- Advertisement -

புரட்டாசி மாதத்தில் மறந்தும் கூட இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். உங்களின் குடும்பத்திற்கு நீங்காத பாவம் வந்து சேரும்.

- Advertisement -

புரட்டாசி என்றாலே வழிபாட்டிற்குரிய ஒரு மாதம் தான். இந்த மாதத்தில் தான் பெருமாளுக்கு தளிகையிட்டு வழிபடுவோம். அது மட்டும் இன்றி முன்னோர்களுக்காக நாம் திதி கொடுக்கும் மகாளய பட்ச நாட்கள் வரும். கல்வி செல்வம் என அனைத்துக்கும் உகந்த தெய்வங்களை எல்லாம் நினைத்து வீட்டில் கொலு வைத்து வணங்குவோம். ஆக இந்த மாதம் முழுவதுமே நாம் தெய்வ வழிபாடுகளையும், நம் பித்ரு கடமைகளையும் செய்ய வேண்டிய ஒரு மாதம். இது போன்ற தெய்வ காரியங்கள் தடை பட கூடாது என்பதற்காகவே சுப நிகழ்ச்சிகள் கூட இந்த மாதங்களில் நடத்தக்கூடாது என்று நம் முன்னோர்கள் நமக்கு கூறியிருக்கிறார்கள். ஆனால் இதை எல்லாம் மீறி இந்த மாதத்தில் நாம் செய்யக்கூடாத மிகப் பெரிய ஒரு விஷயம் இருக்கிறது அது என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கான பதிவுதான் இது.

இந்த மாதத்தில் நாம் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. இது தான் இந்த மாதத்தில் நாம் கட்டாயமாக கடைப்பிடிக்க கூடிய ஒரு விஷயம். என்ன இப்படி ஒரு விஷயமா? என்று ஆச்சரியமாகவும், அவசரத்தில் யாராவது வந்து கேட்கும் போது அதை எப்படி தராமல் இருக்க முடியும் என்று யோசிக்கவும் செய்கிறீர்களா? உண்மை சில நேரங்களில் இப்படி கொஞ்சம் கசப்பாகவும் இருக்கத்தான் செய்யும். இந்த மாதத்தில் நாம் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது அதே சமயத்தில் வாங்கவும் கூடாது. இது தான் உண்மை. அதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பணம் கொடுத்து வாங்குவதே ஒரு சிலர் தொழிலாக செய்து கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்கு பொருந்தாது. நாம் உறவினர், நண்பர்கள, அக்கம் பக்கத்தினர் இவர்களுடன் திடீர் செலவுக்கு கைமாற்றாக சிறிய தொகை கைமாற்றாக வாங்குவோம் அது போன்று சூழ்நிலைகள் தரக்கூடாது என்பதை தான் கருத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக இந்த மாதத்தில் கடன் வாங்குபவர்கள் எதற்காக வாங்குகிறார்கள் என்று நமக்குத் தெரியாது. இந்த மாதம் முழுவதுமே வழிப்பாட்டுக்குரிய மாதம் என்பதால் அவர்கள் தெய்வ வழிபாடுகளுக்கோ, இல்லை முன்னோர் வழிபாட்டிற்கோ தங்களிடம் பணம் இல்லாத சமயத்தில் உங்களிடம் இப்படி கடனாக வாங்கும் பணத்தில் அவர்கள் வழிபாடு செய்தால் அதற்க்கான பாவம் உங்களை வந்து சேரும். கடன் வாங்குபவருக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை.

- Advertisement -

உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அல்லது உறவினர்கள் நண்பர்கள் இப்படி யாராவது உங்களிடம் கடன் கேட்டால் இல்லை என்று உங்களால் கூறவே முடியாது. அந்த சமயத்தில் நீங்கள் கொடுக்கும் அந்த தொகையை தானமாக கொடுத்து விடுங்கள். இந்த மாதத்தில் நீங்கள் யாருக்காவது ஒரு சிறு தொகையை உங்களிடம் கடனாக கேட்க நீங்கள் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானால், அந்த பணத்தை அவர்களுக்கு தானமாக கொடுத்து விடுங்கள். அவர்கள் அதை எதற்கு வேண்டுமானாலும் செலவழித்து கொள்ளட்டும் ஆனால் நீங்கள் திருப்பி தர வேண்டாம் என்று சொல்லியே கொடுத்து விடுங்கள். இதன் மூலம் நீங்கள் பெரும் பாவ செயலில் இருந்து தப்பித்து விடுவீர்கள்.

தெய்வத்திற்கு நீங்கள் கடன் வாங்கி செய்ய வேண்டிய எந்த அவசியமில்லை. இப்படி கடன் வாங்கி செய்யும் எந்த ஒரு பூஜையையும் கடவுள் ஏற்றுக் கொள்வதும் இல்லை. உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து நீங்கள் தெய்வத்தை வழிபடலாம். வழிபாடு முறை என்பது நீண்டு கொண்டே இருக்கும். அனைத்தையும் அனைவராலும் செய்ய முடியாது என்பது படைத்தவனுக்கு நன்றாக தெரியும்.

இதையும் படிக்கலாமே: இந்த 1 பொருளை தானம் செய்வதன் மூலம் நீங்கள் மனதில் நினைத்த ஆசைகள், வேண்டுதல்கள் அப்படியே நிறைவேறும் என்கிறது சாஸ்திரங்கள்! அந்த ஒரு பொருள் என்ன உங்களுக்கு தெரியுமா?

ஆகையால் உங்களால் என்ன முடியுமோ அதை உங்கள் மனதில் உண்மையான பக்தியோடும், அன்போடும் செய்தாலே கடவுளின் அருள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் கடன் வாங்கி செய்வதால் உங்களுக்கு பலன் இல்லாமல் போவதுடன், உங்களின் தேவைக்கு உதவி செய்தவருக்கு பாவத்தை சேர்க்க வேண்டாம்.

- Advertisement -