மனிதர்களுக்கு வரக்கூடிய கெட்ட நேரத்தில், கிரகங்களால் உருவாக்கப்படக்கூடிய கெடுதல் தான், கடன். கிரகங்களின் விளையாட்டு தான் நம்மை கடன் வாங்க செய்கிறது. அப்படி கடனை கொடுக்கக் கூடிய கிரகங்கள், நம்மிடம் நெருங்காமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. அனுமனை வழிபாடு செய்வதுதான் ஒரே வழி.
ஹனுமன் பாதத்தை பிடித்துக்கொண்டால், ராகு கேது நம்மை எதுவும் செய்ய மாட்டார்கள். சனி பகவானால் நமக்கு எந்த பிரச்சனையும் வராது. பொதுவாக கடனை கொடுக்கக்கூடிய கிரகங்கள் என்றால் இவர்கள்தான். இவர்களை சரிகட்டி விட்டாலே போதும் நம் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம்.
செவ்வாய்க்கிழமை தோறும் வீட்டில் இருந்தபடியே இந்த மந்திரத்தை சொல்லுபவர்கள். வாழ்க்கையில் ஒரு ரூபாய் கூட கடன் மிஞ்சாது. இது முற்றிலும் உண்மை. செவ்வாய்க்கிழமை காலையோ மாலையோ பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். மனதிற்குள் அனுமனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளவும்.
எனக்கு கடன் பிரச்சனை வரக்கூடாது, கடன் என்னை நெருங்கக் கூடாது, கடன் வாங்கக் கூடிய வாய்ப்பை இந்த பிரபஞ்சம் எனக்கு கொடுக்கக் கூடாது, என்று மனதார வேண்டிக் கொண்டு, ஜெய் ஸ்ரீ ராம் என்ற சொல்லிவிட்டு, பின் சொல்லக்கூடிய மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.
கடன் வராமல் தடுக்க சொல்ல வேண்டிய மந்திரம்
ஓம் ஹம் ஹனுமதே நமஹ !
இந்த மந்திரத்தை சொல்ல சொல்ல நீங்கள் கடன் வாங்குவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்வீர்கள். அதோடு மட்டுமல்லாமல் வாங்கிய கடனை எல்லாம் திருப்பி அடைக்க உங்களுக்கு நல்ல நல்ல வழிகள் கிடைக்கும். அச்சச்சோ கடனை வாங்கி விட்டோமே என்று சொல்லி பயந்து போய் ஒரு மூலையில் முடங்கி போக மாட்டீர்கள்.
யாரிடம் கைநீட்டி கடன் வாங்கினீங்களோ அவங்களை சமாளிக்க கூடிய தெம்பையும் தைரியத்தையும் கூட ஹனுமன் உங்களுக்கு கொடுத்து விடுவார். அவ்வளவு சக்தி ஹனுமான் வழிபாட்டிற்கு உண்டு. அதிலும் செவ்வாய்க்கிழமை ஹனுமனை நினைத்து இந்த மந்திரத்தை சொன்னால் பல்லாயிரம் மடங்கு பலம் உங்களுக்குள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் ஆண்கள் யார் வேண்டும் என்றாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். குறிப்பாக யார் பேரில் கடன் இருக்கிறது. அவர்கள் வாயால் இந்த மந்திரத்தை சொல்லி அனுமனை வழிபட்டால் நிச்சயம் சீக்கிரம் பலன் கிடைக்கும். உங்களால் முடிந்தால் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஹனுமன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை அன்று சென்று வெற்றிலை மாலை போட்டு, அந்த ஹனுமன் கோவிலிலேயே அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள்.
பிறகு யார் சொன்னாலும் இந்த வழிபாட்டை நிறுத்தவே மாட்டீர்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு உங்களுக்கு நன்மைகள் நடக்கும். அந்த அளவுக்கு கடன் பிரச்சனையிலிருந்து சீக்கிரமாக நீங்கள் வெளிவந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ தொடங்கி விடுவீர்கள். எல்லா பரிகாரத்திற்கும் நம்பிக்கை தான் முக்கியம். எவ்வளவோ பரிகாரங்கள் சொல்கின்றோம்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர ஆடி மாத கடைசி செவ்வாய் பரிகாரம்
அதில் நமக்கு எது உகந்ததாக இருக்கும் நமக்கு எது பலன் தரும் என்று உங்களுடைய உள் மனது சொல்லும். அந்த பரிகாரத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துச் செய்யுங்கள். நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி அடைவீர்கள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.