- Advertisement -

எல்லா நன்மையும் பெற ஹனுமன் வழிபாடு

- Advertisement -

ஹனுமன் பாதங்களை எவன் ஒருவன் விடாமல் இருக்க பற்றி கொண்டு வழிபாட்டை மேற்கொள்கின்றானோ, அவனுக்கு வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். செல்வந்தராக கூடிய வாய்ப்பு கிடைக்கும். யாருக்கும் கிடைக்காத பதவி, பலம் கிடைக்கும். அனுமன் பக்தர்களுக்கு அப்படி ஒரு வரத்தை அனுமன் நிச்சயம் கொடுப்பார். சில பேருடைய வாழ்க்கையில் கெட்ட நேரம் அவர்களை கெட்ட பாதையில் இழுத்துச் செல்லும்.

இதை செய்தால் தவறு என்று மனசாட்சி சொல்லும். ஆனால் மூளை அந்த தவறை செய்ய வைத்து விடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கி இருப்பவர்கள் அனுமனை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய ஆன்மீக தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். கூடவே நம்முடைய பெரிய பிரச்சனையாக இருப்பது பண பிரச்சனை. கடன் சுமை, இஎம்ஐ, இதிலிருந்து வெளிவர அனுமனை எப்படி வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

அனுமன் வழிபாடு

முதலில் உங்கள் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, தவறான பதவியில் நீங்கள் செல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அனுமனை செவ்வாய் கிழமை தோறும் வழிபாடு செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை வீட்டு பக்கத்தில் இருக்கும் அனுமன் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஒரு மஞ்சள் கயிறு வாங்கிக் கொண்டு போய், ஹனுமன் பாதத்தில் வையுங்கள்.

முதல் செவ்வாய்க்கிழமை அந்த கயிறை அனுமன் பாதத்தில் வைத்து அனுமனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்து அந்த கயிறை மீண்டும் வாங்கி உங்களது வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இந்த கயிறு கட்டிக் கொண்டால் உங்கள் வாழ்க்கை தடுமாறாது. குறுக்குப் பாதையில் நீங்கள் செல்ல மாட்டீர்கள். நேர்மையாக நடந்து கொள்வீர்கள்.

- Advertisement -

அடுத்தடுத்த செவ்வாய் கிழமைகள் அனுமன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு, அனுமனை 3 முறை வலம் வந்து கும்பிட்டால் மட்டும் போதும். தவறான பாதைக்கு நீங்க போக மாட்டீங்க. உங்களுடைய எண்ணமும் தூய்மையாக இருக்கும். உங்களை அறிந்தோ அறியாமலும் அடுத்தவர்களுக்கு கெடுதல் தரும் எந்த விஷயத்தையும் செய்யாமல் அனுமன் வழிபாடு உங்களை தடுத்துவிடும். இது முதல் வழிபாடு.

பணம் இல்லை, கடன் சுமை. வருமானத்திற்கு வழியில்லை. ரொம்பவும் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறீர்களா. நீங்கள் வெள்ளிக்கிழமை தோறும் அனுமன் கோவிலுக்கு செல்லுங்கள். கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து அனுமன் சாலிசா படியுங்கள். வீட்டிலிருந்து செல்லும்போது, வெள்ளை கொண்டை கடலையை சுண்டல் செய்து எடுத்து செல்ல வேண்டும்.

- Advertisement -

அந்த சுண்டலை ஹனுமன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து, அனுமன் சாலிசா படித்து முடித்துவிட்டு, இந்த கொண்டைக்கடலையை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உங்கள் கையால் விநியோகம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்ய துவங்கிய நாள் முதல் உங்கள் பணப்பிரச்சனை குறையும்.

கடன் சுமை குறையும். வருமானம் பெருகும். இல்லாத சொத்து சுகம் உங்களை தேடி வரும். பணம் பதவி புகழ் எல்லாம் உங்கள் காலுக்கு கீழே இருக்கும். அத்தனை பவர்ஃபுல்லான பரிகாரம் எது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிய வழிபாட்டு முறைகளை பின்பற்றி பாருங்கள். தேவைப்படுபவர்கள் செவ்வாய்க்கிழமை மட்டும் அனுமனை வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: முருகனை கனவில் காண மந்திரம்

தேவைப்படுபவர்கள் வெள்ளிக்கிழமை மட்டும் அனுமனை வழிபடலாம். இரண்டு வழிபாட்டில் எது தேவையோ, அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்  நல்லது நினைத்தால் நல்லது மட்டுமே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by