- Advertisement -
- Advertisement -

பிரதோஷ வழிபாடு என்றாலே நம்முடைய பாவங்களையும் கர்மாக்களையும் தொலைப்பதற்கான ஒரு வழி என்றே சொல்லலாம் ஆகையால் தான் இந்த வழிபாட்டிற்கு பிரதோஷ வழிபாடு பிரதோஷம் என்றால் பிற வகையான தோஷங்கள் என்று பொருள். ஆகையால் தான் பெரும்பாலானோர் இந்த பிரதோஷ நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டு அவர் அருளை பெறுவார்கள்.

அப்படியான இந்த பிரதோஷ நாளில் பக்தர்கள் தங்களுடைய சகல விதமான தோஷங்களையும் நீக்கிக் கொள்ள எளிமையான முறையில் சிவபெருமானை வணங்கலாம் என்று சொல்லப்படுகிறது. அது எப்படி என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தோஷம் நீங்க பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் அன்றைய நாளில் உண்ணாமல் விரதம் இருப்பது நல்லது. இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சூழ்நிலையும் உடல்நிலையும் பலருக்கும் இது ஒத்து வருவதில்லை. அப்படியானவர்கள் எளிமையான உணவை உண்டு விரதத்தை மேற் கொள்ளலாம். அன்றைய தினத்தில் கட்டாயமாக அசைவத்தை தவிர்க்க வேண்டும்.

அதே போல் அன்றைய நாளில் பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தில் சென்று சிவ தரிசனம் செய்வது கோடி புண்ணியத்தை சம்பாதித்ததற்கு சமம். இந்தப் பதிவில் சொல்லப்பட்டுள்ள வழிபாட்டு முறையும் பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தில் தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் ஒவ்வொரு மனிதர்களும் இந்த கர்மா, தோஷம், கண் திருஷ்டி, கிரக கோளாறு போன்றவற்றால் அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம் .அவற்றை தீர்க்க எத்தனையோ வழிமுறைகளை நாம் தேடி அலைகின்றோம். அப்படி இருக்கையில் இது போன்றதொரு எளிமையான வழிபாட்டு முறை இருப்பின் அதை செய்ய நாம் கொஞ்சம் நம்முடைய நேரத்தை இறை வழிபாட்டிற்கு ஒதுக்குவதில் தவறில்லை.

இந்த வழிபாடு செய்ய பிரதோஷ நேரத்தில் சிவாலயத்திற்கு செல்லுங்கள் பிரதோஷம் நேரம் ஆனது மாலை 4:30 மணியிலிருந்து 6:30 வரையிலான காலம். இந்த நேரத்தில் சிவாலயத்திற்குள் செல்லும் போது சிகப்பு நிறத்திலான மலரை உங்கள் கண்களில் வைத்துக் கொள்ளுங்கள். பூக்களை கவரில் வைத்து எடுத்து செல்லக் கூடாது.

- Advertisement -

சிவாலயத்தின் உள்ளே சென்றதும் முதலில் நந்தி தேவரையும், சிவபெருமானையும் வணங்கிய பிறகு கோவிலை வலம் இருந்து இடமாக ஒன்பது முறை செல்ல சுற்ற வேண்டும். அப்படி சுற்றும் வேளையில் சிவசிவ என்ற இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே சுற்ற வேண்டும்.

இதை சத்தமாக சொன்னாலும் சரி அல்லது மனதிற்குள் சொல்லிக் கொண்டாலும் சரி இந்த மந்திரத்தை சொல்லி சுற்றும் 9 சுற்று முடியும் வரை யாரிடமும் பேசக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பது முறை கோவிலை வலம் வந்த பிறகு கையில் இருக்கும் மலரை சிவபெருமான் பாதத்தில் வைத்து வணங்குங்கள்.

இதையும் படிக்கலாமே: வேலை கிடைக்க தீப வழிபாடு

பிரதோஷ நாளில் இந்த முறையில் சிவபெருமானை வணங்கும் போது நம்முடைய தோஷங்கள் கண் திருஷ்டிகள் தீய சக்திகள் என நம்மை பாடாயப்படுத்தும் அனைத்து வித தோஷங்களும் தொல்லைகளும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த முறையில் சிவபெருமானை வலம் வந்து பலன் பெறுங்கள்.

- Advertisement -