்பிறை கிருத்திகை திதி, மதியம் 3:05 மணிக்கு மேலே ஆரம்பிக்கிறது. நாளைய தினம், வெள்ளி கிழமை மதியம் 1:41 மணி வரை கிருத்திகை திதி இருக்கிறது. ஆக நீங்கள் செல்வந்தர்களாக வேண்டும் என்றால் இன்றைய தினமும் நாளைய தினமும் இந்த விளக்கை முருகப்பெருமானுக்கு ஏற்றலாம்.
இன்றும் நாளையும் இந்த விளக்கை ஏற்ற முடியவில்லை. என்ன செய்வது. ஒரு செவ்வாய்க்கிழமை, ஒரு சஷ்டி, கிருத்திகை என்று முருகனுக்கு உகந்த நாள் என்று வருகிறதோ அன்றைக்கு சென்று ஏற்றலாம். அதெல்லாமும் எங்களுக்கு சரிப்பட்டு வராது என்றால் பரவாயில்லை. எந்தக் கிழமையில் வேண்டுமென்றாலும் இந்த விளக்கை முருகனுக்கு ஏற்றினாலும் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
ஆனால் காலை 6 மணிக்கு முன்பாக கோவிலுக்கு செல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால் மாலை 6 மணிக்கு கழித்து கோவிலுக்கு செல்ல வேண்டும். ஒன்றரை(1 1/2) மணி நேரம் நீங்கள் கோவிலில் அமர்ந்திருக்க வேண்டும். முருகப்பெருமானுக்கு 2 மண் அகல் விளக்குகளில் சுத்தமான நெய் ஊற்றி, திரி போட்டு, தீபம் ஏற்ற வேண்டும்.
நீங்கள் கோவிலில் இருந்து முருகனிடம் வேண்டுதல் வைக்கும் இந்த ஒன்றரை மணி நேரமும் இந்த தீபம் எறிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சுத்தமான நெய் பயன்படுத்தி தீபம் போடுங்கள். உங்க வீட்டு பக்கத்தில் வள்ளி தெய்வானையோடு இருக்கக்கூடிய ஒரு முருகனின் முன்பு இந்த பிரார்த்தனையை செய்ய வேண்டும். மூலவர் உற்சவர் எந்த இடத்தில் வள்ளி தெய்வானையோடு முருகர் இருந்தாலும் அந்த இடத்தில் விளக்கு போட்டு இந்த வேண்டுதலை செய்யலாம்.
இந்த வழிபாட்டை அடிக்கடி செய்ய வேண்டுமா. நிச்சயம் கிடையாது. ஆறு மாதத்திற்கு ஒரு நாள், அல்லது வருடத்திற்கு மூன்று நாள், இப்படி பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு நாளை இறைவழிபாட்டிற்காக ஒதுக்கி இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு உங்களுடைய வேண்டுதலை அந்த முருகப்பெருமானிடம் வைத்தால் நிச்சயம் உங்கள் பொருளாதார சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். உங்களுடைய பண கஷ்டம் தீரும்.
பொருளாதாரத்தில் நீங்கள் படிப்படியாக உயர்வதை கண்கூடாக பார்க்கலாம். ஒரு நாள் மட்டும் இந்த விளக்கை போட்டுவிட்டு, ஒரு முயற்சியும் மேற்கொள்ளாமல் பலன் கிடைக்கவில்லை என்று சொல்லக்கூடாது. மூன்று வருடம் தொடர்ந்து, மூன்று மாதத்திற்கு ஒரு முறை முருகன் கோவிலுக்கு போய் இந்த விளக்கு போடுறீங்க. அயராது உழைக்கிறீர்கள், பிறகு கேளுங்கள் வெற்றி வரவில்லை என்றால்.
அந்த ஒன்றரை மணி நேரமும் கோவிலில் அமர்ந்து என்ன செய்வது. வேண்டுதலை முருகனிடம் வைத்து “ஓம் சரவணபவ” மந்திரத்தை மட்டும் மனதார சொல்லுங்கள் போதும். அவ்வளவுதான். காலை 6 மணிக்கு முன்பாகவே கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு அமர்ந்தால் 6 மணி இதிலிருந்து 7:30 மணி வரை நீங்கள் அந்த கோவிலில் இருக்க வேண்டும்.
இதே போல தான் மாலை 6 மணிக்கு மேலாக கோவில் நடை சாத்துவதற்கு முன்பாக உங்களுடைய நேரத்தை கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். ஒரு நாள் கூட கிடையாது. முருகனுக்காக மூன்று மாதத்திற்கு ஒருமுறை, ஐந்து மாதத்திற்கு ஒரு முறை, ஒன்றரை மணி நேரம் நம்மால் ஒதுக்க முடியாதா என்ன. பிறகு பாருங்கள் வாழ்வில் நடக்கும் மாற்றத்தை.
இதையும் படிக்கலாமே: கோடி நன்மை தேடி வர வழிபாடு
முடிந்தவர்கள் இன்று 9-1-2025 வியாழக்கிழமை மாலை இந்த பரிகாரத்தை முருகர் கோவிலில் செய்யலாம். முடியாதவர்கள் நாளை வெள்ளிக்கிழமை சிறப்பான நாள். காலை 6 மணிக்கு முன்பாக முருகன் கோவிலில் அமர்ந்து மேல் சொன்ன ஆன்மீகம் வழிபாட்டை செய்து பலன் பெறலாம்.