- Advertisement -
- Advertisement -

கலியுக தெய்வமாக கருதப்படுபவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை விரும்பாத நபர்களே இருக்க முடியாது. தமிழ் கடவுள் ஆகவும் அதேசமயம் சக்தி வாய்ந்த கலியுக தெய்வமாகவும் திகழக்கூடிய முருகப்பெருமானின் அருளை பெறவேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் நினைக்கிறோம். முருகப்பெருமானின் அருளை நாம் பெற்றுவிட்டோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீர்வதற்குரிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட முருகப்பெருமானை நினைத்து செய்யக்கூடிய ஒரு வேண்டுதலை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டில் இருக்கக்கூடிய முருகப்பெருமானை முழுமையாக நாம் சரணாகதி அடைந்து வழிபாடு செய்தோம் என்றால் அந்த முருகப்பெருமானின் அருளால் நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகள் ஏற்படும் என்பது பலரும் அனுபவபூர்வமாக கண்ட உண்மையே. அப்படிப்பட்ட அறுபடை வீடுகளில் மிகவும் முக்கியமான வீடாக கருதப்படுவது தான் திருச்செந்தூர். சூரனை வதம் செய்த திருத்தலமாக திகழ்வதால் அந்த ஆலயத்திற்கு சென்று நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள், பிரச்சனைகள் என்கின்ற அசுரரை முருகப்பெருமான் வதம் செய்து நமக்கு நல்ல வழியை காட்டுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட முருகப்பெருமானை திருச்செந்தூர் சென்று தான் வழிப்பட வேண்டும் என்று இல்லை. நம்முடைய வீட்டிலேயே மனதார நினைத்து நாம் வழிபாடு செய்தாலும் அதற்குரிய முழு பலன் நமக்கு கிடைக்கும். நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்தால் போதும்.

இதற்கு நேரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. செவ்வாய்க்கிழமையில் வரக்கூடிய குளிகை நேரம் ஆன மதியம் 12 மணியிலிருந்து 1:30 மணிக்குள் தான் இந்த பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் தண்ணீரில் சிறிது பச்சை கற்பூரத்தை போட்டுவிட்டு அந்த தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும். பிறகு யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசாமல் எந்த சைகையும் செய்யாமல் நேரடியாக பூஜையறைக்கு வந்து ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் திருச்செந்தூர் முருகன் துணை என்று மஞ்சளாலோ அல்லது குங்குமத்தாலோ எழுதிக் கொள்ளுங்கள். அதில் 11 ரூபாயை வைத்து மூட்டையாக கட்டி முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று வழிபாடு செய்து கொள்ளுங்கள். இப்படி வழிபாடு செய்து வைக்கக்கூடிய அந்த முடிச்சானது முருகப்பெருமானின் பாதத்திலேயே இருக்கட்டும்.

தினமும் வீட்டில் வழிபாடு செய்யும்பொழுது அந்த முடிச்சிற்கும் ஊதுபத்தி, சாம்பிராணி தூபம் காட்டுங்கள். எப்பொழுது உங்களுடைய பிரச்சனைகள் நிறைவேறுகிறதோ அப்பொழுது அந்த துணியை அப்படியே எடுத்துக் கொண்டு போய் முருகப்பெருமானின் உண்டியலில் போட்டு விட வேண்டும். இந்த பரிகாரத்தில் குளிகை நேரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. மேலும் பச்சை கற்பூரத்தை போட்டு நாம் குடிப்பதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே கடன் தீர்க்கும் ஹனுமன் மந்திரம்

பச்சை கற்பூரத்தால் பல நன்மைகள் ஏற்படுகிறது, தெய்வீக சக்தி பெருகிறது என்பது பலரும் அறிந்திருந்தாலும் இந்த முறையில் பச்சைக் கற்பூரத்தை பயன்படுத்தி குளித்து குளிகை நேரத்தில் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்தால் நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -