- Advertisement -
- Advertisement -

பணக்காரனாக இருப்பவன் பணம் காசை செலவு செய்து புண்ணியங்களை சேர்த்துக் கொள்கிறான். நம்மிடமும் காசு இருந்தால் நாலு பேருக்கு உதவி செய்ய மாட்டோமா? நமக்கே இல்லை என்றால் எப்படி புண்ணியத்தை சேர்ப்பது? என்று புலம்புவோம். பணம் இருந்தால் தான் புண்ணியம் கிடைக்கும் என்பதில்லை! பரம ஏழையாக நாம் இருந்தாலும் இந்த பத்து விஷயங்களை கடைபிடிக்கும் பொழுது, புண்ணியவான் ஆகலாம் என்று காஞ்சி மகா பெரியவர் கூறியுள்ளார். அவர் கூறியன யாவை? என்பதை தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் அறிவோம் வாருங்கள்.

புண்ணியம் 1:
காலையில் நீங்கள் எழுந்திருக்கும் பொழுதே சாமி கும்பிட வேண்டும். இந்த நாள் நல்ல இனிமையான நாளாக அமைய வேண்டும் என்று மனதார கடவுளை பிரார்த்தனை செய்து விட்டு எழ வேண்டும்.

- Advertisement -

புண்ணியம் 2:
எந்த வேலை செய்தாலும், எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் முதலில் கடவுளை தொழுதுவிட்டு முயற்சி செய்ய வேண்டும்.

புண்ணியம் 3:
தினமும் ஒரு நிமிடம் பசுக்கள், புண்ணிய நதிகள், உங்களுக்கு பிடித்த நல்லோர்கள் ஆகியோரை மனதில் நிறுத்தி வணங்க வேண்டும்.

- Advertisement -

புண்ணியம் 4:
அவ்வையார் கூற்றுப்படி வாரத்தில் ஒரு நாள் ஆவது ஆலயம் சென்று தொழ வேண்டும். “ஆலயம் தொழுவது, சாலவும் நன்று” என்பதால் கோவிலுக்கு செல்ல மறக்கக்கூடாது.

புண்ணியம் 5:
அக்கம் பக்கம் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாமல் மனதார அவர்களையும் அன்புடன் நேசிக்க வேண்டும்.

- Advertisement -

புண்ணியம் 6:
நீங்கள் சாப்பிடுவதற்கு முன்பு ஏதேனும் விலங்குகளுக்கு மனதார உணவு அளிக்க வேண்டும். காக்கைக்கு சோறு வைத்தபின் உணவு உண்ண வேண்டும்.

புண்ணியம் 7:
ஏதோ ஒன்றை எதிர்பார்த்து செய்வது தானம், எதையுமே எதிர்பார்க்காமல் செய்வது தர்மம் ஆகவே தினமும் முடிந்த அளவிற்கு சிறு சிறு விஷயங்களில் ஆவது நம்மால் இயன்ற தர்மங்களை செய்ய வேண்டும்.

புண்ணியம் 8:
“நீறில்லா நெற்றி பாழ்” என்பார்கள். அவரவர்களின் குல வழக்கப்படி நெற்றியில் குங்குமம், விபூதி, திருமண், சந்தனம், மஞ்சள் என்று என்ன வழக்கமோ அதை மறக்காமல் இட்டுக் கொள்ள வேண்டும். இதனால் உங்களை பார்ப்பவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

புண்ணியம் 9:
இரவு தூங்க செல்லும் பொழுது அன்றைய நாள் நாம் செய்த நல்லது மற்றும் கெட்டது எதுவாகினும், அதை நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும். அப்போது தான் நாம் இனி எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்க கூடாது? என்பதை நாம் உணர முடியும்.

புண்ணியம் 10:
தூங்கும் பொழுது தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து இறை சிந்தனையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு பிடித்தமான இஷ்ட தெய்வத்தின் நாமத்தை உச்சரித்து விட்டு நிம்மதியாக தூங்க செல்ல வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
கண் திருஷ்டி விலக வெள்ளிக்கிழமை பரிகாரம்

இந்த பத்து விஷயங்களை கடைப்பிடித்தாலே பெறாத புண்ணியங்களும் நாம் பெறக் கூடும். தினமும் இதை நாம் கடைப்பிடிப்பதால் பெரிதாக புண்ணியத்தை சேர்க்க சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை! இந்த பத்து விஷயங்களும் புண்ணியங்களில் அடக்கம் தான், எனவே எதுவும் செய்ய முடியவில்லை என்று புலம்பாமல் இப்படி வாழ்ந்து பாருங்கள் உங்கள் வாழ்க்கைக்கு நல்ல அர்த்தமும், முக்தியும் கிடைக்கும்.

- Advertisement -