- Advertisement -

ஆடி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு ஏற்ற வேண்டிய சிறப்பு விளக்கு

- Advertisement -

இப்போது ஆடி மாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய், அம்பாள் வழிபாடு எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல ஆடி ஞாயிற்றுக்கிழமைகளிலும் அம்பாளை வழிபாடு செய்ய வேண்டும். குடும்பத்தில் தீராத கஷ்டங்கள் இருக்கிறது. திருமண தடை, கண் திருஷ்டி பிரச்சனை, கணவருக்கு தவறான பழக்கவழக்கங்கள் இருக்கிறது.

பிள்ளைகள் சொல் பேச்சைக் கேட்காமல், தவறான பாதையில் செல்கிறார்கள், குடும்பத்திற்கு யாரோ சூனியம் வைத்தது போல இருக்கிறது. வாழ்க்கையே வேதனையாக இருக்கிறது என்று கஷ்டப்படும் பெண்கள் இன்று தினம் இந்த வழிபாட்டை செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குடும்பத்தை தொடரும் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை பிரத்தியங்கிரா தேவி வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் அம்பாள் வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. இந்த வழிபாட்டை நீங்கள் பிரத்தியங்கிரா தேவி சன்னிதானத்தில் செய்ய வேண்டும். உங்க வீட்டு பக்கத்தில் பிரத்யங்கரா தேவி சன்னிதானம் அல்லது பிரத்யங்கிரா தேவி கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு சென்று வழிபாட்டை செய்யுங்கள். இரண்டு மண் அகல் விளக்குகளில், கடுகு எண்ணெய் ஊற்றி, சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றி அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து உங்கள் குடும்ப கஷ்டத்தை அம்பாளின் பாதத்தில் இறக்கி வைக்கவும்.

மனம் உருகி அம்பாளை பார்த்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். சிவப்பு நிற ரவிக்கை துணி, சிவப்பு நிற புடவை, சிவப்பு நிற குங்குமம், சிவப்பு நிற வளையல் இதை அம்பாளுக்கு வாங்கிக் கொடுப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. முடியாதவர்கள் விளக்கு மட்டும் ஏற்றி வைத்துவிட்டு பிரார்த்தனையை வைக்கவும். ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரத்தியங்கரா கோவிலில் மேல் சொன்ன கடுகு எண்ணெய் தீபத்தை ஏற்றி உங்கள் குடும்ப கஷ்டத்தை அம்பாளின் பாதத்தில் இறக்கி வைத்து விட்டால் போதும். அந்த துன்பங்கள் எல்லாம் கூடிய விரைவில் தீரும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை ராகு கால நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுடைய வீட்டு அருகில் பிரத்தியங்கிரா தேவி சன்னிதானம் இல்லை என்றால் துர்க்கை அம்மன் கோவிலில் இந்த விளக்கை ஏற்றலாம். துர்க்கை அம்மன் கோவில் பெரும்பாலும் எல்லோர் வீட்டு பக்கத்திலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. துர்க்கை அம்மன் கோவிலிலும் கடுகு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.

ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் இந்த வழிபாட்டை வீட்டில் மேற்கொள்ள வேண்டாம். கோவிலில் இந்த வழிபாட்டை செய்யும் போது தான் நிச்சயமாக உங்களுக்கு உண்டான பலன் முழுமையாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய தினம் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த வழிபாட்டை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க, பிரச்சனைகள் தீர, செல்வம் சேர நரசிம்மர் வழிபாடு

தவறவிட்டவர்கள், அடுத்தடுத்து வரக்கூடிய ஆடி ஞாயிற்றுக்கிழமையில் ஒரு முறை இந்த விளக்கை ஏற்றி அம்பாளை மனதார நம்பிக்கையுடன் வழிபாடு செய்தால் நிச்சயம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கு விடிவு காலம் பிறக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த வழிபாட்டை பின்பற்றுங்கள் நல்லது நடக்கும் என்ற தகவல் உடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by