- Advertisement -

தலைவலியை கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சனை தீர பரிகாரம்

எப்போதுமே பிரச்சனைகள் உங்களுக்கு தலைவலியை கொடுத்துக் கொண்டே இருக்கிறதா? எப்போதுமே பிரச்சனையை தலையில் சுமந்து கொண்டு தலைவலியோடு தலை பாரத்தோடு இருப்பவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். பிரச்சனையுடன் சேர்ந்து தலைவலியும் நீங்கும். தலைக்கு மேல் இருக்கக்கூடிய பாரமும் குறையும். அது என்ன பரிகாரம் இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

பிரச்சனைகள் தீர தேங்காய் பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் 1 தேங்காய். இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த தேங்காயை உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளவும். உங்களுக்கு தலைக்கு மேல் நின்று தொல்லை கொடுக்கக்கூடிய ஒரு பிரச்சனையை நினைத்துக் கொள்ளுங்கள் அந்த பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திடம் பிரார்த்தனை வையுங்கள்.

- Advertisement -

குலதெய்வத்திடம் பிரார்த்தனை வையுங்கள். அந்த தேங்காயை உங்களுடைய தலைக்கு மேல் வைத்து தூங்கவும். அதாவது தலையணை போட்டு படுக்கும்போது தலைக்கு மேல் பக்கத்தில் இந்த தேங்காய் இருக்கலாம். உங்களால் முடியும் என்றால் அந்த தேங்காயை நன்றாக ஒரு போர்வையில் சுருட்டி, போர்வையுடன் அந்த தேங்காயை தலையணையாகவே வைத்து தூங்குவது சிறப்பு.

தேய்பிறையில் மூன்று நாள் இந்த தேங்காயை தலைக்கு அடியில் வைத்து தூங்குங்கள். மூன்று நாள் கழித்து இந்த தேங்காயை கொண்டு போய் உங்கள் வீட்டில் முச்சந்தியில் சூறை தேங்காய் உடைத்தால் உங்களை பிடித்த பிரச்சனைகள் நீங்கும். பிரச்சனைகள் குறையும் பட்சத்தில் தானாக உங்களுடைய தலைவலியும் குறைவதை உணர முடியும்.

- Advertisement -

\பௌர்ணமி வந்த பிறகு இரண்டு அல்லது மூன்று நாள் கழித்து வரும் தேய்பிறை நாளில், எந்த நாளில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம் தவறு கிடையாது. ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்யுங்கள். பிரச்சனை தீருவதை உங்களால் உணர முடியும். மீண்டும் மூன்று மாதம் கழித்தோ, 6 மாதம் கழித்தோ வேறு ஒரு பிரச்சனை தலைக்கு மேல் வந்தது என்றால் அப்போது இந்த பரிகாரத்தை மீண்டும் செய்யலாம் தவறு கிடையாது.

இதோடு சேர்த்து இன்னொரு பரிகாரமும் உங்களுக்காக. ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். காலை 6:00 மணிக்கு ஒரு தேங்காயை எடுத்து உங்களுடைய தலையை 3 முறை சுற்றி, அந்த தேங்காயை இரண்டாக உடைத்து நிலை வாசல் படியில் இரண்டு பக்கமும் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: செய்யும் வேலையில் திறமை வெளிப்பட பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு இந்த தேங்காயை கொண்டு போய் அப்படியே ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு இடத்தில் போட்டுவிட்டு வரவும். உங்களுடைய ஊருக்கு பக்கத்தில் ஓடுகின்ற ஆறு ஏதாவது இருந்தால் அந்த ஆற்றில் இந்த தேங்காயை போடலாம். ஏரிகளில் போட முடியும் என்றாலும் இந்த தேங்காயை ஏரியில் போடலாம். உங்களை பிடித்து ஆட்டிப் படித்துக் கொண்டிருக்கும் தரித்திரம் தலைவலியான பிரச்சனைகள் நீங்க இந்த பரிகாரமும் கை கொடுக்கும்.

- Advertisement -